For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கொடி பறக்குதா! கேல் ரத்னா விருதுகள்.. 2 தமிழர்கள் பெயர்கள் பரிந்துரை..கொண்டாடித்தீர்க்கும் ரசிகர்கள்

மும்பை: இந்தாண்டுக்கான கேல் ரத்னா விருதுகளுக்காக இரண்டு தமிழர்களின் பெயர்களை பரிந்துரைத்துள்ளது பிசிசிஐ.

விளையாட்டு துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு ஆண்டுதோறும், அர்ஜுனா, ராஜீவ் காந்தி கேல் ரத்னா, துரோணாச்சார்யா ஆகிய விருதுகளை வழங்கி மத்திய அரசு கவுரவித்து வருகிறது.

5 ஓவர்ஸ்.. 6 ரன்கள்.. 4 5 ஓவர்ஸ்.. 6 ரன்கள்.. 4

அந்தவகையில் இந்தாண்டுக்கான விருதுக்காக கிரிக்கெட் விளையாட்டில் இருந்து சில வீரர், வீராங்கனைகளின் பெயர்களை பிசிசிஐ பரிந்துரைத்துள்ளது.

கேல் ரத்னா

கேல் ரத்னா

அனைத்து விளையாட்டு துறைகளும் ஜூன் 21ம் தேதிக்குள்ளாக பரிந்துரை பட்டியலை அனுப்ப வேண்டும் என மத்திய விளையாட்டு துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது. பின்னர் அந்த கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு தற்போது பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

பரிந்துரை

பரிந்துரை

அதன்படி ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதுக்காக தமிழகத்தை சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் மித்தாலி ராஜ் ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. தமிழ் குடும்பத்தை சேர்ந்த துரைராஜ் - லீலாராஜ் ஆகியோருக்கு பிறந்த மிதாலி ராஜ், தற்போது ஐதராபாத்தில் வசித்து வருகிறார்.

அனுபவ வீரர்கள்

அனுபவ வீரர்கள்

இந்தியாவின் டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணியின் கேப்டனான மித்தாலி ராஜ் இதுவரை 11 டெஸ்ட் போட்டிகள், 215 ஒருநாள் போட்டிகள் மற்றும் 89 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். அதே போல் தமிழக வீரர் அஸ்வின் 79 டெஸ்ட் போட்டிகள், 46 டி20 மற்றும் 111 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். இவர்கள் இருவரும் தற்போது இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் இடம்பெற்று விளையாடி வருகின்றனர்.

அர்ஜுனா பரிந்துரை

அர்ஜுனா பரிந்துரை

இதே போல அர்ஜுனா விருதுக்கு ஷிகர் தவான், கே.எல்.ராகுல், பும்ரா ஆகியோரின் பெயரை பிசிசிஐ பரிந்துரைத்துள்ளது. இதில் ஷிகர் தவானின் பெயர் கடந்தாண்டே பரிந்துரைக்கப்பட்டும் விருது கிடைக்காத நிலையில் இந்தாண்டு மீண்டும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

Story first published: Thursday, July 1, 2021, 0:00 [IST]
Other articles published on Jul 1, 2021
English summary
BCCI Nominates R Ashwin, Mithali Raj for Khel Ratna award; Shikhar, KL Rahul and Bumrah for Arjuna award
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X