For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

பி.சி.சி.ஐ. பொதுக்குழு கூட்டத்தில் 8 முக்கிய முடிவுகள்..!! கங்குலி அதிரடி!!

கொல்கத்தா: பி.சி.சி.ஐ.யின் 90வது ஆண்டு பொதுக்குழு கூட்டம், தலைவர் கங்குலி தலைமையில் கொல்கத்தாவில் இன்று நடைபெற்றது.

இதில் அனைத்து மாநில கிரிக்கெட் சங்க நிர்வாகிகளும் பங்கேற்றனர். டி20 உலகக் கோப்பையில் இந்திய அணியின் செயல்பாடு குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இதில் இந்திய அணியில் செய்ய வேண்டிய மாற்றம் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

பட்ஜெட்

பட்ஜெட்

ஐ.பி.எல் நிர்வாக குழுவில், இரண்டு பிரதிநிகளை இந்த ஆலோசனை கூட்டத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். பிரிஜிஸ் பட்டேல் மற்றும் மஜூமதர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இந்திய வீரர்களின் பிரநிதியாக முன்னாள் வீரர் பிரக்யான் ஓஜா நியமிக்கப்பட்டுள்ளார். நடப்பாண்டிற்கான பி.சி.சி.ஐ.யின் ஆண்டு பட்ஜெட் குறித்து பொதுக்குழுவில் விவாதிக்கப்பட்டது.

அட்டவணை

அட்டவணை

கிரிக்கெட் தொடர்களுக்கான அட்டவணையை தயாரிப்பதற்காக குழு ஒன்றும் தயாரிக்கப்பட்டுள்ளது. கிரிக்கெட் போட்டிகளுக்கு இடையே இடைவெளி இருக்கும் வண்ணம் அட்டவணையை இந்த குழு தயாரிக்கும். இதே போன்று மாற்று திறனாளிகள் கிரிக்கெட்டுக்கு என தனி குழு அமைத்து, அவர்களை பி.சி.சி.ஐ. அங்கீகரிக்கும் வரலாற்று முடிவு இந்த கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

ஓய்வு வயது

ஓய்வு வயது

இதே போன்று இந்தியாவில் நடைபெறும் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் நடுவர்கள் என அனைவரின் ஓய்வு வயதையும் ஆறுபதிலிருந்து 65 வயதாக உயர்த்த இந்த பொதுக்குழுவில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் நடுவர்கள் பலர் பயன்பெறுவார்கள்

தென்னாப்பிரிக்கா தொடர்

தென்னாப்பிரிக்கா தொடர்

மேலும் வடகிழக்கு மாநிலங்களில் கிரிக்கெட்டின் உள்கட்டமைப்பை பலப்படுத்த இந்த கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. பீகார், புதுச்சேரி ,உத்தரக்காண்டிலும் கிரிக்கெட் உள்கட்டமைப்பை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க முடிவு எடுக்கப்பட்டது. இந்தியா, தென்னாப்பிரிக்கா தொடர் வரும் 17ஆம் தேதிக்கு பதில் 26ஆம் தேதி தொடங்கும் என்று இந்த கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. இதில் 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் மட்டும் நடைபெறும் என்று பி.சி.சி.ஐ. தெரிவித்துள்ளது.

Story first published: Saturday, December 4, 2021, 19:02 [IST]
Other articles published on Dec 4, 2021
English summary
BCCI 90th Annual General meeting Held in Kolkatta.. several decision made in these Meeting. Ind tour SA to kicks start on Boxing Day
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X