For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சுனில் நரினுக்கு சென்னையில் பந்து வீச்சு சோதனை.. கொல்கத்தாவுக்கு ஆட வாய்ப்பு கிடைக்குமா?

By Veera Kumar

சென்னை: பந்து வீச்சு சர்ச்சைக்கு ஆளாகியுள்ள, வெஸ்ட்இண்டீஸ் மற்றும் கேகேஆர் அணியின் முன்னணி சுழற்பந்து வீரர் சுனில் நரின் சென்னையில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட உள்ளார்.

கடந்த ஆண்டு நடந்த சாம்பியன்ஸ் 'லீக்' போட்டியில் சுனில்நரினின் பந்துவீச்சு குறித்து சர்ச்சை கிளப்பப்பட்டது. அவர் விதிமுறைகளுக்கு மாறாக பந்து வீசுவதாக கூறி தடை விதிக்கப்பட்டது. இதன் காரணமாக சமீபத்தில் நடந்த உலககோப்பையிலும் அவர் ஆடவில்லை.

 BCCI INSISTS ON NARINE UNDER- GOING ANOTHER ROUND OF TEST

இதற்கிடையே சுனில் நரின் தனது பந்துவீச்சு பரிசோதனையை நிரூபித்தார். இதை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) அங்கீகரித்தது.

ஆனால் இந்திய கிரிக்கெட் வாரியம் சுனில்நரின் பந்துவீச்சை இன்னும் அங்கீகரிக்கவில்லை. மீண்டும் பந்துவீச்சு பரிசோதனை செய்யுமாறு கேட்கப்பட்டுள்ளது. கிரிக்கெட் வாரிய தலைவர் டால்மியா இது தொடர்பாக கொல்கத்தா அணி நிர்வாகத்திடம் பேசி உள்ளார்.

இதைத்தொடர்ந்து சுனில்நரின் பந்துவீச்சு குறித்து சென்னையில் பரிசோதனை செய்யப்படுகிறது. சென்னை போரூரிலுள்ள, ராமச்சந்திர பல்கலைக்கழகத்தில் உள்ள சோதனை மையத்தில், இந்த பரிசோதனை மேற்கொள்ளப்படும். பரிசோதனையின் முடிவை பொறுத்தே சுனில்நரின் ஐ.பி.எல். போட்டியில் விளையாட முடியுமா? என்பது தெரியவரும்.

Story first published: Thursday, April 2, 2015, 14:51 [IST]
Other articles published on Apr 2, 2015
English summary
Even though KKR's mystery spinner Sunil Narine has been cleared for his action by the ICC, BCCI president Jagmohan Dalmiya has said that the Trinidadian will still have to appear for another test for his suspected illegal bowling action in Chennai.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X