For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

பரிசு மழையில் நனையும் U-19 இந்திய வீரர்கள்..!! பணத்தை கொட்டிய பி.சி.சி.ஐ..! பிரபலங்கள் வாழ்த்து...!!

மும்பை: U-19 உலகக் கோப்பையை இந்திய அணி 5வது முறையாக வென்று சாதனை படைத்தது. இறுதிப் போட்டியில் இங்கிலாந்தை எதிர்கொண்ட இந்திய அணி,

முதலில் பந்துவீசி 189 ரன்களில் சுருட்டியது. ராஜ் பவா 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனையடுத்து நிஷாந்த், ரஷித் ஆகியோர் அரைசதம் விளாசினர்.

இதனால் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது. இந்த வெற்றியை இந்திய வீரர்கள் கோலாகலமாக கொண்டாடினர்.

பரிசுத் தொகை

பரிசுத் தொகை

இந்த நிலையில், உலக கோப்பையை வென்ற U-19 இந்திய அணி வீரர்களுக்கு தலா 40 லட்சம் ரூபாயை பரிசுத் தொகையைக வழங்குவதாக பி.சி.சி.ஐ. தெரிவித்துள்ளது. இதே போன்று இந்திய U-19 இந்திய அணியின் பயிற்சியாளர் குழுவுக்கு தலா 25 லட்சம் ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்படும் என்றும் பி.சி.சி.ஐ. கூறியுள்ளது.

கங்குலி-ஜெய்ஷா வாழ்த்து

கங்குலி-ஜெய்ஷா வாழ்த்து

இந்திய அணி வீரர்களுக்கு பி.சி.சி.ஐ. தலைவர் கங்குலி அளித்துள்ள வாழ்த்து செய்தி, 40 லட்சம் லட்சம் என்பது பி.சி.சி.ஐ.யின் சிறிய ஊக்கத் தொகை தான், ஆனால் உங்கள் உழைப்பு மதிப்புமிக்கது. அழுத்தமான சூழலில் சிறப்பாக விளையாடியதாக கூறினார். பி.சி.சி.ஐ செயலாளர் ஜெய் ஷா, கடுமையான சூழலில் பெற்றுள்ள இந்த வெற்றி மிகவும் முக்கியமானது. வரலாற்றை படைக்கும் வெற்றியை இளம் வீரர்கள் படைத்துள்ளதாக ஜெய் ஷா பாராட்டினார்.

யுவராஜ் சிங் வாழ்த்து

யுவராஜ் சிங் வாழ்த்து

இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் பதிவிட்டுள்ள வாழ்த்து செய்தியில், இந்த மகத்தான வெற்றியை பெற்றதற்காக தேசமே பெருமை கொள்வதாக தெரிவித்தார். ராஜ் பவா, ரவிகுமார் சிறப்பாக பந்துவீசியதாக குறிப்பிட்டுள்ள யுவராஜ் சிங், இந்திய அணியின் எதிர்காலம் சிறப்பாக உள்ளதாக தெரிவித்தார். நெருக்கடியான கட்டத்தில் நிஷாந்த் விளையாடிய ஆட்டம் பிரமிப்பில் ஆழ்த்தியதாகவும் அவர் கூறினார்.

Recommended Video

IPL 2022 அட்டவணையில் BCCI அதிரடி மாற்றம் : NoHome Advantage For MI | Oneindia Tamil
மைகேல் வாகன் வாழ்த்து

மைகேல் வாகன் வாழ்த்து

இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் தெரிவித்துள்ள வாழ்த்து செய்தியில், இந்திய அணி பல ஆண்டுகளாக வேகப்பந்துவீசி வரும் ஆல் ரவுண்டருக்காக தவம் இருப்பதாகவும், அதற்கு கிடைத்த விடை தான் ராஜ் பவா என்றும் கூறியுள்ளார்.இந்திய அண்டர் 19 அணியின் செயல்பாடு பிரமிக்க வைத்ததாகவும் அவர் கூறினார்.

Story first published: Sunday, February 6, 2022, 7:01 [IST]
Other articles published on Feb 6, 2022
English summary
BCCI announced Prize money for U-19 Indian team for winning world cup பரிசு மழையில் நனையும் U-19 இந்திய வீரர்கள்..!! பணத்தை கொட்டிய பி.சி.சி.ஐ..! பிரபலங்கள் வாழ்த்து...!!
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X