
எப்படி
இந்த டெஸ்ட் தொடருக்கு பின் டி 20 மற்றும் ஒருநாள் போட்டிகள் நடக்க உள்ளது. இதற்கான அணி இன்னும் அறிவிக்கப்படவில்லை. நான்காவது டெஸ்ட் முடிந்த பின் இந்திய அணி அறிவிப்பு வெளியாகும் என்கிறார்கள். இதில் இளம் வீரர்கள் பலர் தேர்வு செய்யப்படலாம்.

டி 20
முக்கியமாக இங்கிலாந்துக்கு எதிரான டி 20 தொடரில் இந்திய அணியில் இளம் வீரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். சூர்ய குமார் யாதவ், இஷான் கிஷான் போன்ற வீரர்கள் ஏற்கனவே இதற்காக பெங்களூர் சென்றுள்ளனர். இவர்கள் விஜய் ஹசாரே கோப்பையா போட்டியில் ஆட போவதில்லை.

நடராஜன்
அதேபோல் தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தியும் இதற்காக பெங்களூரில் உள்ளார். அங்கு தேசிய கிரிக்கெட் அகாடமியில் இவர்களுக்கு சோதனைகள் நடந்து வருகிறது . இந்த நிலையில் தமிழக வீரர் நடராஜனுக்கு இதற்கான அழைப்பு சென்றுள்ளது. தற்போது நடராஜன் சென்னையில் இருக்கிறார்.

சென்னை
விஜய் ஹசாரே கோப்பை போட்டியில் ஆடுவதற்காக இவர் சென்னையில் இருக்கிறார். இந்த நிலையில் இவரை தமிழக அணியில் இருந்து ரிலீஸ் செய்யும் படி பிசிசிஐ தமிழக அணிக்கு போன் செய்து கூறியுள்ளது. இந்திய அணியில் சேர்ப்பதற்காக இவருக்கு அழைப்பு சென்றுள்ளது.

இங்கிலாந்து
இதன் மூலம் இங்கிலாந்து அணிக்கு எதிராக கிரிக்கெட் தொடரில் நடராஜன் ஆடுவது உறுதியாகி உள்ளது. இதற்காக அவர் பெங்களூர் செல்ல இருக்கிறார். ஒருநாள் மற்றும் டி 20 போட்டிகளில் நடராஜன் ஆட வாய்ப்புள்ளது. அவர் பெங்களூர் சென்று தனது பயிற்சியை தொடங்குவார் என்று கூறப்படுகிறது .