For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அடி தூள்..!! மகளிர் உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு.. மித்தாலி தலைமையில் பெரும் படை தயார்!

மும்பை: மகளிர் உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் முக்கிய வீராங்கனைகள் இல்லாததால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

மகளிர் 50 ஓவர் உலக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் மார்ச் 4-ம் தேதி முதல் நியூசிலாந்தில் நடைபெறுகிறது. இந்த தொடர் ஏப்ரல் 3-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இந்தத் தொடருக்கான அட்டவணையை ஐசிசி சமீபத்தில் வெளியிட்ட சூழலில் அனைத்து நாடுகளும் தங்களது அணிகளை அறிவித்து வருகின்றன.

“ஹர்திக்கை நீக்க ஃபிட்னஸ் காரணமில்லை”.. குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி.. மும்பை அணி கொடுத்த விளக்கம்“ஹர்திக்கை நீக்க ஃபிட்னஸ் காரணமில்லை”.. குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி.. மும்பை அணி கொடுத்த விளக்கம்

மகளிர் உலகக்கோப்பை

மகளிர் உலகக்கோப்பை

இந்நிலையில், இந்த உலகக்கோப்பை கிரிக்கெட்டுக்கான இந்திய அணியை பி.சி.சி.ஐ. அறிவித்துள்ளது. 15 பேர் கொண்ட இந்திய அணிக்கு மிதாலி ராஜ் கேப்டனாகவும், ஹர்மன்ப்ரீத் கவுர் துணைக்கேப்டனாகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேக்னா ஷிங், ரேணுகா சிங், போன்ற வீராங்கனைகளுக்கும் வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

முன்னணி வீராங்கனைகள்

முன்னணி வீராங்கனைகள்

எனினும் அணியின் முன்னணி வீராங்கனைகளாக இருந்த ஜெமிமா ரோட்ரிகஸ் மற்றும் ஷிகா பாண்டே ஆகியோருக்கு உலகக்கோப்பை அணியில் இடம் கிடைக்கவில்லை. சீனியர்கள் மற்றும் இளம் வீராங்கனைகள் கொண்ட கலவையாக உருவாக்கப்பட்டுள்ளதால் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

இந்தியா - பாகிஸ்தான்

இந்தியா - பாகிஸ்தான்

இந்த தொடரின் முதல் போட்டியில் நியூசிலாந்து - மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதுகின்றன. அதைத் தொடர்ந்து மார்ச் 5ம் தேதி நடப்பு சாம்பியனான இங்கிலாந்து ஆஸ்திரேலிய அணியுடன் மோதுகிறது. இதைத் தொடர்ந்து மார்ச் 6-ம் தேதி டவுராங்காவில் நடைபெறும் போட்டியில் இந்திய மகளிர் அணி, பாகிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது. முதல் போட்டியே பாகிஸ்தானுடன் நடப்பதால் தீவிரமாக தயாராகி வருகின்றனர்.

நியூசி, சுற்றுப்பயணம்

நியூசி, சுற்றுப்பயணம்

இதற்கு தயாராகும் நோக்கில் உலகக்கோப்பைக்கு முன்னதாக நியூசிலாந்துடன், ஒரு டி20 மற்றும் 5 ஒருநாள் போட்டிகளில் இந்திய மகளிர் அணி மோதுகிறது. இதிலும் மிதாலி ராஜ் தலைமையிலான அணி தங்களது முழு திறமையையும் வெளிப்படுத்தி பயிற்சிக்கு தயாராகிக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Story first published: Friday, March 25, 2022, 10:42 [IST]
Other articles published on Mar 25, 2022
English summary
BCCI announced the Team India Squad for ICC Women's World Cup in New Zealand, Mithali Raj to lead side
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X