For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

முரளி விஜய், கருண் நாயர்.. ரெண்டு பேரும் ஓவரா பேசிட்டீங்க.. தண்டனைக்கு ரெடியா இருங்க

Recommended Video

முரளி விஜய், கருண் நாயர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் : பிசிசிஐ- வீடியோ

மும்பை : சமீபத்தில் இந்திய கிரிக்கெட் அணித் தேர்வு பற்றி ஏராளமான புகார்கள் மற்றும் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.

முக்கியமாக கருண் நாயர் அணியில் இருந்து நீக்கப்பட்ட விதம் கடும் எதிர்ப்புகளை கிளப்பியது. அவர் தேர்வாளர்கள் யாரும் தன்னை தொடர்பு கொண்டு நீக்கப்பட்டதற்கு எந்த விளக்கமும் அளிக்கவில்லை என கூறினார்.

[6 மேட்சுல சும்மா உட்கார வச்சீங்க.. இப்ப டீம்ல இருந்தே தூக்கிட்டீங்க.. ஹர்பஜன் விளாசல்]

அதே போல முரளி விஜய், தான் அணியில் இருந்து நீக்கப்பட்டது குறித்து எந்த விளக்கமும் யாரும் கூறவில்லை என கூறி இருந்தார்.

விளக்கம் அளிக்கப்பட்டது

விளக்கம் அளிக்கப்பட்டது

இது போன்ற புகார்களால் கடுப்படைந்து உள்ளது பிசிசிஐ. தேர்வுக் குழு தலைவர் எம்எஸ்கே பிரசாத், இந்த இரண்டு குற்றச்சாட்டுகளையும் மறுத்து இருந்தார். தேர்வாளர்கள் தரப்பில் இருந்து அவர்கள் இருவரிடமும் நீண்ட விளக்கம் அளிக்கப்பட்டது என கூறினார்.

எப்படி நீக்கினார்கள்?

எப்படி நீக்கினார்கள்?

கருண் நாயர் வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தவிர்த்து, கடந்த ஆறு டெஸ்ட் போட்டிகளில் உத்தேச அணியில் இடம் பெற்று, ஆடும் அணியில் இடம் பெறாமல் இருந்தார். அவருக்கு மறு வாய்ப்பு அளிக்காமல் அவரை வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடரில் இருந்து கழட்டி விட்டு விட்டனர். இதனால் கடும் வெறுப்பில் அவர் அப்படி பேசி இருக்கலாம். அதே போல முரளி விஜய், இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் பாதியில் நீக்கப்பட்ட நிலையில், அடுத்து கவுன்டி அணியில் சேர்ந்து ரன்களை குவித்தார் எனினும், அவரை வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடரில் சேர்த்துக் கொள்ளவில்லை. அதனால் தான் இப்படி பேசியுள்ளார் என கருதுகிறது பிசிசிஐ.

[காரணமே சொல்லாம கழட்டி விட்ட தேர்வுக் குழு.. கடுப்பில் முரளி விஜய்]

மீறப்பட்ட ஒப்பந்தம்

மீறப்பட்ட ஒப்பந்தம்

இவர்கள் இருவரும், அணித் தேர்வு பற்றி பேசியுள்ளது ஒப்பந்தத்தை மீறிய செயல் என பிசிசிஐ அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். மேலும், அக்டோபர் 11 அன்று ஹைதராபாத் நகரில் நடைபெற உள்ள பிசிசிஐ கூட்டத்தில் இது பற்றி விவாதித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கூறி உள்ளார்.

[எங்க கிட்ட கேக்காம தான் கவுன்டில போய் ஆடுனாரா.. முரளி விஜய் பேசாம இருக்குறது நல்லது]

முரளி விஜய் மீது தான் கோபம்

முரளி விஜய் மீது தான் கோபம்

இருவரில், முரளி விஜய் மீது தன் உச்சகட்ட கோபத்தில் இருக்கிறது பிசிசிஐ. காரணம், முரளி விஜய்க்கு கவுன்டி அணியில் சேர அனைத்து உதவிகளையும் பிசிசிஐ தான் செய்துள்ளது. அவர் தன்னை அணியில் இருந்து நீக்கியது பற்றியும், கவுன்டியில் இணைந்து ஆடி மீண்டும் அணியில் இடம் பெறுவது பற்றியும் பிசிசிஐ-இடம் பேசாமல் இந்த உதவியை பெற்றிருக்க முடியாது. தேர்வாளர்கள் இங்கிலாந்திலேயே அவரிடம் நீக்கம் பற்றி பேசி இருந்ததாக கூறப்படுகிறது. எனவே, கருண் நாயர் சொல்வதை ஒரு கோபம் என்று வைத்துக் கொள்ளலாம். ஆனால், முரளி விஜய் அனைத்து உதவிகளையும் பெற்றுக் கொண்டு இப்படி பொய் பேசுவதை தான் பிசிசிஐ-யால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை என தகவல்கள் கிடைத்துள்ளன. இருவர் மீதும் விசாரணை நடைபெறும் என்பது தெரிய வந்துள்ளது.

எனக்கு ஒண்ணு மட்டும் புரியுது.. முரளி விஜய் வேலியில் போன ஓணானை....

Story first published: Friday, April 17, 2020, 21:36 [IST]
Other articles published on Apr 17, 2020
English summary
BCCI likely to take action against Murali Vijay and Karun Nair for breach of terms
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X