For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ரோகித், டிராவிட்டிற்கு பிசிசிஐ அவசர அழைப்பு.. நறுக்கென 6 முக்கிய முடிவுகள்.. இனி ஆட்டமே வேற மாறி!

மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் செயல்பாடுகள் குறித்து ஆலோசிக்க கேப்டன் ரோகித் சர்மா, ராகுல் டிராவிட் உள்ளிட்ட முக்கிய நபர்களுக்கு பிசிசிஐ அழைப்பு விடுத்துள்ளது.

இந்திய அணி தற்போது நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இந்திய அணி என்னதான் வெற்றி கண்டாலும், அணி மீதான அதிருப்தி மட்டும் இன்னும் போகவில்லை.

டி20 உலகக்கோப்பை தொடரில் மீண்டும் இந்திய அணி தோற்றதற்கான காரணம் என்ன? அதற்காக பிசிசிஐ எடுத்த நடவடிக்கைகள் என்ன என்று பல்வேறு விவாதங்கள் எழுந்துக்கொண்டு செல்கின்றன.

சூர்யகுமாருக்கு வாய்ப்பு தராமல், 3 உலககோப்பையை மிஸ் பண்ணிட்டோம்.. கிரிக்கெட் விமர்சகர் நாணி கருத்துசூர்யகுமாருக்கு வாய்ப்பு தராமல், 3 உலககோப்பையை மிஸ் பண்ணிட்டோம்.. கிரிக்கெட் விமர்சகர் நாணி கருத்து

பிசிசிஐ

பிசிசிஐ

இந்நிலையில் இந்த பிரச்சினைகளுக்கு தீர்வுக்கட்ட பிசிசிஐ முக்கிய ஆலோசனை கூட்டத்தை கூட்டவுள்ளது. இதில் கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி, பயிற்சியாளர் ராகுல் டிராவிட், பிசிசிஐ தலைவர் ரோஜர் பின்னி, செயலாளர் ஜெய் ஷா, முன்னாள் தேர்வுக்கு தலைவர் சேட்டன் சர்மா, பொருளாளர் ஆஷிஸ் ஷேலார் என மொத்தம் 7 நபர்கள் பங்கேற்கின்றனர்.

6 முக்கிய விஷயங்கள்

6 முக்கிய விஷயங்கள்

இந்த கூட்டத்தில் மொத்தம் 6 விஷயங்கள் குறித்து முடிவெடுக்கப்படவுள்ளது. இந்திய அணிக்கு தனித்தனி கேப்டன்கள் மற்றும் பயிற்சியாளர்களை கொண்டு வரவுள்ளனர். அதாவது ரோகித் சர்மா இனி டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணியை கவனித்துக்கொள்வார். டி20 அணிக்கு ஹர்திக் பாண்ட்யா தலைமை ஏற்கவுள்ளார். இதே போல ராகுல் டிராவிட்டும் டி20 அணியில் இருந்து விலகி, அதற்கென தனி பயிற்சியாளரை நியமிக்க முடிவெடுக்கவுள்ளனர்.

உலகக்கோப்பைகான திட்டம்

உலகக்கோப்பைகான திட்டம்

2023ம் ஆண்டு 50 ஓவர் உலகக்கோப்பை இந்தியாவில் நடைபெறவிருக்கிறது. இந்த தொடருக்காக இந்திய அணி எப்படி தயராகப்போகிறது என்பது குறித்து ரோகித் மற்றும் டிராவிட் ஆகியோர் திட்டத்தை கூறவுள்ளனர். அதில், தற்போது இருக்கும் பயிற்சியாளர் தேவைதானா? இல்லை மாற்றலாமா? எந்தெந்த வீரர்களை மாற்ற வேண்டும் எனவும் ஆலோசிக்கவிருக்கின்றனர்.

ரொடேஷன் பாலிசி

ரொடேஷன் பாலிசி

இந்திய அணியில் ரொட்டேஷன் பாலிசி என்ற திட்டம் சமீப காலமாக இருந்து வருகிறது. அதாவது வீரர்களின் பணிச்சுமையை குறைக்கும் வகையிலும், அனைத்து வீரர்களுக்கும் சம வாய்ப்பு கொடுக்கும் வகையிலும் இந்த திட்டத்தை மேம்படுத்தவுள்ளனர். அதற்கு தற்போதே திட்டமிடவுள்ளனர்.

ஆலோசனை குழு

ஆலோசனை குழு

இனி இந்திய கிரிக்கெட் ஆலோசனைக்கூறும் கமிட்டி ஒன்று அமைக்கப்படவுள்ளது. அது இந்திய அணியின் செயல்பாடுகளை கவனித்து, அதற்கேற்றார் போல அறிவுரைகளை கூறிக்கொண்டே இருப்பார்கள். இதன் மூலம் அனைத்து திட்டங்களும் சரியாக நடக்கும் என நம்பப்படுகிறது.

Story first published: Monday, November 28, 2022, 9:57 [IST]
Other articles published on Nov 28, 2022
English summary
BCCI invites Captain Rohit sharma and Head Coach Rahul dravid for the meeting, Important decisions to be taken
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X