For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஃபுல் ஃபார்மில் களமிறங்கும் பிசிசிஐ.. ஆசிய கோப்பைக்காக டிராவிட்டிற்கு தந்த சலுகை.. என்ன தெரியுமா??

மும்பை: 2022ஆம் ஆண்டில் இந்திய கிரிக்கெட் அணி கேப்டனை மட்டும் 8 முறை மாற்றவில்லை. கூடவே பயிற்சியாளரையும் சேர்த்து தான் பிசிசிஐ மாற்றியுள்ளது.

வருடத்திற்கு 365 நாட்கள் என்றால, அதில் 250 நாட்களுக்கு மேல் இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் போட்டியில் பங்கேற்கிறார்கள்.

அவர்களுடன் பயிற்சியாளர்கள் மற்றும் இதர அணி நிர்வாகிகளும் செல்கிறார்கள், இந்த நிலையில் டிராவிட் , ரோகித் சர்மா கூட்டணி அண்மை காலமாகவே சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

ஒரு இடத்துக்கு 3 பேர் மோதல்.. ஆசிய கோப்பையில் திணறப்போகும் ரோகித் சர்மா.. காரணம் என்ன தெரியுமா?? ஒரு இடத்துக்கு 3 பேர் மோதல்.. ஆசிய கோப்பையில் திணறப்போகும் ரோகித் சர்மா.. காரணம் என்ன தெரியுமா??

இந்தியாவுக்கான சவால்

இந்தியாவுக்கான சவால்

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான 5வது டெஸ்ட் போட்டியில் பெற்ற தோல்வி தான் டிராவிட்க்கு சரிவை தந்தது. மற்ற அனைத்து போட்டியிலும் இந்திய அணி நல்ல முறையில் விளையாடி வருகிறது. இந்த நிலையில், ஆசிய கோப்பை, ஆஸ்திரேலியா தொடர், தென்னாப்பிரிக்கா தொடர் மற்றும் டி20 உலகக் கோப்பை என தொடர்ந்து இந்திய அணி போட்டியில் விளையாட உள்ளது.

டிராவிட்டுக்கு ஓய்வு

டிராவிட்டுக்கு ஓய்வு

இதனால், ஜிம்பாப்வே தொடரில் ரோகித் சர்மா, விராட் கோலி, ரிஷப் பண்ட் உள்ளிட்ட வீரர்களுக்கு பிசிசிஐ ஓய்வு வழங்கி இருக்கிறது. இந்த நிலையில், தலைமை பயிற்சியாளரான ராகுல் டிராவிட்க்கும் இந்த தொடரில் ஓய்வு வழங்கப்பட்டு இருக்கிறது. அவருக்கு பதிலாக விவிஎஸ் லட்சுமணன் தலைமை பயிற்சியாளராக செயல்படுவார் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது.

விவிஎஸ் லட்சுமண் நியமனம்

விவிஎஸ் லட்சுமண் நியமனம்

ஏற்கனவே லட்சுமணன் தலைமையில் தான் அயர்லாந்துக்கு எதிரான தொடரில் இந்திய அணி களமிறங்கி 3 போட்டியில் வெற்றி பெற்றது. இந்த நிலையில், மீண்டும் லட்சுமணன் அணிக்கு திரும்புகிறார். டிராவிட்டை போல் செயல்பட கூடிய லட்சுமணன், அவரை விட வீரர்களிடையே பேசும் போது நன்றாக பேசுவார்.

வீரர்களுக்கு சாதகம்

வீரர்களுக்கு சாதகம்

மேலும் ருத்துராஜ், ஆவேஷ் கான், தீபக் ஹூடா போன்ற வீரர்களுக்கு லட்சுமணன் அணியில் இருப்பது வரப்பிரசாதமாக கருதப்படுகிறது. ஏனெனில், ராகுல் மற்றும் ஷிகர் தவானை தவிர பெரும்பாலான வீரர்கள் பெரும் அனுபவம் இல்லாதவர்கள். இதனால் லட்சுமணன் போன்ற பயிற்சியாளர் தனி கவனம் செலுத்தி அவர்களது குறைகளை நிவர்த்தி செய்ய முடியும். இதனால் பிசிசிஐ ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்துள்ளது.

Story first published: Saturday, August 13, 2022, 18:50 [IST]
Other articles published on Aug 13, 2022
English summary
BCCI Gives special Permission to Dravid for Asia cup 2022 ஃபுல் ஃபார்மில் களிமிறங்கும் பிசிசிஐ.. ஆசிய கோப்பைக்காக டிராவிட்டிற்கு தந்த சலுகை.. என்ன தெரியுமா??
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X