For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சி.எஸ்.கே.வின் சாதனையை சமன் செய்த பி.பி.எல். அணி.. டி20 லீக் கிரிக்கெட்டில் புதிய கிங்.. BBL FINAL

மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவில் நடைபெறும் பி.பி.எல். எனப்படும் பிக் பேஷ் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி மெல்போர்னில் நடைபெற்றது.

இதில் பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணியும், சிட்னி சிக்சர்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற சிட்னி அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

பெர்த் அணியின் தொடக்கமே மோசமாக அமைந்தது.தொடக்க வீரர் கர்டிஸ் பீட்டர்சன் 1 ரன்னில் ஆட்டமிழ்ந்தார்.

“அவர கூப்பிடுங்க; எல்லாம் சரியாகும்” இந்திய அணி மிடில் ஆர்டர் பிரச்சினை.. தினேஷ் கார்த்திக் யோசனை! “அவர கூப்பிடுங்க; எல்லாம் சரியாகும்” இந்திய அணி மிடில் ஆர்டர் பிரச்சினை.. தினேஷ் கார்த்திக் யோசனை!

ஆரம்பமே அதிர்ச்சி

ஆரம்பமே அதிர்ச்சி

பெர்த் அணி முதல் 4 ஓவரில் 14 ரன்களை மட்டுமே எடுத்து இருந்தது.மிட்செல் மார்ஷ் 5 ரன்கள், காலின் முன்ரோ 1 ரன்னும்,ஜோஸ் இங்லிஸ் 13 ரன்களும் எடுக்க, பெர்த் அணி 25 ரன்களை எடுப்பதற்குள் 4 விக்கெட்டுகளை இழந்தது. இதனையடுத்து அணியை மீட்கும் முயற்சியில் ஆஷ்டன் டர்னர் மற்றும் எவன்ஸ் ஜோடி சேர்ந்து ஈடுபட்டது.

அதிரடி பார்ட்னர்ஷிப்

அதிரடி பார்ட்னர்ஷிப்

முதலில் பொறுமையாக விளையாடிய இந்த ஜோடி, பின்னர் அதிரடியை காட்டியது. 5வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 29 பந்துகளில் 50 ரன்கள் சேர்க்க, பெரிய ஸ்கோர் அடித்தால் தான் வெற்றி என்பதை உணர்ந்து அதிரடியை அதிகப்படுத்தியது.ஆஷ்டன் டர்னர் 35 பந்துகளில் 54 ரன்கள் சேர்க்க, சிறப்பாக விளையாடிய எவன்ஸ் 41 பந்துகளில் 76 ரன்கள் சேர்த்தார்,இதனால் பெர்த் அணி 20 ஓவர் முடிவில் 171 ரன்கள் குவித்தது

மோசமான ஆட்டம்

மோசமான ஆட்டம்

172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சிட்னி சிக்சர்ஸ் அணி களமிறங்கியது.தொடக்க வீரர் ஹைடன் கெர் 2 ரன்னில் ஆட்டமிழக்க,நிக்கோலஸ் 15 ரன்கள் மட்டுமே எடுத்து பெவிலியன் திரும்பினார்.இதனையடுத்து,களமிறங்கிய சிட்னி சிக்சர்ஸ் அணி அனைவரும் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தனர்

பெர்த் சாம்பியன்

பெர்த் சாம்பியன்

டேனியல் ஹிக்யூஸ் மட்டும் அதிகபட்சமாக 42 ரன்கள் சேர்க்க, மற்றவர்கள் யாரும் நிலைத்து நிற்கவில்லை. ஒரு உருப்பிடயான பார்ட்னர்ஷிப் கூட அமையவில்லை.இதனால் சிட்னி சிக்சர்ஸ் அணி 92 ரன்களில் சுருண்டது. இதன் மூலம் 79 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணி 4வது முறையாக பி.பி.எல். சாம்பியன் பட்டத்தை வென்றது.

Story first published: Friday, January 28, 2022, 20:58 [IST]
Other articles published on Jan 28, 2022
English summary
BBL season 9- Perth scorchers Won the 4th BBL championship சி.எஸ்.கே.வின் சாதனையை சமன் செய்த பி.பி.எல். அணி.. டி20 லீக் கிரிக்கெட்டில் புதிய கிங்.. BBL FINAL
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X