For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கூப்புட்றா அவங்கள.. இந்திய பேட்டர்களுக்கு சர்ஃப்ரைஸ் கொடுத்த பிசிசிஐ.. பயிற்சியிலேயே இப்படியா??

நாக்பூர்: ஆஸ்திரேலிய அணியுடனான டெஸ்ட் தொடருக்காக இந்திய அணி திடீரென ரஞ்சிக்கோப்பையில் கலக்கும் இளம் வீரர்களை களமிறக்கி வருகிறது. அதுவும் ஒரு மெகா ப்ளானுடன் செய்து வருகின்றனர்.

இந்தியா - ஆஸ்திரேலிய அணிகள் மோதும் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இன்னும் ஒரு வாரத்தில் தொடங்கவுள்ளது. பிப்ரவரி 9ம் தேதி தொடங்கி மார்ச் 13ம் தேதி வரை இந்த மெகா தொடர் நடைபெறவுள்ளது.

இதற்காக பிப்ரவரி 1ம் தேதி இந்தியாவுக்கு வந்த ஆஸ்திரேலிய வீரர்கள் பெங்களூருவில் உள்ள மைதானத்தில் நாக்பூர் பிட்ச்-ஐ போன்றே உருவாக்கி பயிற்சி பெற்று வருகின்றனர். மறுபுறம் இந்திய அணி நாக்பூரிலேயே பயிற்சி பெற்று வருகிறது.

“இந்தியா அநியாயமாக நடந்துக்கொண்டது” ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர்.. முன்னாள் வீரர் பரபரப்பு குற்றச்சாட்டு “இந்தியா அநியாயமாக நடந்துக்கொண்டது” ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர்.. முன்னாள் வீரர் பரபரப்பு குற்றச்சாட்டு

இந்திய அணி திட்டம்

இந்திய அணி திட்டம்

இந்திய அணியை பொறுத்தவரையில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தினால் மட்டுமே டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேற முடியும். இதற்காக தான் ரோகித் சர்மா, விராட் கோலி, முகமது ஷமி, அஸ்வின், ஜடேஜா போன்ற சீனியர் வீரர்கள் அனைவரும் அணிக்கு திரும்பியுள்ளனர். ரிஷப் பண்ட் இல்லையென்றாலும் சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷான் போன்ற அதிரடி பேட்டர்களையும் களமிறக்குகின்றனர்.

பிசிசிஐ-ன் ஏற்பாடு

பிசிசிஐ-ன் ஏற்பாடு

இந்நிலையில் இந்தியாவுக்கு கூடுதல் பலம் கொடுக்க பிசிசிஐ ஸ்பெஷல் ஏற்பாட்டை செய்துள்ளது. அதாவது இந்தியாவின் இளம் வீரர்களான வாஷிங்டன் சுந்தர், சௌரஃப் குமார் ஆகியோரை பெங்களூருவுக்கு வரவழைத்துள்ளது. அவர்கள் வலைப்பயிற்சி பவுலர்களாக செயல்பட்டு வருகின்றனர். இவர்களுடன் சேர்த்து ராகுல் சஹார் மற்றும் சாய் கிஷோரும் வருகை தந்துள்ளனர்.

8 பவுலர்கள்

8 பவுலர்கள்

இந்த 4 பேருமே இந்தியாவுக்காக சுழற்பந்துவீச்சில் கலக்கி வரும் வீரர்கள் ஆகும். ஏற்கனவே இந்திய அணியில் ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்‌ஷர் பட்டேல், குல்தீப் யாதவ் என 4 ஸ்பின்னர்கள் உள்ளனர். இதன் மூலம் இந்திய பேட்டர்கள் பயிற்சி பெறுவதற்கு மட்டுமே மொத்தமாக 8 ஸ்பின்னர்களை பயன்படுத்தி வருகின்றனர்.

வல்லுநர்கள் நம்பிக்கை

வல்லுநர்கள் நம்பிக்கை

ஆஸ்திரேலியாவுடன் இந்திய அணி கடைசியாக மோதிய 3 டெஸ்ட் தொடர்களிலும் வெற்றிகளை மட்டுமே பதிவு செய்துள்ளது. அதுவும் 2 முறை ஆஸ்திரேலிய அணியை அதன் சொந்த மண்ணிலேயே வீழ்த்தி அசத்தியிருந்தது. அப்படி இருக்கையில் இந்திய மண்ணில் வீழ்த்துவது பெரும் சிரமமாக இருக்காது என வல்லுநர்கள் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.

Story first published: Friday, February 3, 2023, 19:54 [IST]
Other articles published on Feb 3, 2023
English summary
BCCI called a young Stars of Team India to bangalore ahead of India vs Australia Border gavaskar trophy test series
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X