For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கவாஸ்கர் கேட்ட கேள்வி..? பதறிய ஸ்ரேயாஸ் ஐயர்..!!

இந்தியா, நியூசிலாந்துக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி கான்பூரில் நடைபெற்று வருகிறது

இதில் அறிமுக வீரராக களமிறங்கிய ஸ்ரோஸ் ஐயர் சதம் விளாசினார்.இதன் மூலம் முதல் போட்டியிலேயே சதம் விளாசிய 16வது இந்திய வீரர் என்ற பெருமையை ஸ்ரேயாஸ் ஐயர் பெற்றார்.போட்டி தொடங்குவதற்கு முன் ஸ்ரேயாஸ் ஐயருக்கு இந்திய அணியின் தொப்பியை கவாஸ்கர் வழங்கி சில அறிவுரைகளை வழங்கினார்.

இந்த நிலையில், 2வது நாள் ஆட்டம் முடிந்ததும் ஸ்ரேயாஸ் ஐயரிடம் வர்ணணையாளர்களான கவாஸ்கர், முரளி கார்த்திக் ஆகியோர் உரையாடினர். அப்போது கவாஸ்கர் என்ன அறிவுரையை உங்களிடம் கூறினார் என முரளி கார்த்திக் கேட்டார். அதற்கு இதற்கு முன் நடந்த விஷயங்களை பற்றி கவலைப்படாதே, ஒவ்வொரு பந்தையும் கவனித்து விளையாடு என்று கவாஸ்கர் கூறியதாகவும், அதனை தாம் கடைபிடித்ததாகவும் ஸ்ரேயாஸ் ஐயர் கூறினார்.

Banter between Gavaskar and Shreyas Iyer

அப்போது, ஸ்ரேயாஸ் ஐயர் இந்திய அணி தொப்பியை அணியாமல், வெள்ளை நிற தொப்பியை அணிந்து இருந்தார். இதனை கவனித்த கவாஸ்கர், நான் உனக்கு கொடுத்த தொப்பி எங்கே, அதற்கு பதில் சொல் என்று கேள்வி கேட்டார். இதனை சற்றும் எதிர்பாராத ஸ்ரேயாஸ் ஐயர் பதறினார். அப்போது வெயில் அதிகமாக இருந்ததால் தான் இந்த தொப்பியை அணிந்தேன் என்று பதில் அளித்தார்.

“சொன்னதை செய்த தோனி”.. சிஎஸ்கே தக்கவைக்கும் 4 வீரர்களின் விவரம் இதோ.. கைவிடப்பட்ட சீனியர் வீரர்! “சொன்னதை செய்த தோனி”.. சிஎஸ்கே தக்கவைக்கும் 4 வீரர்களின் விவரம் இதோ.. கைவிடப்பட்ட சீனியர் வீரர்!

ஆடுகளம் குறித்து எழுப்பபட்ட கேள்விக்கு, தற்போது தான் பிட்சில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் நாளை சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக செயல்படும் என நம்புகிறேன். இதனை பயன்படுத்தி மூன்று, நான்கு விக்கெட்டுகளை விரைவாக எடுத்தால், அது இந்திய அணிக்கு சாதகமாக அமையும் என்று தெரிவித்தார். இன்னும் 3 நாட்கள் எஞ்சியுள்ளதால், இந்தப் போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

Story first published: Friday, November 26, 2021, 19:04 [IST]
Other articles published on Nov 26, 2021
English summary
Banter between Gavaskar and Shreyas Iyer in Kandur test after day where Newzealand dominated
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X