மோடி மைதானத்திற்கு கிடைத்தது மோட்சம்.. ஒரு வழியாக ஆசை நிறைவேற போகுது.. பிசிசிஐ தந்த அப்டேட்

அகமதாபாத்: உலகின் மிகப் பெரிய கிரிக்கெட் மைதானமான நரேந்திர மோடி மைதானம் கடந்த 2020ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.

IPL 2022 Final Match! BCCI எடுத்த திடீர் முடிவுக்கு ரசிகர்கள் எதிர்ப்பு | #Cricket

இந்த மைதானத்தை 2020ஆம் ஆண்ட அப்போதைய அமெரிக்க அதிபர் டிரம்ப் திறந்து வைத்தார். இந்த மைதானத்தில் ஒரு லட்சத்து 10 ஆயிரம் பேர் அமர்ந்து பார்க்கலாம்.

3 ஆயிரம் கார்களை நிறுத்தலாம், 10 ஆயிரம் பைக்களை பார்கிங் செய்யலாம். அந்த அளவுக்கு அனைத்து வசதியும் இந்த மைதானத்தில் உள்ளது.

2 ஆண்டுகள்

2 ஆண்டுகள்

இதன் மூலம் உலகின் மிகப் பெரிய கிரிக்கெட் மைதானம் என பெயர் எடுத்த மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தை நரேந்திர மோடி மைதானம் பின்னுக்கு தள்ளியது. யார் கண் பட்டதோ, திறந்து 2 ஆண்டுகளாகியும், எதற்காக இந்த மைதானம் கட்டப்பட்டதோ, அதற்கான தேவையை நரேந்திர மோடி மைதானம் பூர்த்தி செல்லவில்லை.

ஒரு முறை கூட இல்லை

ஒரு முறை கூட இல்லை

ஆம், உலகம் முழுவதம் கொரோனா அச்சுறுத்தல் இருந்ததால் இந்த மைதானத்தில் கிரிக்கெட் போட்டிக்காக ஒரு லட்சத்து 10 ஆயிரம் பார்வையாளர்கள் இதுவரை கூடியது இல்லை. ஆனால் இங்கு பல முறை டி20, டெஸ்ட், ஒருநாள் என பலமுறை சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்றன.

காலி மைதானம்

காலி மைதானம்

ஆனால் அனைத்தும் பார்வையாளர்கள் இல்லாமல் வெறும் இருக்கைக்கு முன் விளையாடப்பட்டது. இந்த நிலையில், ஐபிஎல் இறுதிப் போட்டி இம்முறை அகாமதாபாத்தில் உள்ள மோடி மைதானத்தில் நடைபெற உள்ளது. தற்போது கொரோனா அச்சுறுத்தல் இல்லை என்பதால், முதல் முறையாக கிரிக்கெட் போட்டிக்காக ஒரு லட்சத்துக்கும் மேல் மக்கள் கூட உள்ளனர்.

பிசிசிஐ ஏற்பாடு

பிசிசிஐ ஏற்பாடு

இதனை சிறப்பிக்கும் வகையில் ஏஆர் ரஹ்மானின் கச்சேரியும் நடைபெற உள்ளது. சுமார் 50 நிமிடங்கள் கலை நிகழ்ச்சிகள் இந்த பறந்து விரிந்துள்ள மைதானத்தில் நடத்த உள்ளது. மைதானம் எதற்காக கட்டப்பட்டதோ, அதற்காக முதல் முறையாக பயன்படுத்தப்படுகிறது. இதனால் நரேந்திர மோடி மைதானத்திற்க மோட்சம் கிடைத்துவிட்டதாக ரசிகர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
BCCI allows 100 Percent attendance for all playoff match including Final மோடி மைதானத்திற்கு கிடைத்தது மோட்சம்.. ஒரு வழியாக ஆசை நிறைவேற போகுது.. பிசிசிஐ தந்த அப்பேட்
Story first published: Thursday, May 19, 2022, 23:26 [IST]
Other articles published on May 19, 2022
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X