For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

2 நிமிஷம் ஆடுனா, குறைஞ்சு போயிருக்க மாட்டாரு -மும்பை தவறை சுட்டிக்காட்டிய பீட்டர்சன் & கவாஸ்கர்

துபாய் : மும்பை இந்தியன்ஸ் மற்றும் ஆர்சிபி அணிகளுக்கு இடையில் கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற போட்டியில் சூப்பர் ஓவர் நடத்தப்பட்டது.

அந்த போட்டியில் ஆர்சிபி அணி சிறப்பாக விளையாடி சூப்பர் ஓவரில் மும்பை இந்தியன்ஸ் அணியை வெற்றி கொண்டது.

இந்த சூப்பர் ஓவரில் மும்பை இந்தியன்ஸ் அணி தவறான முடிவை எடுத்ததாலேயே தோல்வி அடைந்ததாக வர்ணனையாளர்கள் கெவின் பீட்டர்சன் மற்றும் சுனில் கவாஸ்கர் ஆகியோர் விளாசினர்.

நீங்க போக கூடாது.. ஐபிஎல்லில் விளையாட அனுமதிக்க முடியாது.. முக்கிய வீரருக்கு கடைசி நேர தடை.. பின்னணிநீங்க போக கூடாது.. ஐபிஎல்லில் விளையாட அனுமதிக்க முடியாது.. முக்கிய வீரருக்கு கடைசி நேர தடை.. பின்னணி

சூப்பர் ஓவரில் சொதப்பல்

சூப்பர் ஓவரில் சொதப்பல்

கடந்த திங்கட்கிழமை ஆர்சிபி மற்றும் மும்பை இந்தியன்ஸ் இடையிலான போட்டி நடைபெற்றது. இந்த போட்டி டிரா ஆனதால் சூப்பர் ஓவர் நிர்ணயிக்கப்பட்டது. இதில் மும்பை இந்தியன்ஸ் அணியின் தவறான முடிவே தோல்விக்கு காரணம் என்று வர்ணனையாளர்கள் கெவின் பீட்டர்சன் மற்றும் சுனில் கவாஸ்கர் ஆகியோர் அதிருப்தி தெரிவித்தனர்.

சூப்பர் ஓவரில் இடம்பெறாத கிஷான்

சூப்பர் ஓவரில் இடம்பெறாத கிஷான்

முதலில் ஆடிய ஆர்சிபி 201 ரன்களை குவித்த நிலையில், அடுத்ததாக விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணியின் இஷான் கிஷான் மற்றும் கீரன் பொல்லார்டு ஆகியோர் 4 ஓவர்களில் 79 ரன்களை குவித்து, போட்டியை டிரா செய்தனர். இதையடுத்து போடப்பட்ட சூப்பர் ஓவரில் கிஷான் இடம்பெறவில்லை.

குறைந்து போயிருக்க மாட்டார்

குறைந்து போயிருக்க மாட்டார்

அவர் இறுதி ஓவர்களில் விளையாடி சோர்வானதால் சூப்பர் ஓவரில் இடம்பெறவில்லை என்று கேப்டன் ரோகித் சர்மா காரணம் தெரிவித்தாலும், அந்த இறுதி 2 நிமிடங்களில் விளையாடுவதால் அவர் ஒன்றும் குறைந்து போயிருக்க மாட்டார் என்று வர்ணனையாளர்கள் கெவின் பீட்டர்சன் மற்றும் சுனில் கவாஸ்கர் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

தவறான முடிவு

தவறான முடிவு

போட்டி ஒருவகையில் சிறப்பான பார்ட்னர்ஷிப்பில் சென்று கொண்டிருந்த நிலையில், அதை உடைத்து கிஷானுக்கு பதிலாக ஹர்திக்கை களமிறக்கியது நல்ல முடிவு அல்ல என்றும் அவர்கள் தெரிவித்தனர். கடந்த 2வது போட்டியில் டெல்லி கேபிடல்சுக்கு எதிரான போட்டியில் இதேபோல மயங்க் அகர்வாலுக்கு பதிலாக பூரனை இறக்கிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் தவறான முடிவையும் அவர்கள் சுட்டிக் காட்டினர்.

Story first published: Wednesday, September 30, 2020, 17:58 [IST]
Other articles published on Sep 30, 2020
English summary
Ishan Kishan would still want to go out and bat because form is such a fickle thing -Gavaskar
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X