For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இதெல்லாம் நடக்குமா? வேர்ல்டு கப்புல இருந்து பாகிஸ்தானை தூக்குங்க.. பிசிசிஐ பிளாக்மெயில்!

மும்பை : புல்வாமா தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்தியா, பாகிஸ்தான் அணியுடன் 2019 உலகக்கோப்பை போட்டியில் பங்கேற்கக் கூடாது என கூறி வருகின்றனர்.

இந்த விவகாரத்தில் என்ன முடிவு எடுப்பது என பிசிசிஐ வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. அதில் ஒரு முடிவாக பாகிஸ்தானை உலகக்கோப்பை தொடரில் இருந்து நீக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஐசிசி-யிடம் வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக ஒரு செய்தி கசிந்துள்ளது.

ISL 2019 : முதல் இடத்துக்கு போட்டி போடும் கோவா.. பெங்களூரு அணியை வீழ்த்துமா? ISL 2019 : முதல் இடத்துக்கு போட்டி போடும் கோவா.. பெங்களூரு அணியை வீழ்த்துமா?

இப்படி கேட்க முடியுமா?

இப்படி கேட்க முடியுமா?

இந்தியா, தனிப்பட்ட முறையில் பாகிஸ்தானுடன் ஆடமுடியாது என கூறலாம். ஆனால், பாகிஸ்தானை பல நாடுகள் பங்கேற்கும் ஒரு தொடரில் இருந்து நீக்குமாறு கூற முடியுமா? என்ற பேச்சுக்களும் எழுந்துள்ளன.

கடிதம்

கடிதம்

பிசிசிஐ தலைமை செயல் அதிகாரி ராகுல் ஜோஹ்ரி எழுதியுள்ள கடிதத்தில், "காஷ்மீர் தீவிரவாத தாக்குதலை அடுத்து, ஐசிசி பாகிஸ்தானை தடை செய்ய வேண்டும் என பிசிசிஐ கருதுகிறது" என குறிப்பிடப்பிட்டுள்ளார். இந்த கடிதம் நிர்வாக கமிட்டி தலைவர் வினோத் ராய் ஒப்புதலுக்கு சென்றுள்ளது எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

விலகி விடுவோம்

விலகி விடுவோம்

வினோத் ராய் ஒப்புதல் அளிக்கும் பட்சத்தில் இந்த கடிதம் ஐசிசிக்கு அனுப்பப்படும் என தெரிகிறது. மேலும், பாகிஸ்தானை நீக்காவிட்டால் இந்தியா உலகக்கோப்பை தொடரில் இருந்து விலகிவிடும் எனவும் அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாக தெரிகிறது.

சாத்தியமா?

சாத்தியமா?

ஆனால், ஒரு நாட்டை உலகக்கோப்பையில் தடை செய்ய வலியுறுத்த முடியுமா? இது சாத்தியமா? ஐசிசி இதன் மீது நேரடியாக முடிவு எடுக்க முடியுமா? நிச்சயம் மற்ற உறுப்பினர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

முட்டாள்தனமான முடிவு

முட்டாள்தனமான முடிவு

பிசிசிஐ அதிகாரிகள் சிலர் பெயர் குறிப்பிடாமல் இது குறித்து கருத்து தெரிவித்துள்ளனர். "பிசிசிஐ இது போன்ற ஒரு கோரிக்கையை வைக்கவே முடியாது. இது பல நாடுகள் பங்கேற்கும் தொடர். ஒரு தனி உறுப்பினர் நடத்தும் தொடர் அல்ல. இது போன்ற கோரிக்கை வைப்பது முட்டாள்தனமாக தான் முடியும்" என கூறியுள்ளனர்.

என்ன செய்யலாம்?

என்ன செய்யலாம்?

அதிகபட்சமாக பாகிஸ்தானுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தியா உலகக்கோப்பை தொடரில் இருந்து தனிப்பட்ட முறையில் விலகலாம். அல்லது பாகிஸ்தானுடன் மட்டும் விளையாட மறுக்கலாம். அப்படி செய்தால் இந்தியாவுக்கு அபராதம் விதிக்கப்படும். மேலும், அரையிறுதி அல்லது இறுதியில் பாகிஸ்தான் அணியை சந்திக்க சேர்ந்தால் இந்தியா என்ன முடிவு எடுக்கும் என்பதையும் யோசிக்க வேண்டும்.

இது தான் காரணமா?

இது தான் காரணமா?

ஆனால், இது எல்லாம் பிசிசிஐ-க்கு தெரியாதா? பிசிசிஐ, ஐசிசி-க்கு இப்படி ஒரு கடிதம் அனுப்ப என்ன காரணம்? ஒரு வேளை ஐசிசி தலைவராக இந்தியாவின் ஷஷான்க் மனோகர் இருப்பது தான் காரணமா?

Story first published: Thursday, February 21, 2019, 11:38 [IST]
Other articles published on Feb 21, 2019
English summary
BCCI planned to ask ban on Pakistan from ICC world cup 2019
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X