For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

மாட்டிறைச்சிக்கு தடைவிதித்ததா பிசிசிஐ?.. இணையத்தில் வெடிக்கும் போர்.. வெளியான அதிகாரப்பூர்வ தகவல்!

மும்பை: இந்திய கிரிக்கெட் வீரர்கள் மாட்டிறைச்சியை உண்ணக்கூடாது என பிசிசிஐ உத்தரவிட்டதாக வெளியான தகவல் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

Recommended Video

மாட்டிறைச்சிக்கு தடைவிதித்ததா BCCI? உண்மை இதுதான்

இந்திய அணி தற்போது நியூசிலாந்துக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது.

டி20 தொடரை 3 - 0 என இந்திய அணி கைப்பற்றிய நிலையில் அடுத்ததாக இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நாளை மறுநாள் முதல் தொடங்கி நடைபெறவுள்ளது.

இந்திய அணியின் முக்கிய வீரருக்கு காயம். இளம் வீரருக்கு அடிச்சது லக்..!!இந்திய அணியின் முக்கிய வீரருக்கு காயம். இளம் வீரருக்கு அடிச்சது லக்..!!

 பிசிசிஐ உத்தரவு?

பிசிசிஐ உத்தரவு?

இந்திய வீரர்கள் தொடர்சியாக பயோ பபுள் வளையத்திற்குள் இருந்து வருவதால், அவர்களின் உடல்நலம் மற்றும் மனநலத்திற்காக பல்வேறு நடவடிக்கைகளை பிசிசிஐ எடுத்து வருகிறது. ஆனால் நேற்று வெளியான புதிய விதிமுறை கிரிக்கெட் வீரர்கள் மட்டுமின்றி ரசிகர்களையும் அதிருப்தியில் ஆழ்த்தியது. அதாவது கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் மாட்டிறைச்சி, பன்றி இறைச்சி ஆகியவற்றை உண்ணக்கூடாது என உத்தரவிட்டதாக தெரிகிறது.

கிளம்பிய எதிர்ப்பு

கிளம்பிய எதிர்ப்பு

இந்த அறிவுறுத்தலுக்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்ப்புகள் கிளம்பியது. ஒரு சில அமைப்புகளுக்கு ஆதரவு கொடுக்கும் வகையில் மாட்டிறைச்சி, பன்றி இறைச்சிகளை உண்ணக்கூடாது என பிசிசிஐ அறிவுறுத்தியதாக கொந்தளித்துள்ளனர். மேலும் வீரர்களின் உணவு பழக்கங்களில் பிசிசிஐ எப்படி தலையிடலாம் எனவும் கண்டனங்கள் குவிந்துள்ளது.

பிசிசிஐ-ன் பதில்

பிசிசிஐ-ன் பதில்

இந்நிலையில் இந்த சர்ச்சை குறித்து பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக பதில் அளித்துள்ளது. இதுகுறித்து பேசிய பிசிசிஐ பொருளாளர் அருன் துமால், இந்திய வீரர்களுக்கு பிசிசிஐ தரப்பிலிருந்து எந்த உணவு வகைகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என நிபந்தனைகள் விதிக்கப்படவில்லை. வெளியான தகவல்கள் அனைத்துமே வதந்திகள் தான், யாரும் நம்பாதீர்கள்.

 திட்டவட்ட கருத்து

திட்டவட்ட கருத்து

மாட்டிறைச்சி உண்ணக்கூடாது என்பது குறித்த டையட் முறைகளை பிசிசிஐ-ல் இதுவரை ஆலோசித்ததே கிடையாது. உடல்நலத்தை மேம்படுத்துவதற்காக எந்தவகையான உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதை வீரர்களே நன்கு அறிவார்கள். அவரிகளின் முடிவுகளில் பிசிசிஐ தலையிடாது என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

Story first published: Wednesday, November 24, 2021, 13:08 [IST]
Other articles published on Nov 24, 2021
English summary
BCCI finally breaks silence in the issue of ‘Halal’ meat diet for Team India cricketers
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X