For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

திணேஷ் கார்த்திக்கைத் தவிர அனைத்து கிரிக்கெட் வீரர்களையும் நான் வெறுக்கிறேன்.. தீபிகா அதிரடி!

மும்பை: நான் கட்டிக் கொள்ளப் போகும் திணேஷ் கார்த்திக்கைத் தவிர அனைத்து கிரிக்கெட் வீரர்களையும் நான் வெறுக்கிறேன். கிரிக்கெட் அனைத்து விளையாட்டுக்களையும் அழித்து விட்டது. மற்ற விளையாட்டுக்களின் பெருமைகளையும், புகழையும் கிரிக்கெட் விளையாட்டு காலி செய்து விட்டது என்று கோபமாக கூறியுள்ளார் ஸ்குவாஷ் சாம்பியன் தீபிகா பல்லிகல்.

தீபிகா மட்டும் இல்லை, பேட்மிண்டன் வீராங்கனைகளான ஜுவாலா கட்டா, பி.வி. சிந்து ஆகியோரும் கூட கிரிக்கெட்டால் பிற விளையாட்டுக்கள் நமது நாட்டில் கண்டு கொள்ளப்படாமல் உள்ளதாக வேதனை தெரிவித்துள்ளனர்.

இந்தியா டுடே நடத்திய மகளிர் மாநாடு மற்றும் விருது விழாவின்போது இந்த மூன்று பேரும் தங்களது மனக் குமுறலைக் கொட்டினர்.

தீபிகாவின் குமுறல்....

தீபிகாவின் குமுறல்....

விளையாட்டில் பெண்களுக்குப் பாரபட்சம்

விளையாட்டில் பெண்களுக்குப் பாரபட்சம் இழைக்கப்படுவது உண்மைதான்.

என் தாயாருக்கு நேர்ந்த அவமரியாதை

என் தாயாருக்கு நேர்ந்த அவமரியாதை

எனது தாயார் இந்திய மகளிர் அணி கிரிக்கெட் கேப்டனாக இருந்தவர். அவர் மேற்கு இந்தியத் தீவுகளுக்கு அணியுடன் பயணித்தபோது என்ன நடந்தது தெரியுமா... 15 பேர் கொண்ட அணியினருக்கு ஒரே அறைதான் கொடுத்துள்ளனர். அனைவரையும் ஒரே அறையில் தங்க வைத்துள்ளனர்.

யாரையுமே எனக்குப் பிடிக்கலை

யாரையுமே எனக்குப் பிடிக்கலை

திணேஷ் கார்த்திக்கைத் தவிர அனைத்து கிரிக்கெட் வீரர்களையும் நான் வெறுக்கிறேன்.

புகழைத் திருடுகிறார்கள்

புகழைத் திருடுகிறார்கள்

மற்ற விளையாட்டுக்களின் புகழையும், பெருமைகளையும், கெளரவத்தையும் கிரிக்கெட் வீரர்கள் திருடி விடுகிறார்கள்.

டிஏ- டிஏ இன்னும் வரவே இல்லை

டிஏ- டிஏ இன்னும் வரவே இல்லை

காமன்வெல்த் போட்டியில் கலந்து கொண்டதற்காக எங்களுக்குத் தரப்பட வேண்டிய போக்குவரத்து படி மற்றும் டிஏ படியில் பாதியை இன்னும் இந்திய ஒலிம்பிக் சங்கம் எனக்குத் தரவில்லை.

பயிற்சிக்கு இடமில்லை

பயிற்சிக்கு இடமில்லை

இந்தியாவில் ஸ்குவாஷ் விளையாட்டுக்கான சரியான பயிற்சி இடம் இல்லை. இதற்காக நான் எகிப்து வரை போக நேரிட்டது.

14 வயதில் கஷ்டப்பட்டேன்

14 வயதில் கஷ்டப்பட்டேன்

14 வயதில் நான் எகிப்துக்குப் போய் தனியாக தங்க நேரிட்டது. அதை நான் வெறுத்தேன். ஆனால் நான் என்னை நிரூபிக்க வெறியோடு இருந்தேன். தீவிரமாக பயிற்சி எடுத்தேன். அதுதான் என்னை உறுதியாக்கியது. வலிமைப்படுத்தியது. இன்றைய சாதனைகளுக்கு அதுதான் முக்கிய அஸ்திவாரமாக அமைந்தது.

நாட்டுக்காக விளையாடுவதே பெருமை

நாட்டுக்காக விளையாடுவதே பெருமை

நாட்டுக்காக நான் விளையாடுகிறேன். அதை விட எனக்கு வேறு பெருமை இல்லை, தேவையும் இல்லை. அந்த உணர்வே போதுமானது என்றார் தீபிகா.

Story first published: Sunday, August 10, 2014, 13:51 [IST]
Other articles published on Aug 10, 2014
English summary
Jwala Gutta, PV Sindhu and Dipika PallikalIndia's badminton stars Jwala Gutta and P.V. Sindhu and squash player Dipika Pallikal say they expect more appreciation and have felt discriminated against compared to other sports such as cricket. Deepika, a squash champion, said there was discrimination against women in sports. "My mother was captain of Indian cricket team. When they toured West Indies,? 15 of them were kept in one room." "Except Dinesh Karthik I hate all cricketers because they steal all the limelight and endorsements," she said.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X