For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

பன்டுக்கும் பட்டை நாமம் போடும் பிசிசிஐ..? தென் ஆப்ரிக்கா தொடரில் புதிய பிளானுக்கு திட்டம்

Recommended Video

Virender sehwag advice's young player rishabh pant to play a good cricket

மும்பை: தோனிக்கு பதிலாக சோதனை அடிப்படையில் விக்கெட் கீப்பராக கொண்டு வரப்பட்ட பன்ட்டையும் கழற்றிவிட பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

இந்திய கிரிக்கெட் அணியின் தல என்று அழைக்கப்படும் தோனி, உலக கோப்பை தொடர் பெரும் சர்ச்சைகளாலும், கசப்பான விஷயங்களினாலும் நிரம்பி இருக்கிறது. இந்த அந்த சர்ச்சைகள் ஓயாமல் தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றன.

அவர், உலக கோப்பை தொடருடன் ஓய்வு பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் தற்போது வரை ஓய்வு குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. இதனால் பல முன்னாள் வீரர்களும் டோனியை இளம் வீரர்களுக்கு வழி விட்டு ஓய்வு பெற வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.

மவுன தோனி

மவுன தோனி

ஆனால் தோனி தனது எதிர்காலம் குறித்து மவுனத்தையே பதிலாக கொண்டு இருக்கிறார். இதுவரை அதிகாரப் பூர்வமாக எந்த ஒரு தகவலையும் தோனி தெரிவிக்க வில்லை. மேலும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் இருந்து தம்மை விலக்கி கொண்டு தோனி ராணுவத்தில் இணைந்து பணியாற்றினார்.

விரைவில் அறிவிப்பு?

விரைவில் அறிவிப்பு?

இந்நிலையில் அடுத்த மாதம் இந்தியா வரவிருக்கும் தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான தொடரில் தோனிக்கு இடம் கிடைக்காது என்று தகவல்கள் வெளியாகி அடுத்த பரபரப்பை கூட்டியிருக்கின்றன. ஆனால் அது தொடர்பான அதிகாரப் பூர்வ அறிவிப்புகள் இன்னும் வெளியாகவில்லை.

தென் ஆப்ரிக்கா தொடர்

தென் ஆப்ரிக்கா தொடர்

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் வரும் தென் ஆப்ரிக்கா 3 போட்டிகள் கொண்ட டி 20 தொடரில் ஆடுகிறது. அந்த தொடருக்கான இந்திய அணி வரும் 4ம் தேதி அறிவிக்கப்பட உள்ளது. அப்படி அணி அறிவிக்கப்படும் பட்சத்தில் தோனியின் பெயர் அதில் நிச்சயம் இடம் பெறாது என்று கூறப்படுகிறது. ஏனெனில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி 20 தொடரை இந்தியா 3-0 என்ற கணக்கில் சமீபத்தில் கைப்பற்றியது.

அடித்தளம் போடும் பிசிசிஐ

அடித்தளம் போடும் பிசிசிஐ

அந்த வெற்றியை பிசிசிஐ பெரிய வெற்றியாக பார்க்கிறது. உலக கோப்பை தோல்விக்கு பிறகு பெற்ற முதல் தொடர் வெற்றி என்பதால், புதிய இளம் வீரர்களின் வரவுக்கு இதனை அடித்தளமாக பயன்படுத்த பிசிசிஐ திட்டமிட்டு உள்ளதாக தெரிகிறது.

தேர்வுக்குழு முடிவு

தேர்வுக்குழு முடிவு

எனவே வெஸ்ட் இண்டீஸ் தொடரில் ஆடிய அதே வீரர்களை இந்த தொடரிலும் தொடர்ந்து விளையாட வைக்க தேர்வு குழு முடிவு செய்துள்ளது. அதனால் தோனிக்கு வாய்ப்பு மறுக்கப்பட உள்ளது என்ற அறிவிப்பு விரைவில் வெளியாகும். அவருக்கு பதிலாக விக்கெட் கீப்பராக ரிஷப் பன்ட் இடம் பெறவே அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் தற்போது பிசிசிஐ அவருக்கும் ஆப்பு வைக்க முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அந்த 2 பேர்

அந்த 2 பேர்

பன்ட்டுக்கு மாற்றாக 2வது மற்றும் 3வது விக்கெட் கீப்பர்களாக இஷான் கிஷன், சஞ்சு சாம்சன் ஆகியோர் பெயர்கள் ஆலோசிக்கப்படும் என்று தெரிகிறது. சில புதிய திட்டங்களை பிசிசிஐ வைத்துள்ளது. அதன்படி தனக்கு கொடுக்கப்பட்ட வாய்ப்பை பன்ட் புரிந்துகொள்ளாமல் சுமாராக செயல்படுவதால் அவருடன் சேர்த்து தென் ஆப்ரிக்க தொடரில் சஞ்சு சாம்சன் மற்றும் இஷான் கிஷான் இளம் வீரர்களை இந்திய அணியில் தேர்வு செய்ய உள்ளது.

சுழற்சி முறை

சுழற்சி முறை

எனவே பன்ட் மற்றும் அவர்களுக்கு சுழற்சி முறையில் வாய்ப்பு அளிக்கப்படும். அதில் சிறப்பாக விளையாடும் வீரருக்கு தொடர்ந்து வாய்ப்பு அளிக்கப்படும் என்று கூறப்படுகிறது. இதனால் தோனிக்கு பதிலாக பன்ட் என்ற அந்த இடத்திற்கு தற்போது சிக்கல் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Story first published: Thursday, August 29, 2019, 12:27 [IST]
Other articles published on Aug 29, 2019
English summary
Bcci plans to bring rotational method for rishabh pant and other 2 wicket keepers in team.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X