For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சுப்மன் கில் தான் தொடக்க வீரர்..ராகுல் அந்த பணியை செய்ய மாட்டாரா? முன்னாள் தேர்வுக்குழு தலைவர் சாடல்

மும்பை : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தொடக்க வீரராக சுப்மன் கில் தான் விளையாட வேண்டும் என முன்னாள் தேர்வு குழு தலைவர் எம் எஸ் கே பிரசாத் தெரிவித்துள்ளார். இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வரும் ஒன்பதாம் தேதி நாக்பூரில் தொடங்குகிறது.

இதற்காக இரண்டு அணிகளும் தீவிரமாக பயிற்சி செய்து வருகிறார்கள். இந்த நிலையில் கே எல் ராகுல் திருமணத்துக்கு பிறகு தற்போது இந்திய அணிக்கு திரும்பியுள்ளார்.

ராகுல் டெஸ்ட் அணியின் துணை கேப்டன் என்பதால் அவரை அணியை விட்டு நீக்குவது சுலபம் கிடையாது. இருப்பினும் கே எல் ராகுல் வங்கதேசத்துக்கு எதிரான கடைசியாக விளையாட இரண்டு டெஸ்ட் போட்டியில் சொதப்பினார்.

தொடக்க வீரர் யார்?

தொடக்க வீரர் யார்?

ஆனால் மறுபுறம் சுப்மன் கில் புத்தாண்டு தொடங்கி இரண்டு மாதம் கூட ஆகாத நிலையில் 750 ரன்களுக்கு மேல் சர்வதேச கிரிக்கெட்டில் அடித்திருக்கிறார். தற்போது சுப்மன் கில் நல்ல ஃபார்மில் உள்ள நிலையில் அவருக்கு இடம் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் தேர்வு குழு தலைவர் எம் எஸ் கே பிரசாத் தொடர்ந்து சர்வதேச கிரிக்கெட்டில் அதிரடியாக விளையாடி வருவதால் சுப்மன் கில் நல்ல நம்பிக்கை உடன் இருப்பார். அவருடைய இந்த பார்மை நாம் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

நடுவரிசை

நடுவரிசை

சுப்மன் கில் தான் தொடக்க வீரராக களம் இறங்க வேண்டும். கே எல் ராகுலை வேண்டுமானால் நம்பர் ஐந்தாவது வீரராக களம் இறக்கிப் பாருங்கள்.சிறப்பாக விளையாடி வரும் சுப்மன் கில் ஏன் கீழே வர வேண்டும். ராகுல்தான் 50 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் நடு வரிசையில் விளையாடிய அனுபவம் இருக்கிறதே?

அப்படி இருக்க ராகுல் நடு வரிசையில் விளையாட கூடாது என்பதற்கான காரணம் எனக்கு எதுவும் தெரியவில்லை. இதேபோன்று அக்சர் பட்டேல் மூன்றாவது வீரராக சேர்ப்பதா? இல்லை குல்தீப் யாதவை சேர்ப்பதா என்ற கேள்வி மிகவும் குழப்பமானது. இரண்டு வீரர்களில் ஒருவரை தேர்வு செய்வது என்பது மிகவும் கடினமான விஷயம்.

விக்கெட் கீப்பர் யார்?

விக்கெட் கீப்பர் யார்?

ஆனால் ஆடுகளும் போட்டிக்கு முன்பு எப்படி இருக்கிறது என்பதை பார்த்து தான் யார் வேண்டும் .விக்கெட் கீப்பரை பொருத்தவரை கே எஸ் பரத் தான் டெஸ்ட் போட்டியில் அறிமுகமாக வேண்டும். நாங்கள் கே எஸ் பரத்தை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ரிஷப் பண்ட்க்கு மாற்றாக தயார் செய்து வந்தோம். எனவே பண்ட்க்கு பிறகு முதல் வாய்ப்பு பரத்துக்கு தான் கொடுக்க வேண்டும். அவர் தயாராகி விட்டார் என்று எம் எஸ் கே பிரசாத் கூறியுள்ளார்.

ரசிகர்கள் வரவேற்பு

ரசிகர்கள் வரவேற்பு

இந்த நிலையில் எம்.எஸ்.கே பிரசாத்தின் கூற்றுப்படி கே எல் ராகுல் நடு வரிசையில் விளையாட வேண்டும் என்றால் ஸ்ரேயாஸ் ஐயர் அல்லது சூரியகுமார் யாதவ் ஆகியோருக்கு இந்த தொடரில் இடம் கிடைக்காத நிலை ஏற்படும். இதேபோன்று கே எல் ராகுல் தான் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் விக்கெட் கீப்பராக இருக்கிறாரே அவரை ஏன் டெஸ்ட் கிரிக்கெட்டிலும் விக்கெட் கீப்பராக மாற்ற கூடாது என்றும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இது நல்ல யோசனையாக கருதப்பட்டாலும் ராகுலின் சுமை மேலும் அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Sunday, February 5, 2023, 8:15 [IST]
Other articles published on Feb 5, 2023
English summary
BCCI EX Chief selector asks KL Rahul to play in middle order சுப்மன் கில் தான் தொடக்க வீரர்..ராகுல் அந்த பணியை செய்ய மாட்டாரா? முன்னாள் தேர்வுக்குழு தலைவர் சாடல்
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X