For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

டி20ல் 150 ரன்கள் விளாசல்.. கெயில் தம்பியாக மேக்ஸ்வெல் மரண அடி.. ஐபிஎல்-ல் கம்பேக் உறுதி!

மெல்போர்ன்: பிக் பேஷ் கிரிக்கெட் டி20 தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இதில் மெல்போர்ன் அணியும், ஹாபர்ட் அணியும் மோதின.

டாஸ் வென்று முதலில் ஹாபர்ட் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து தொடக்க ஆட்டக்காரராக மேக்ஸ்வெல் களமிறங்கினார்.

4 சதம் விளாசியும் சி.எஸ்.கே. வீரருக்கு இடமில்லை- ஆடுகளத்தில் டிவிஸ்ட்.. பும்ரா அபாரம்4 சதம் விளாசியும் சி.எஸ்.கே. வீரருக்கு இடமில்லை- ஆடுகளத்தில் டிவிஸ்ட்.. பும்ரா அபாரம்

இது மேக்ஸ்வெலின் 100வது பி.பி.எல். போட்டியாகும். இதில் அவர் எதாவது சம்பவம் செய்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ரசிகர்களின் எதிர்பார்ப்பு வீண் போகவில்லை.

மேக்ஸ்வெல் அதிரடி

மேக்ஸ்வெல் அதிரடி

ஆம், தொடக்கம் முதலே மேக்ஸ்வெல் ருத்ரதாண்டவம் ஆட, ஹாபர்ட் அணி பந்துவீச்சாளர்கள் கதி கலங்கினர். எந்த வீரர் பந்துவீசினாலும் சிக்ஸ், பவுண்டரி என மேக்ஸ்வெல் பறக்கவிட்டார். டார்சி ஷார்ட் வீசிய ஒரே ஓவரில் மேக்ஸ்வெல் 21 ரன்கள் விளாசினார். இதே போன்று சந்தீப் வீசிய ஒரே ஓவரில் 5 பவுண்டரிகள் விளாசி 22 ரன்கள் சேர்த்தார்.

64 பந்தில் 154

64 பந்தில் 154

இதன் மூலம், மேக்ஸ்வெல் 41 பந்துகளில் சதம் விளாசினார். இது பிக் பேஸ் லீக் கிரிக்கெட் தொடரில் 2வது அதிவேக சதமாகும். ஆனால் அப்போதும் மேக்ஸ்வெல் பிந்துவீச்சாளர்களை விட்டு வைக்கவில்லை. தொடர்ந்து அதிரடி காட்டிய அவர் 64 பந்துகளில் 154 ரன்கள் விளாசினார். இதில் 22 பவுண்டரிகளும், 4 சிக்சர்களும் அடங்கும்.

மெல்போர்ன் ரன் குவிப்பு

மெல்போர்ன் ரன் குவிப்பு

இதே போன்று லக்னோ அணி 11 கோடி ரூபாய் கொடுத்துள்ள மார்கஸ் ஸ்டோனிஸ் தனது அதிரடியை காட்டினார், தன் பங்கிற்கு 31 பந்துகளை எதிர்கொண்ட அவர் 75 ரன்களை விளாசினார். இதில் 6 சிக்சர்கள் அடங்கும். இதன் மூலம் 20 ஓவர் முடிவில் மெல்போர்ன் அணி 2 விக்கெட் இழப்பிற்கு 273 ரன்கள் குவித்தது. இது பிக் பாஷ் தொடரில் அதிக ஸ்கோராகும். டி20 வரலாற்றில் 3வது அதிகபட்ச ஸ்கோராகும்.

ஹாபார்ட் தோல்வி

ஹாபார்ட் தோல்வி

இதனையடுத்து 274 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களமிறங்கிய ஹாபர்ட் அணி அதிகபட்சமாக பென் மெக்டேர்மோட் 33 பந்துகளில் 55 ரன்கள் அடித்தார். 20 ஓவர் முடிவில் ஹாபர்ட் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்கள் எடுத்து தோல்வியை தழுவியது. சாதனை படைத்த மேக்ஸ்வெலுக்கு ஆட்டநாயகன் விருது தரப்பட்டது

Story first published: Wednesday, January 19, 2022, 22:10 [IST]
Other articles published on Jan 19, 2022
English summary
BBL 2022 Melbourne star Maxwell hit 154 runs from 64 balls to put 273 runs64 பந்துகளில் 154 ரன்கள்..!! ஆஸி. வீரர் மேக்ஸ்வெல் மரண பேட்டிங்..!! BIG BASH போட்டியில் புதிய சாதனை
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X