For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஏலமே இல்லாமல் வீரர்களை வாங்கலாம்.. புதிய முறையை அறிவித்த பிசிசிஐ.. அனைத்து அணிகளுக்கும் ஷாக்!

அமீரகம்: 2022ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் அனைத்து அணிகளுக்கும் ஆப்பு வைக்கும் அதிர்ச்சி தகவல் ஒன்றை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.

அடுத்தாண்டு ஐபிஎல் தொடரில் 2 புதிய அணிகள் இணைக்கப்படவுள்ளன. இதற்கான ஏலம் விடும் ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

புதிய அணிகளால் அடுத்தாண்டு ஐபிஎல் மெகா ஏலத்தின் போது பல்வேறு வீரர்கள் வேறு அணிகளுக்கு செல்ல வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுவார்கள்.

புதிய அணிகள்

புதிய அணிகள்

ஒவ்வொரு ஆண்டும் ஏலத்தின் போது, அனைத்து அணிகளுக்கும் குறிப்பிட்ட அளவிலான வீரர்களை தக்கவைத்துக்கொள்ளும் வசதிகள் செய்துக்கொடுக்கப்படும். இதே போல ஒரு வீரரை அணியில் இருந்து விடுவித்துவிட்டாலும் கூட அவரை எந்தவித போட்டியும் இன்றி அதே அணியே வாங்கிக்கொள்ளும் வசதிகளு கொடுக்கப்பட்டன. ஆனால் அடுத்தாண்டு ஐபிஎல்-ல் அவற்றிற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் எனத் தெரிகிறது.

புதிய அறிவிப்பு

புதிய அறிவிப்பு

இந்நிலையில் ஏலம் முறையில் புதிய அறிவிப்பை ஒன்றை பிசிசிஐ அறிவித்துள்ளது. அதில், ஏலத்திற்கு முன்னதாகவே தங்களுக்கு வேண்டிய வீரர்களை வாங்கிக்கொள்ளும் வசதி புதிய அணிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதாவது, ஏலத்தில் பங்கேற்பதற்காக ஒவ்வொரு வீரரும் விண்ணப்பிப்பார்கள். அப்படி விண்ணப்பிக்கும் வீரர்களில் குறிப்பிட்ட அளவிலான வீரர்களை ஏலத்திற்கு முன்னதாகவே அணிகள் வாங்கிக்கொள்ளலாம்.

சம்பளம் எவ்வளவு

சம்பளம் எவ்வளவு

வீரர்களும், அணி நிர்வாகங்களும் ஆலோசனை மேற்கொண்டு ஊதியத் தொகையும் முடிவு செய்துக்கொள்ளலாம். ஆனால் எத்தனை வீரர்களை முன்கூட்டியே வாங்கிக்கொள்ளலாம் என்ற தகவலை பிசிசிஐ அறிவிக்கவில்லை. எனினும் 3 முதல் 4 வீரர்கள் வரை வாங்கிக்கொள்ள அனுமதி வழங்கப்படும் எனத் தெரிகிறது.

 மற்ற அணிகளுக்கு ஆப்பு

மற்ற அணிகளுக்கு ஆப்பு

அனைத்து அணிகளிலும் முக்கிய வீரர்களை தக்கவைத்துக்கொள்ள அனைத்து அணிகளும் முணைப்பு காட்டி வருகிறது. ஆனால் அவற்றிற்கு ஆப்பு வைத்துள்ளது இந்த அறிவிப்பு. பஞ்சாப் கிங்ஸ் அணி கேப்டன் கே.எல்.ராகுல், டேவிட் வார்னர் உள்ளிட்ட முக்கிய வீரர்கள் வேறு அணிகளுக்கு செல்ல தயாராக உள்ளனர். எனவே அவர்களை சுலபமாக புதிய அணிகள் வாங்கிவிடுவார்கள்.

Story first published: Friday, October 15, 2021, 10:49 [IST]
Other articles published on Oct 15, 2021
English summary
BCCI announced new method of 'special picks' for two new IPL franchises in IPL 2022
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X