For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

டி20 உலகக்கோப்பை அணியில் 2 மாற்றங்கள்??.. கடைசி நேரத்தில் பிசிசிஐ தரும் ட்விஸ்ட்.. என்ன ஆனது?

மும்பை: டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் 2 முக்கிய மாற்றங்களை மேற்கொள்ள பிசிசிஐ திட்டமிட்டு வருகிறது.

Recommended Video

T20 World Cup இந்திய அணியில் 2 மாற்றங்கள்? BCCI திட்டம் என்ன? *Cricket

இந்திய அணி தற்போது தென்னாப்பிரிக்க அணியுடனான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் மோதவுள்ளது.

நவம்பரில் வரவுள்ள டி20 உலகக்கோப்பை தொடருக்கு தயாராவதற்கான கடைசி கட்ட போட்டி இதுதான் ஆகும்.

2 முக்கிய வீரர்களின் கம்பேக்.. தென்னாப்பிரிக்காவுடனான முதல் டி20.. ரோகித் சர்மா அதிரடி முடிவு! 2 முக்கிய வீரர்களின் கம்பேக்.. தென்னாப்பிரிக்காவுடனான முதல் டி20.. ரோகித் சர்மா அதிரடி முடிவு!

டி20 உலகக்கோப்பை அணி

டி20 உலகக்கோப்பை அணி

இந்திய அணி முக்கிய கட்டத்தை எட்டியுள்ள போதும், ஒரு முழுமையான ப்ளேயிங் 11 இன்னும் தயார் செய்யப்படவில்லை. இந்திய அணியின் பேட்டிங் சிறப்பாக அமைந்துவிட்ட போதிலும் பந்துவீச்சில் நிறைய குழப்பங்கள் உள்ளன. புவனேஷ்வர் குமார், ஜஸ்பிரித் பும்ரா, ஹர்ஷல் பட்டேல் என அனைவருமே சொதப்பி வருகின்றனர்.

ஷமியின் நிலை

ஷமியின் நிலை

இந்நிலையில் தான் டி20 உலகக்கோப்பை தொடருக்கான அணியில் மாற்றம் செய்யப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. ஆஸ்திரேலிய களத்திற்கு மிகவும் பொருத்தமாக இருப்பார் என முகமது ஷமி சேர்க்கப்பட்டார். ஆனால் கொரோனாவால் பாதிக்கப்பட்ட அவர், இன்னும் ஒரு டி20 போட்டியில் கூட இந்தாண்டு விளையாடவில்லை. தென்னாப்பிரிக்க தொடரில் இருந்தும் விலகியுள்ளார்.

ஹூடாவின் நிலை

ஹூடாவின் நிலை

இதே போல இந்திய அணியில் ஆல்ரவுண்டர் தேர்வாக இருந்த தீபக் ஹூடாவுக்கும் கடைசி நேரத்தில் காயம் ஏற்பட்டு தென்னாப்பிரிக்க தொடரில் இருந்து விலகியுள்ளார். இவர்கள் இருவரும் டி20 உலகக்கோப்பை தொடருக்குள் முழு உடற்தகுயுடன் வருவார்களா என்ற சந்தேகம் வலுத்து வருகிறது.

2 புது வீரர்கள் யார்

2 புது வீரர்கள் யார்

இந்நிலையில் உலகக்கோப்பை அணியில் 2 மாற்றங்களை கொண்டு வரலாம் என பிசிசிஐ திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது ஷமிக்கு பதிலாக உம்ரான் மாலிக்கும், ஹூடாவுக்கு மாற்றாக சபாஷ் அகமது ஆகியோரை அணிக்குள் கொண்டு வர அதிகம் வாய்ப்புள்ளதாக தெரிகிறது. வரும் அக்டோபர் 8ம் தேதிக்குள் இந்த மாற்றங்களை இந்தியா செய்தாக வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Wednesday, September 28, 2022, 12:43 [IST]
Other articles published on Sep 28, 2022
English summary
BCCI likely to make 2 major changes in Team India squad ahead of T20 world cup 2022
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X