For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

புஜாரா, ரஹானேவுக்கு ஊதியம் குறைகிறது..!! ராகுல், ரிஷப் காட்டில் மழை.. பி.சி.சி.ஐ. புதிய ஒப்பந்தம்..

மும்பை: டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்ந்து சொதப்பி வரும் இந்திய அணியின் அனுபவ வீரர்கள் புஜாரா, ரஹானே ஆகியோரின் ஊதியத்தை பி.சி.சி.ஐ. குறைக்க உள்ளதாக தகவல் வெளியாகிறது.

Recommended Video

Pujara, Rahane Face Demotion in BCCI Central Contracts | OneIndia Tamil

ஒவ்வொரு ஆண்டும் பி.சி.சி.ஐ. வீரர்களின் செயல்பாடுகளுக்கு ஏற்ப , அவர்களது ஊதியத்தை நிர்ணயித்து ஒப்பந்தத்தை வழங்கும்.

ஒப்பந்தத்தில் உள்ள வீரர்களுக்கு தான் பெரும்பாலான சமயங்களில் இந்திய அணியில் விளையாட வாய்ப்பு அளிக்கப்படும்.

விராட் கோலி, அஸ்வினுக்கு ஓய்வு? இளம் வீரர்களுக்கு வாய்ப்பு..!! இந்திய அணி நாளை அறிவிப்பு.. IND vs WIவிராட் கோலி, அஸ்வினுக்கு ஓய்வு? இளம் வீரர்களுக்கு வாய்ப்பு..!! இந்திய அணி நாளை அறிவிப்பு.. IND vs WI

ஊதிய விவரம்

ஊதிய விவரம்

இந்த நிலையில், புதிய ஊதிய ஒப்பந்தத்தை பி.சி.சி.ஐ. தயாரித்துள்ளது. அதன் படி , ஏ பிளஸ் பிரிவில் இடம்பெறும் வீரர்களுக்கு 7 கோடி ரூபாயும், ஏ பிரிவில் இடம்பெறும் வீரர்களுக்கு 5 கோடி ரூபாயும், பி பிரிவில் இடம்பெறும் வீரர்களுக்கு 3 கோடி ரூபாயும், சி பிரிவில் இடம்பெறும் வீரர்களுக்கு 1 கோடி ரூபாயும் வழங்கப்படும்,

ராகுல், பண்ட்க்கு லக்

ராகுல், பண்ட்க்கு லக்

இதில் ஏ பிளஸ் பிரிவில் தற்போது விராட் கோலி, ரோகித் சர்மா, பும்ரா ஆகியோர் மட்டுமே இடம்பெற்றுள்ளனர். தற்போது இந்த பட்டியலில் கே.எல்.ராகுல், ரிஷப் பண்ட் ஆகியோர் இடம்பெற வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ராகுலுக்கு துணை கேப்டன் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதால், இந்த ஊதிய உயர்வு வழங்கப்பட உள்ளது.

சம்பளம் குறைப்பு

சம்பளம் குறைப்பு

இந்த நிலையில், சமீப காலமாக டெஸ்ட் போட்டிகளில் சொதப்பி வரும் ரஹோனே, புஜாரா மற்றும் இஷாந்த் சர்மாவை ஏ பிரிவிலிருந்து பி பிரிவுக்கு மாற்றி சம்பளத்தை 5 கோடியிலிருந்து, மூன்று கோடி ரூபாயாக பி.சி.சி.ஐ. குறைக்க உள்ளது. கடந்த 2021ஆம் ஆண்டு முதல் டெஸ்ட் போட்டிகளில் ரஹானேவின் சராசரி 20 ஆகும், புஜாராவின் சராசரி 27ஆகவும் உள்ளது. இதனால் தான் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

புதிய ஒப்பந்தம்

புதிய ஒப்பந்தம்

ஜடேஜா, அஸ்வின், முகமது ஷமி ஆகியோர் தொடர்ந்து ஏ பிரிவில் நீடித்து 5 கோடியை சம்பளமாக பெற உள்ளனர். இதே போன்று சி பிரிவில் இடம்பெற்றுள்ள அக்சர் பட்டேல், முகமது சிராஜ் ஆகியோரின் ஊதியம் ஒரு கோடி ரூபாயிலிருந்து 3 கோடி ரூபாயாக உயர உள்ளது. வெங்கடேஷ் ஐயர், ஹர்சல் பட்டேல், ருத்துராஜ், ஷாரூக்கான், ரவி பிஸ்னாய் ஆகியோருக்கு ஒரு கோடி ரூபாய் ஒப்பந்தம் புதியதாக வழங்க வாய்ப்புள்ளது.

Story first published: Wednesday, January 26, 2022, 14:48 [IST]
Other articles published on Jan 26, 2022
English summary
BCCI New salary contract for Players is Finalised, Rahane. Pujara faces salary cut புஜாரா, ரஹானேவுக்கு ஊதியம் குறைகிறது..!! ராகுல், ரிஷப் காட்டில் மழை.. பி.சி.சி.ஐ. புதிய ஒப்பந்தம்..
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X