For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இப்படி ஒரு கெடுபிடியா? இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான பிசிசிஐ-ன் திடீர் முடிவு..வீரர்கள் தான் பாவம்

மும்பை: இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் எந்த தவறும் நடந்துவிடக்கூடாது என்பதற்காக பிசிசிஐ அதிரடி திட்டங்களை செய்து வருகிறது.

நியூசிலாந்து அணிக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிகாக இந்திய அணி வரும் ஜூன் 2ம் தேதி இங்கிலாந்து செல்லவுள்ளது.

பாகிஸ்தான் அணியில் 'நெப்போட்டிசம்?’.. சர்வதேச அளவில் வெடித்த சர்ச்சை.... சீனியர் வீரர்கள் போர்க்கொடிபாகிஸ்தான் அணியில் 'நெப்போட்டிசம்?’.. சர்வதேச அளவில் வெடித்த சர்ச்சை.... சீனியர் வீரர்கள் போர்க்கொடி

ஐபிஎல் தொடரில் ஏற்பட்டது போல் இந்த தொடரிலும் கொரோனா நுழைந்துவிடக் கூடாது என்பதற்காக பிசிசிஐ பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

பயோ பபுள்

பயோ பபுள்

இந்திய அணி வரும் மே.2ம் தேதி இங்கிலாந்துக்கு செல்லவுள்ளது. நேரடியாக அங்கு சென்றால் 14 நாட்கள் குவாரண்டைனில் இருக்க வேண்டும், மேலும் பயிற்சியில் ஈடுபடமுடியாது. இதனால் இங்கிலாந்து செல்வதற்கு முன்னதாக வீரர்கள் அனைவரையும் மும்பையில் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படவுள்ளனர். பின்னர் இங்கிலாந்து சென்றால் அங்கு 10 நாட்கள் மற்றும் குவாரண்டைனில் இருந்து பயிற்சி மேற்கொள்ளலாம்.

புதிய திட்டம்

புதிய திட்டம்

இதனால் வீரர்கள் மும்பைக்கு வருவதற்கு முன்னதாகவே, அவர்களின் வீட்டிற்கு மருத்துவக்குழுவை அனுப்பி பிசிசிஐ கொரோனா பரிசோதனை செய்து வருகிறது. இந்நிலையில் ஒவ்வொரு வீரருக்கும் 3 முறை கொரோனா பரிசோதனை செய்யப்படும் எனவும் அவற்றின் முடிவுகளில் நெகட்டிவ் என வந்தால் மட்டுமே அவர்கள் பிசிசிஐ -ன் பபுளில் இணைய முடியும் என தெரிவிக்கப்பட்டது. அதுவும் மே 19ம் தேதியன்று அனைத்து பரிசோதனைகளையும் முடித்த முடிவுகளுடன் மும்பைக்கு வந்துவிட வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

நீண்ட தொடர்

நீண்ட தொடர்

நியூசிலாந்துக்கு எதிரான போட்டி முடிந்த பிறகு இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் தொடங்கவுள்ளது. வரும் ஆகஸ்ட் 4ம் தேதி தொடங்கும் இந்த தொடர் செப்.14ம் தேதி வரை நடைபெறவுள்ளது. எனவே இந்திய வீரர்கள் சுமார் 3 மாதங்கள் அங்கு முகாமிட வேண்டும் என்பதால் குடும்பத்தாரும் அவர்களுடன் இங்கிலாந்து செல்லலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே குடும்பத்தாருக்கும் 3 முறை வீட்டிலேயே கொரோனா பரிசோதனை செய்யப்படவுள்ளது.

கொரோனா தடுப்பூசி

கொரோனா தடுப்பூசி

இந்திய அணியில் இடம் பிடித்துள்ள வீரர்கள் அனைவரும் தங்களது முதல் தவணை கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொண்டு இங்கிலாந்து செல்லவுள்ளனர். அவர்களுக்கான 2ம் கட்ட தடுப்பூசியை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் ஏற்பாடு செய்ய பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. ஒருவேளை அங்கு ஏற்பாடு செய்யப்படவில்லை என்றால் இந்தியாவில் இருந்தே தடுப்பூசிகள் கொண்டு செல்லப்படவுள்ளது.

Story first published: Saturday, May 15, 2021, 22:25 [IST]
Other articles published on May 15, 2021
English summary
BCCI Advices players to take 3 Covid-19 tests at home before assemble in Mumbai
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X