For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

விடக்கூடாது.. ரூல்சை மீறும் பேட்ஸ்மென்களின் 7 ரன்களை கழிக்க வேண்டும்…. சச்சின் சொன்ன சூப்பர் தண்டனை

மும்பை:விதிகளை மீறும் பேட்ஸ்மேன்களுக்கு அவர்கள் அடித்த ரன்களில் 7 ரன்களை கழிக்க வேண்டும் அல்லது எதிரணிக்கு 7 ரன்கள் வழங்க வேண்டும் என்று சச்சின் டெண்டுல்கர் அதிரடியாக தெரிவித்துள்ளார்.

நடந்து முடிந்த ஐபிஎல் 12வது சீசனிலும் நடுவர்கள் பலர் வழங்கிய முடிவுகள் தவறாகின. பெரும் சர்ச்சைகளும் எழுந்தன. நடுவர்களின் முடிவுகளின் மீதான நம்பகத்தன்மை பற்றிய விவாதங்களும் முன் வைக்கப்பட்டன.

மும்பையில் நடைபெற்று வரும் டி20 லீக் தொடரில் அது போன்ற ஒரு சர்ச்சை வெடித்துள்ளது. சூப்பர்சோனிக்ஸ் மற்றும் ஆகாஷ் அணிகளுக்கு இடையேயான போட்டியில் 15வது ஓவரின் கடைசி பந்தில் சிங்கிள் எடுத்ததால் அடுத்த ஓவரிலும் அதே பேட்ஸ்மேன் தான் பேட்டிங் ஆட வேண்டும். மாறாக, எதிர் முனையில் இருந்த பேட்ஸ்மேன் ஆடினார்.

யாரு பாத்த வேலை இது..!! விபத்தில் ஜெயசூர்யா இறந்தார்...? சமூக ஊடகங்களில் ரவுண்டு கட்டிய புரளி யாரு பாத்த வேலை இது..!! விபத்தில் ஜெயசூர்யா இறந்தார்...? சமூக ஊடகங்களில் ரவுண்டு கட்டிய புரளி

டெட் பாலாக அறிவிப்பு

டெட் பாலாக அறிவிப்பு

இதை நடுவர்களும் கண்டுகொள்ளவில்லை. அந்த ஓவரின் முதல் பந்திலேயே விக்கெட் விழுந்தது. விக்கெட் விழுந்தபோதுதான், பேட்ஸ்மேன் மாறி பேட்டிங் ஆடியது தெரிய வந்தது. இதையடுத்து அந்த பந்து டெட் பாலாக அறிவிக்கப் பட்டது.

வெடித்தது சர்ச்சை

வெடித்தது சர்ச்சை

அதனால் பந்து வீசிய அணி கடுமையாக பாதிக்கப்பட்டது. ஏனெனில் 16வது ஓவரில் விழுந்த அந்த விக்கெட்டுதான் முதல் விக்கெட். அதுவும் டெட் பாலாக அறிவிக்கப் பட்டதால் சர்ச்சை வெடித்தது.

சச்சின் கருத்து

சச்சின் கருத்து

இந்த விவகாரம் குறித்து சச்சின் டெண்டுல்கர் கூறியிருப்பதாவது: இது மிகப்பெரிய விதிமீறல். ஒரு ஓவரின் முடிவில் சிங்கிள் ரன் எடுத்தால், அந்த ஓவரின் கடைசி பந்தை எதிர்கொண்ட பேட்ஸ்மேன் தான் அடுத்த ஓவரை துவக்க வேண்டும்.

முடிவு தவறு

முடிவு தவறு

இது அனைவருக்கும் தெரிந்த விஷயம். ஆனாலும் பேட்ஸ்மேன்கள் மாறி நின்று ஆடியுள்ளனர். அதை நடுவர்களும் கவனிக்கவில்லை. ஆனால் அந்த பந்தை டெட் பாலாக அறிவித்திருக்கக்கூடாது. 30 யார்டு வட்டத்துக்குள் நிற்க வேண்டிய எண்ணிக்கையை விட குறைவான பீல்டர்கள் உள்ளே நின்றால், அப்போது பவுலிங் அணிக்கு தண்டனையாக அதற்கு டெட்பால் கொடுக்கப்படுகிறது.

அணிக்கு பாதகம்

அணிக்கு பாதகம்

அப்படியிருக்கையில் பேட்ஸ்மேன்கள் விதிமீறினால் அவர்களுக்குத்தானே தண்டனை கொடுக்க வேண்டும்.? அதை விட்டுவிட்டு, பந்து வீசிய அணிக்கு பாதகமாக அறிவிக்கக் கூடாது.

7 ரன்கள் தர வேண்டும்

7 ரன்கள் தர வேண்டும்

இது போன்று விதிமீறும் பேட்ஸ்மேன்களுக்கு சர்வதேச போட்டிகளிலும் கூட கடும் தண்டனை விதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுமாதிரி விதிமீறும் பேட்ஸ்மேனுக்கு, அவர் அடித்த ரன்களில் இருந்து 7 ரன்களை கழிக்க வேண்டும் அல்லது எதிரணிக்கு 7 ரன்கள் வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Story first published: Monday, May 27, 2019, 19:19 [IST]
Other articles published on May 27, 2019
English summary
Batting sides should be penalised if they committed mistake says sachin.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X