For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அடுத்த பயிற்சியாளர் டிராவிட் இல்லை.. பிசிசிஐ போட்டுள்ள ரகசிய திட்டம்.. 2 பேருக்கு இடையே கடும் போட்டி

மும்பை: ரவி சாஸ்திரிக்கு பிறகு இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக தேர்ந்தெடுக்கப்படுபவர் குறித்த தகவல் கசிந்துள்ளது.

Recommended Video

முடிவுக்கு வரும் பதவிக்காலம்.. BCCI-க்கு நோ சொன்ன Ravi Shastri

இந்திய ஆடவர் கிரிக்கெட் அணியின் அடுத்த தலைமை பயிற்சியாளர் யார் என்ற விவாதம் தான் கிரிக்கெட் உலகின் விவாத பொருளாக மாறியுள்ளது.

மும்பை அணியின் முக்கிய தவறுகள்.. சென்னைக்கு எதிரான ஆட்டத்தில் செய்யக்கூடாதவை.. பீட்டர்சன் எச்சரிக்கைமும்பை அணியின் முக்கிய தவறுகள்.. சென்னைக்கு எதிரான ஆட்டத்தில் செய்யக்கூடாதவை.. பீட்டர்சன் எச்சரிக்கை

குறிப்பாக ரவி சாஸ்திரி மற்றும் ராகுல் டிராவிட் ஆகியோருக்கு இடையே கடும் போட்டி நிலவி வருவதாகத் தெரிகிறது.

தலைமை பயிற்சியாளர்

தலைமை பயிற்சியாளர்

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக கடந்த 2017ம் ஆண்டு நியமிக்கப்பட்ட ரவிசாஸ்திரியின் பதவிக்காலம் மீண்டும் 2019ம் ஆண்டு நீட்டிக்கப்பட்டது. இந்த சூழலில் அவரின் தற்போதைய பதவிக்காலம் வரும் டி20 உலகக்கோப்பையுடன் முடிவடைகிறது. ஐசிசி கோப்பையை வென்று கொடுக்காததால் ரவிசாஸ்திரி தொடர்ந்து பயிற்சியாளராக இருக்க விரும்பவில்லை எனத் தெரிகிறது.

ஏமாற்றமளித்த டிராவிட்

ஏமாற்றமளித்த டிராவிட்

இதனையடுத்து ரவிசாஸ்திரிக்கு அடுத்தபடியாக ராகுல் டிராவிட் தான் தலைமை பயிற்சியாளராக இருப்பார் எனத் தெரிகிறது. பல்வேறு இளம் வீரர்களை உலக தரத்திற்கு கொண்டு வந்த டிராவிட் பயிற்சியாளராக வந்தால் இந்திய அணியின் எதிர்காலம் சிறப்பாக இருக்கும் என முன்னாள் வீரர்கள் தெரிவித்து வருகின்றனர். ஆனால் அவர் அதற்கு விரும்பவில்லை எனத் தெரிகிறது.

பயிற்சியாளர்

பயிற்சியாளர்

இந்நிலையில் இந்திய அணியின் அடுத்த பயிற்சியாளர் ஆவதற்கு அனில் கும்ப்ளே அல்லது விவிஎஸ் லக்‌ஷ்மண் ஆகியோர் நியமிக்கப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே 2016 - 17ம் ஆண்டில் பயிற்சியாளராக இருந்த கும்ப்ளே, பதவியேற்ற ஓராண்டிற்குள் விராட் கோலியுடன் ஏற்பட்ட மன கசப்பு காரணமாக பதவி விலகினார். இந்நிலையில் தற்போது மீண்டும் அவர் ஆர்வம் காட்டுவதாக தெரிகிறது.

நிலவும் கடும் போட்டி

நிலவும் கடும் போட்டி

இதே போல வி.வி.எஸ். லக்‌ஷ்மணன் இந்திய பயிற்சியாளராக மாறுவதற்கு ஆர்வம் காட்டி வருகிறார். இதன்காரணமாக நிச்சயம் கும்ப்ளே அல்லது லக்‌ஷ்மணன் ஆகிய இருவரில் ஒருவரே பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அயல்நாட்டு பயிற்சியாளருக்கும் பிசிசிஐ பெரியளவில் சிந்திக்கவில்லை எனத்தெரிகிறது.

Story first published: Saturday, September 18, 2021, 14:19 [IST]
Other articles published on Sep 18, 2021
English summary
BCCI Planing to appoints Anil Kumble as a head coach’s role after Ravi Shastri
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X