For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சாஹா கொடுத்த பரபர புகார்... பத்திரிகையாளர் போரியாவுக்கு 2 ஆண்டுகள் தடை.. பிசிசிஐ அதிரடி நடவடிக்கை!

மும்பை: விருதிமான் சாஹா முன்வைத்த குற்றச்சாட்டில் பிசிசிஐ விசாரணை குழு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பாக இந்திய கிரிக்கெட்டில் விருதிமான் சாஹா பரபரப்பு குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்திருந்தார்.

அதில் பிரபல பத்திரிகையாளர் ஒருவர் தனக்கு மிரட்டல் விடுத்ததாகவும், கிரிக்கெட் வாழ்க்கையை நாசமாக்கிவிடுவேன் என கூறியதாகவும் ட்விட்டரில் பூகம்பத்தை கிளப்பியிருந்தார்.

எஸ்ஆர்ஹச் வீரருக்கு கிடைத்த கௌரவம்.. புதிய கேப்டனாக நிக்கோலஸ் பூரான் தேர்வு.. சரியான முடிவு தான்எஸ்ஆர்ஹச் வீரருக்கு கிடைத்த கௌரவம்.. புதிய கேப்டனாக நிக்கோலஸ் பூரான் தேர்வு.. சரியான முடிவு தான்

சாஹாவின் புகார்

சாஹாவின் புகார்

இதுகுறித்து சாஹா ட்விட்டரில் சில ஸ்கிரீன் ஷாட்களை வெளியிட்டிருந்தார். அதில் வாட்ஸ்-அப் மூலம் பத்திரிகையாளர் ஒருவர் சாஹாவுக்கு மிரட்டல் விடுத்த மெசேஜ்கள் அடங்கியிருந்தன. அதாவது, "இனி நீ விக்கெட் கீப்பர் கிடையாது; எனது அழைப்பை ஏற்கவில்லை என்றால் இனி உன்னை எப்போதுமே நேர்க்காணல் செய்ய மாட்டேன்; இந்த அவமானத்தை மறக்கவே மாட்டேன்; பார்த்துக்கொள்கிறேன் என மிரட்டியுள்ளார்.

விசாரணை கமிட்டி

விசாரணை கமிட்டி

நேர்க்காணலுக்கு வரவில்லை என்ற காரணத்திற்காக பத்திரிகையாளர் ஒருவர் மிரட்டியது பரபரப்பை கிளப்பியது. இதுகுறித்து பிசிசிஐ மூத்த அதிகாரிகள் அடங்கிய குழு ஒன்றை அமைத்து விசாரணையை தொடங்கியது. இதில் அந்த பத்திரிகையாளர் போரியா மஜும்தர் என கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வந்தது.

பிசிசிஐ-ன் நடவடிக்கை

பிசிசிஐ-ன் நடவடிக்கை

இந்நிலையில் போரியா தன் மீதான குற்றச்சாட்டுக்களை ஒப்புக்கொண்டதால், அவருக்கான தண்டனை விவரங்களை பிசிசிஐ அறிவித்துள்ளது. அதன்படி போரியாவுக்கு கிரிக்கெட்டில் 2 ஆண்டுகள் தடைவிதித்து பிசிசிஐ குழு உத்தரவிட்டுள்ளது.

எதற்கெல்லாம் தடை

எதற்கெல்லாம் தடை

இந்த உத்தரவின் முழு விவரங்களை பார்க்கலாம்.

இனி இந்தியாவில் நடைபெறும் எந்தவொரு சர்வதேச, உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளிலும் ஊடகவியளாராக செல்ல போரியாவுக்கு தடை.

பிசிசிஐ-ல் பதிவு செய்யப்பட்ட எந்தவொரு வீரர்களிடமும் அவரால் இனி பேட்டி எடுக்க முடியாது.

பிசிசிஐ-ல் பதிவு செய்யப்பட்ட எந்தவொரு வீரர்களிடமும் அவரால் இனி பேட்டி எடுக்க முடியாது.

Story first published: Wednesday, May 4, 2022, 18:16 [IST]
Other articles published on May 4, 2022
English summary
BCCI banned journalist Boria Majumdar after Wriddhiman Saha’s threat complaints
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X