இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டிகள்... 50% ரசிகர்களை அனுமதிக்க திட்டம் போடும் பிசிசிஐ!

டெல்லி : இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான 3 வடிவங்களிலான போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில் வரும் 5ம் தேதி முதல் இந்தியா -இங்கிலாந்து இடையிலான தொடர்கள் டெஸ்ட் தொடருடன் துவங்கவுள்ளது.

4 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் இரண்டு போட்டிகள் சென்னையிலும் அடுத்ததாக அகமதாபாத்திலும் நடைபெறவுள்ளன.

இந்நிலையில் இந்த போட்டிகளில் 50 சதவிகித ரசிகர்களை அனுமதிக்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இவங்களை எதுவும் செய்ய முடியலை.. விரக்தி அடைந்த ஆஸ்திரேலியா.. கையில் எடுத்த

5ம் தேதி துவக்கம்

5ம் தேதி துவக்கம்

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான 3 வடிவங்களிலான தொடர்களில் டி20 மற்றும் டெஸ்ட் தொடர்களில் வெற்றி கொண்டு இமாலய சாதனையுடன் இந்தியா திரும்பியுள்ளனர் இந்திய அணி வீரர்கள். இந்நிலையில் வரும் 5ம் தேதி முதல் இங்கிலாந்து மற்றும் இந்தியா இடையிலான தொடர்கள் துவங்கவுள்ளன.

சென்னையில் முதல் போட்டி

சென்னையில் முதல் போட்டி

முதலில் 4 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடர் துவங்கவுள்ளது. வரும் 5ம் தேதி இதன் முதல் போட்டி சென்னையில் துவங்குகிறது. சென்னையில் 2 டெஸ்ட் போட்டிகளும் அகமதாபாத்தில் புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ள மோதேரா மைதானத்தில் அடுத்த 2 டெஸ்ட் போட்டிகளும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளன.

பிசிசிஐ திட்டம்

பிசிசிஐ திட்டம்

இந்நிலையில் இந்த டெஸ்ட் போட்டிகளில் 50 சதவிகித பார்வையாளர்களை அனுமதிக்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் நடந்து முடிந்துள்ள டெஸ்ட் தொடர்களில் பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அதை பின்பற்ற பிசிசிஐயும் முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

பிசிசிஐ ஆலோசனை

பிசிசிஐ ஆலோசனை

இதுகுறித்து தமிழ்நாடு மற்றும் குஜராத் கிரிக்கெட் வாரியங்கள் மற்றும் மாநில சுகாதார அதிகாரிகளுடன் ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த தொடரில் பாதுகாப்பான முறையில் ரசிகர்களை அனுமதிப்பதன்மூலம் அதையடுத்து வரும் ஐபிஎல் போட்டிகளிலும் ரசிகர்களை அனுமதிக்கவும் பிசிசிஐ திட்டமிட்டுள்ளது.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
 
English summary
We are likely to allow 50 percent spectators for the four Test matches
Story first published: Thursday, January 21, 2021, 20:00 [IST]
Other articles published on Jan 21, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X