For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சத்தியமாக இது தான் நடந்தது.. கோலி பதவி விலகல் பின்னணி.. பி.சி.சி.ஐ. பகீர் விளக்கம்..!!

மும்பை: இந்திய டெஸ்ட் அணி கேப்டன் பொறுப்பிலிருந்து விராட் கோலி விலகியது, இந்திய கிரிக்கெட்டையே திருப்பி போட்டது

ஒருநாள் கேப்டன் பொறுப்பிலிருந்து விராட் கோலி நீக்கப்பட்டார். இதனால் டெஸ்ட் அணி கேப்டன் பொறுப்புக்கும் பி.சி.சி.ஐ. யால் ஆபத்து இருந்தது

இந்த நிலையில், தென்னாப்பிரிக்க தொடரை இந்திய அணி இழந்ததால், பி.சி.சி.ஐ. நடவடிக்கை எடுப்பதற்கு முன்பு விராட் கோலியே கேப்டன் பதவியிலிருந்து ராஜினாமா செய்தார்

இந்திய டெஸ்ட் அணியின் அடுத்த கேப்டன் யார்..? போட்டியில் 4 வீரர்கள்..!! பி.சி.சி.ஐ. அவசர ஆலோசனைஇந்திய டெஸ்ட் அணியின் அடுத்த கேப்டன் யார்..? போட்டியில் 4 வீரர்கள்..!! பி.சி.சி.ஐ. அவசர ஆலோசனை

பி.சி.சி.ஐ. விளக்கம்

பி.சி.சி.ஐ. விளக்கம்

இந்த நிலையில், விராட் கோலி விவகாரத்தில் பி.சி.சி.ஐ. சார்பாக பொருளாளர் அருண் தும்மால் தன்னிலை விளக்கம் ஒன்றை அளித்துள்ளார். அதில், விராட் கோலி டெஸ்ட் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகியது, அவரது தனிப்பட்ட விருப்பம் என்று தெரிவித்தார். டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து விலகுமாறு, அவருக்கு பி.சி.சி.ஐ. எந்த அழுத்தத்தையும் தரவில்லை என்று தெரிவித்துள்ளார்.

அழுத்தம் தரவில்லை

அழுத்தம் தரவில்லை

டெஸ்ட் அணியில் விராட் கோலி சிறப்பாக செயல்பட்டதாகவும், பல வெற்றிகளை பெற்றுள்ளதாகவும் பாராட்டினார். இதனால், டெஸ்ட் கேப்டன் பொறுப்பில் விராட் கோலி 2 அல்லது 3 ஆண்டுகளுக்கு தொடர வேண்டும் என்றே பி.சி.சி.ஐ. விரும்பியதாகவும் அவர் கூறினார். ஆனால் தற்போது விராட் கோலியே தனிப்பட்ட முறையில் விலகுவதால், அவரது முடிவை பி.சி.சி.ஐ. மதிப்பதாக தெரிவித்தார்.

ரசிகர்கள் குற்றச்சாட்டு

ரசிகர்கள் குற்றச்சாட்டு

இந்த நிலையில், பி.சி.சி.ஐ.யின் விளக்கத்திற்கு ரசிகர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். கடந்த 3 மாதங்களாவே விராட் கோலிக்கு பி.சி.சி.ஐ. அழுத்தத்தை கொடுத்ததாகவும், அணி தேர்வில கூட விராட் கோலிக்கு சுதந்திரம் அளிக்கப்படவில்லை என்றும் ரசிகர்கள் குற்றஞ்சாட்டினர்

டிவிட்டர் டிரெண்டிங்

டிவிட்டர் டிரெண்டிங்

இது தொடர்பாக சமூக வலைத்தளத்தில், பி.சி.சி.ஐ.க்கு எதிராக பல ஹேஷ்டேக்களை போட்டு பி.சி.சி.ஐ. கும்மி வருகின்றனர். இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், பி.சி.சி.ஐ. தலைவருமான கங்குலியையும் விராட் கோலி ரசிகர்கள் விட்டு வைக்கவில்லை. இனி இந்திய அணி டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெறுவது கடினமே என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Story first published: Sunday, January 16, 2022, 13:26 [IST]
Other articles published on Jan 16, 2022
English summary
BCCI Explaination about virat kohli captaincy to quit விராட் கோலி விவகாரம்.. பி.சி.சி.ஐ. அளித்துள்ள முக்கிய விளக்கம்..!! ரசிகர்கள் கண்டனம்
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X