24 பேர் டீமை செலக்ட் பண்ணுங்க... தேர்வுக்குழுவுக்கு பிசிசிஐ கோரிக்கை வச்சிருக்கு!

டெல்லி : ஐபிஎல் 2021 தொடர் மறு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த தொடர் எப்போது நடக்கும் என்பது குறித்து முடிவெடுக்கப்படவில்லை.

அடுத்ததாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான மும்முரத்தில் பிசிசிஐ உள்ளது.

மனைவி கேட்ட ஒற்றை உதவி.. வீட்டிற்கு வந்த உடனேயே நிறைவேற்ற சென்ற விராட் கோலி.. புகைப்படங்கள் வைரல்!

இந்நிலையில் இந்திய தேர்வுக்குழு அடுத்த வாரத்தில் கூடி முக்கிய முடிவுகளை எடுக்கவுள்ளது.

ஒத்திவைக்கப்பட்ட தொடர்

ஒத்திவைக்கப்பட்ட தொடர்

ஐபிஎல் 2021 தொடர் மறு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த தொடரை கண்டிப்பாக நடத்துவோம் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது. ஆயினும் அடுத்தடுத்த தொடர்கள் திட்டமிடப்பட்டுள்ள நிலையில் எப்போது நடக்கும் எங்கே நடக்கும் என்பது குறித்த தெளிவு தற்போது இல்லை.

இறுதிப்போட்டிக்கான பணி

இறுதிப்போட்டிக்கான பணி

ஆயினும் அடுத்ததாக அடுத்த மாதத்தில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டி இங்கிலாந்தின் சௌதாம்டனில் நடைபெறவுள்ளது. இதற்கென அடுத்தகட்ட பணிகளில் பிசிசிஐ ஈடுபட்டுள்ளது. இந்திய அணி முன்னதாகவே சௌதாம்டனுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளதாக கூறப்படுகிறது.

தேர்வுக்குழுவிற்கு பிசிசிஐ அறிவுறுத்தல்

தேர்வுக்குழுவிற்கு பிசிசிஐ அறிவுறுத்தல்

இந்நிலையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான அணியை தேர்ந்தெடுக்கும் அடுத்த பணி பிசிசிஐக்கு ஏற்பட்டுள்ளது. அடுத்த வாரம் இந்திய தேர்வுக்குழு கூடவுள்ள நிலையில் 22 முதல் 24 வீரர்களை கொண்ட குழுவை தேர்ந்தெடுக்க பிசிசிஐ தேர்வுக்குழுவை அறிவுறுத்தியுள்ளது.

அடுத்தவாரம் அறிவிக்கப்படலாம்

அடுத்தவாரம் அறிவிக்கப்படலாம்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் அடுத்ததாக இங்கிலாந்துக்கு எதிராக நடைபெறவுள்ள 5 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடர் போன்றவற்றிற்கான அணியை தேர்ந்தெடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அடுத்தவாரம் கூடவுள்ள தேர்வுக்குழு ஆலோசனைக்கு பிறகு இந்த இரு அணி விவரங்களை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

தேர்வுக்குழு ஆலோசனை

தேர்வுக்குழு ஆலோசனை

இந்திய அணியில் சிறப்பான பௌலிங் மற்றும் பேட்டிங் யூனிட் உள்ளதாகவும் அதனால் அணியை தேர்ந்தெடுப்பதில் அதிக தலைவலி ஏற்படும் என்றும் முன்னதாக ஐசிசி மற்றும் நியூசிலாந்து பௌலர் கொலின் டீ கிராண்ட்ஹோம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் தேர்வுக்குழு வீரர்கள் தேர்வை மேற்கொள்ளவுள்ளது குறிப்பிடத்தக்கது.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Read more about: bcci பிசிசிஐ
English summary
Selectors will meet by next week, BCCI asked the selection committee to pick 24 member squad
Story first published: Thursday, May 6, 2021, 16:02 [IST]
Other articles published on May 6, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X