For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

பி.சி.சி.ஐ.யை ஆளும் மும்பை லாபி..!! மும்பை அரசியலால் பழிவாங்கப்பட்டாரா கோலி.. வரலாறு சொல்வது என்ன?

மும்பை: பி.சி.சி.ஐ. எனப்படும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைமை மும்பையில் தான் உள்ளது. இந்திய கிரிக்கெட்டையே கட்டுப்படுத்தும் தலைமை இடமாக அது உள்ளது.

இந்திய கிரிக்கெட்டில் மும்பையில் நீங்கள் வந்தால் உங்களுக்கு தனி மதிப்பு, மரியாதை எல்லாம் கிடைக்கும்

நாடு கடத்தப்படுகிறார் டென்னிஸ் வீரர் ஜோகோவிச்.. கடைசி முயற்சி தோல்வி.. ஆஸி.க்கு நுழைய 3 ஆண்டு தடை?நாடு கடத்தப்படுகிறார் டென்னிஸ் வீரர் ஜோகோவிச்.. கடைசி முயற்சி தோல்வி.. ஆஸி.க்கு நுழைய 3 ஆண்டு தடை?

ஆனால், எப்போது எல்லாம் இந்த மும்பை லாபிக்கு வேறு ஒருவரால் சிக்கல் வருகிறதோ, அப்போது பிரச்சினைகளும் சேர்ந்து வரும்

கபில் தேவ் உடைத்தார்

கபில் தேவ் உடைத்தார்

ஏனெனில் மும்பையில் இருந்து மட்டும் தான் பெரும்பாலான இந்திய வீரர்கள் ஆரம்ப காலத்தில் இந்திய அணியில் இடம்பெறுவர். இதனால், அவர்களுககு தான் கேப்டன் பதவியில் முன் உரிமை, சலுகை கிடைக்கும். முதன் முதலில் இந்த மும்பை லாபியை உடைத்த பெருமை கபில் தேவ்கே சேரும். தனது ஆல் ரவுண்டர் திறமையால் இந்திய அணிக்கு தலைமை தாங்கி முதல் உலகக் கோப்பையையும் பெற்று தந்தார்

மும்பை அரசியல்

மும்பை அரசியல்

இதனால் மும்பை பவர் சென்றுவிடுமோ என்று கருதி, இதே மாதிரி தான் கபில்தேவ் கேப்டன் பதவியிலிருந்து தூக்கப்பட்டு கவாஸ்கர் மீண்டும் வந்தார். இதே போன்று தமிழக வீரர் ஸ்ரீகாந்த், அசாரூதீன் ஆகியோரும் கேப்டனாக செயல்பட்டு வந்த நிலையில், எதாவது பிரச்சினை ஒரு பிரிவினர் கிளப்பிவிட்டு, மும்பையை சேர்ந்தவர்களை கேப்டனாக மாற்றுவார்கள்

கொல்கத்தா பவர்

கொல்கத்தா பவர்

பி.சி.சி.ஐ.யின் பவர் ஹவுசாக இருந்த மும்பை கொஞ்சம் சரிவை காண, கொல்கத்தா பி.சி.சி.ஐயை.ஆள தொடங்கினர். டால்மியா, கங்குலி ஜோடி இணைந்து இந்திய கிரிக்கெட்டை வேறு ஒரு தளத்திற்கு கொண்டு சென்றது. இதனை சற்றும் விரும்பாத மும்பை கேங் கங்குலியை ஓரங்கட்டி மீண்டும் பி.சி.சி.ஐ.யை மும்பை கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது.

சென்னை ஆதிக்கம்

சென்னை ஆதிக்கம்

அப்போது சரத் பவார் அரசியல் விவகாரத்தில் பல பிரச்சினைகளை சந்திக்க, பி.சி.சி.ஐ.யை நமது சென்னை கைப்பற்றியது. தொழில் அதிபர் என். ஸ்ரீனிவாசன், தோனியும் இணைந்து இந்திய கிரிக்கெட்டின் புதிய தலைமையாக விளங்கினர். தெற்கில் இருந்து எப்படி ஒருவர் வரலாம் என்று நினைத்தார்களோ என்னவோ மீண்டும் சூதாட்டம் புகார், அது, இது என்ற பிரச்சினையை கிளப்பி மும்பை லாபி மீண்டும் வென்றது.

மும்பை லாபி

மும்பை லாபி

இதன் பின்னர் விராட் கோலி, கேப்டனாக பல சாதனைகளை செய்த நிலையில், இதனை சற்றும் விரும்பாத மும்பை கேங், அவர் ஐ.சி.சி. கோப்பையை வாங்கவில்லை என்று ஒரு பிரச்சினையை கிளப்பி இன்று விராட் கோலியை காலி செய்துவிட்டது. தற்போது மும்பையை சேர்ந்த ரோகித் சர்மா கேப்டனாக வந்துவிட்டார். அடுத்தது மும்பையை சேர்ந்த ஸ்ரேயாஸ் ஐயருக்கு அந்த பதவி தயாராகி வருகிறது. இந்த மும்பை லாபி கையில் கேப்டன் பொறுப்பு அல்லது, பி.சி.சி.ஐ. நிர்வாகம் இது இரண்டில் எதாவது ஒன்று இருக்க வேண்டும்.

Story first published: Sunday, January 16, 2022, 21:26 [IST]
Other articles published on Jan 16, 2022
English summary
BCCI Mumbai Lobby Politics Explained and History பி.சி.சி.ஐ.யை ஆளும் மும்பை லாபி..!! மும்பை அரசியலால் பழிவாங்கப்பட்டாரா கோலி.. வரலாறு சொல்வது என்ன?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X