For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

31 போட்டிக்கு 31 நாட்கள்.. கசிந்தது பிசிசிஐ-ன் மெகா ப்ளான்.. டி20 உலகக்கோப்பையுடனே மோதும் ஐபிஎல்!

மும்பை: ஐபிஎல் தொடருக்காக முடிவு செய்யப்பட்டிருந்த தேதிகளில் மீண்டும் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஐபிஎல் தொடர் மீண்டும் எப்போது நடைபெறும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துள்ளனர்.

WTC FINAL:நியூசிலாந்துக்கே சாதகமான சூழல்..அடித்துக்கூறும் விவிஎஸ் லக்‌ஷ்மண்..பிட்ச்-ல் இருக்கும் அந்த பிரச்னை!WTC FINAL:நியூசிலாந்துக்கே சாதகமான சூழல்..அடித்துக்கூறும் விவிஎஸ் லக்‌ஷ்மண்..பிட்ச்-ல் இருக்கும் அந்த பிரச்னை!

29 போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில் இன்னும் 31 போட்டிகள் நடைபெறவேண்டி உள்ளது.

ஐபிஎல் தொடர்

ஐபிஎல் தொடர்

கொரோனா காரணமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ள ஐபிஎல் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்படவுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. இதற்காக செப்டம்பர் 18ம் தேதி முதல் அக்டோபர் 10ம் தேதி வரையிலான விண்டோவுக்காக பிசிசிஐ ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.

8 டபுள் ஹெட்டர்ஸ்

8 டபுள் ஹெட்டர்ஸ்

ஐபிஎல் தொடர் கொரோனா காரணமாக தடைபடவில்லை என்றால் இன்னும் 6 டபுள் ஹெட்டர்ஸ் மட்டுமே இருந்திருக்கும். அதாவது ஒரே நாளில் 2 போட்டிகளை நடத்தி முடிப்பது ஆகும். ஆனால் தற்போது ஏற்படுத்தப்படவுள்ள விண்டோவில் 8 டபுள் ஹெட்டர்ஸ்களை கொண்டு தொடரை வேகமாக முடிக்க வேண்டும் என திட்டமிடப்பட்டு வருகிறது.

புது முடிவு

புது முடிவு

இந்நிலையில் டபுள் ஹெட்டர்ஸை குறைக்க முடிவெடுக்கப் பட்டுள்ளதாக கூறப்படுகிறது. செப்டம்பர் - அக்டோபர் மாதங்களில் ஐக்கிய அரபு அமீரகத்தில் கடும் வெயில் நிலவக்கூடும். எனவே அதிகப்படியான டபுள் ஹெட்டர்ஸ் நடந்தால் மதிய நேரத்தில் வீரர்கள் சிரமப்படுவார்கள் என்ற காரணத்தால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேலும் ஐபிஎல் தொடரின் விண்டோ நாட்களும் அதிகரிப்பட்டுள்ளன. அக்டோபர் 10ம் தேதிக்கு பதிலாக அக்டோபர் 18ம் தேதி வரை போட்டிகள் நடைபெறும் என கூறப்படுகிறது

உலகக்கோப்பை சிக்கல்

உலகக்கோப்பை சிக்கல்

ஐபிஎல் தொடர் அக்டோபர் 18ம் தேதி வரை நடைபெறுவதிலும் சிக்கல் உள்ளது. டி20 உலகக்கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் அக்டோபர் மாதம் 18ம் தேதி முதல் நடக்க அதிக வாய்ப்புள்ளது. எனவே ஐபிஎல் மற்றும் டி20 உலகக்கோப்பை தேதிகளும் குழப்பத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.

Story first published: Saturday, June 5, 2021, 20:10 [IST]
Other articles published on Jun 5, 2021
English summary
BCCI planning to Conduct IPL 2021 final on Oct 18 to avoid more doubleheaders
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X