For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இனி அணிக்கு 12 வீரர்கள்.. ஐபிஎல்-ல் வருகிறது புதிய விதிமுறை..ஆட்டத்தின் முடிவே ஆட்டம் காணும்- விவரம்

மும்பை: ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் யாருமே யோசித்துக்கூட பார்க்க முடியாத புதிய விதுமுறைகளை இந்திய கிரிக்கெட் வாரியம் கொண்டு வந்துள்ளது. இதனை கேட்ட ஐபிஎல் ரசிகர்களும் ஆச்சரியத்தில் ஆழ்ந்துள்ளனர்

2023ம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான ஏற்பாடுகள் தற்போது தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதற்கான மினி ஏலம் வரும் டிசம்பர் 23ம் தேதி கொச்சியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து அணிகளும் சமீபத்தில் தாங்கள் தக்கவைக்கப்போகும் வீரர்களின் பட்டியலை வெளியிட்டிருந்தது. இதே போல முக்கிய வீரர்கள் கழட்டிவிடப்பட்டும், முன்னணி வீரர்கள் சில ஓய்வையும் அறிவித்தார்கள்.

எங்களுக்கு நாடு தான் முக்கியம்.. உங்கள் பணம் தேவையில்லை.. ஐபிஎல் ஏலத்திற்கு வராத ஆஸி. வீரர்கள்! எங்களுக்கு நாடு தான் முக்கியம்.. உங்கள் பணம் தேவையில்லை.. ஐபிஎல் ஏலத்திற்கு வராத ஆஸி. வீரர்கள்!

பிசிசிஐ-ன் அறிவிப்பு

பிசிசிஐ-ன் அறிவிப்பு

இந்நிலையில் மினி ஏலத்திற்கு முன்பாக பிசிசிஐ ஒரு புதிய விதிமுறையை அமலுக்கு கொண்டு வந்துள்ளது. அதாவது இனி வரும் ஐபிஎல் போட்டிகளில் ஒவ்வொரு அணியிலும் 12 வீரர்கள் விளையாடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இம்பேக்ட் ப்ளேயர் என்ற பெயரை கொண்ட இந்த விதிமுறையில் 12வது வீரராக சப்ஸ்டிடியூட்டாக செயல்படுவார். ஆனால் நாமெல்லாம் நினைக்கும்படியான சப்ஸ்டிடியூட் அவர் கிடையாது.

ஸ்பெஷல் ரூல்ஸ்

ஸ்பெஷல் ரூல்ஸ்

தற்போது வரை ஒரு வீரருக்கு காயம் ஏற்பட்டாலோ, ஓய்வு தேவை என்றாலோ சப்ஸ்டிடியூட் வீரர் களத்திற்கு உள்ளே வருவார். அவரால் பவுலிங்கோ, பேட்டிங்கோ செய்ய முடியாது. ஆனால் இனி வரும் சப்ஸ்டிடியூட் வீரர்கள், அணிக்காக பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டையுமே செய்ய முடியும். இதனால் ஆட்டத்தில் எந்த நிமிடத்தில் வேண்டுமானாலும் முடிவு மாறும்.

விதிமுறையின் செயல்பாடு

விதிமுறையின் செயல்பாடு

போட்டியில் டாஸ் போடும் போதே இரு அணி கேப்டன்களும் தங்களது சப்ஸ்டிடியூட்களை அறிவித்துவிடுவார்கள். அது அயல்நாட்டு வீரர் அல்லது உள்நாட்டு வீரர் என யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் போட்டிக்குள் 4 அயல்நாட்டு வீரர்கள் மட்டுமே ஒரு சமயத்தில் இருக்க வேண்டும். இந்த திட்டத்தில் இன்னும் தெளிவு கிடைக்காத ஒரு விஷயமும் உள்ளது.

 பெரும் குழப்பம்

பெரும் குழப்பம்

போட்டியின் போது உள்ளே வரும் சப்ஸ்டிடியூட் ஒரு பேட்ஸ்மேனாக இருந்தால் பரவாயில்லை. இதுவே ஒரு பவுலராக இருந்தால் அவருக்கு முழுமையாக 4 ஓவர்களும் கொடுக்கப்படுமா? அல்லது வெளியில் சென்ற பவுலரின் மீதி ஓவர்கள் மட்டுமே கொடுக்கப்படுமா? என்பது போன்ற முக்கியமான விளக்கங்களை பிசிசிஐ இன்னும் அறிவிக்காமல் உள்ளது. இதுகுறித்து விரைவில் விளக்கம் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதே போல டாஸின் போது ஒரு வீரர் சப்ஸ்டிடியூட்டாக அறிவிக்கப்படுவாரா அல்லது 3 முதல் 4 வீரர்கள் சப்ஸ்டிடியூட்களாக அறிவிக்கப்பட்டு, அதில் இருந்து ஒருவர் களத்திற்குள் கொண்டு வரப்படுவார்களா? என்ற குழப்பமும் உள்ளது.

 பிசிசிஐ-ன் ஐடியா

பிசிசிஐ-ன் ஐடியா

ஐபிஎல் விதிமுறைகளை புதிதாக கொண்டு வரும் அதே வேளையில் ஐபிஎல் போட்டிகளின் எண்ணிக்கையும், நாட்களும் அதிகரிக்கப்பட்டிருந்தன. கிரிக்கெட் வல்லுநர்கள் பலரும் இனி சர்வதேச போட்டிகளை குறைத்துவிட்டு, ஐபிஎல் போன்ற உள்நாட்டு தொடர்கள் நிறைய நடக்க வேண்டும் எனக்கூறி வந்தனர். அதற்கு ஏற்றார் போலவே பிசிசிஐ-ம் ஒவ்வொரு காய்களாக நகர்த்தி வருவது வெட்ட வெளிச்சமாக தெரிகிறது.

Story first published: Friday, December 2, 2022, 16:03 [IST]
Other articles published on Dec 2, 2022
English summary
BCCI announces the New 'Impact Player' Rule ahead of IPL 2023 mini auction, here is the full details
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X