For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

நவம்பரில் தோனிக்கு வழியனுப்பு விழா..? நாள் குறித்த பிசிசிஐ.. உச்சக்கட்ட பதைபதைப்பில் ரசிகர்கள்

Recommended Video

Dhoni Retirement : தோனிக்கு வழியனுப்ப நாள் குறித்த பிசிசிஐ?

மும்பை: தல தோனி தமது ஓய்வை அறிவிக்கிறாரோ, இல்லையோ அவருக்கு வழியனுப்ப நாள் குறித்துவிட்டது இந்திய கிரிக்கெட் வாரியம்.

தோனி ஓய்வு குறித்து வெளியாகும் செய்திகளால், வரக்கூடிய வெஸ்ட் இண்டீஸ் தொடரில் அவர் பங்கேற்பாரா என்று எதிர்பார்ப்பு ஏகத்துக்கும் அதிகரித்துள்ளது. ஒருவேளை அவர் ஓய்வை அறிவிக்கா விட்டாலும் அடுத்த போட்டிக்கான இந்திய அணியில் அவர் சேர்க்கப்படுவாரா என்ற பலத்த சந்தேகம் எழுந்துள்ளது.

இந்நிலையில் பிசிசிஐ தரப்பில் இருந்து பல்வேறு தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன. தோனி அடுத்து நடக்கவுள்ள வெஸ்ட் இண்டீஸ் தொடரில் பங்கேற்க மாட்டார். இந்திய அணியின் முதல் விருப்ப விக்கெட் கீப்பராகவும் இனி அவர் தொடர மாட்டார்.

கீப்பர் பன்ட்

கீப்பர் பன்ட்

இளம் வீரர் ரிஷப் பன்ட் தான் இந்திய அணியின் விக்கெட் கீப்பராக இருப்பார். அதே சமயம் ரிஷப் பன்ட் பயிற்சி பெற தோனி உதவுவார் என்று தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. மேலும், பன்டுக்கு அக்டோபர் மாதத்துடன் 22 வயது ஆகிறது.

வயது 23

வயது 23

ஆஸ்திரேலியாவில் அடுத்த ஆண்டு டி20 உலக கோப்பை தொடர் நடைபெறும் போது அவருக்கு 23 வயது ஆகியிருக்கும். உலக கோப்பை தொடருக்கு தயார் ஆக இந்த ஒரு வருடம் போதுமானதாக இருக்கும் என்று தகவல்கள் உலா வருகின்றன.

அணியில் இடமில்லை

அணியில் இடமில்லை

அதாவது நறுக்கென்று சொல்ல வேண்டுமானால், தோனி அணியில் இருப்பார். ஆனால் 11 பேர் கொண்ட அணியில் இல்லாமல் 15 பேரில் ஒருவராக இருப்பார். அனைத்து போட்டிகளிலும் அவர் களமிறங்காமல் அணிக்கு வழிகாட்டும் நபராக தொடர்வார்.

எல்லாம் முடிந்தது

எல்லாம் முடிந்தது

தோனி ஓய்வு குறித்து அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பையும் வெளியிட வில்லை. ஒருவேளை 19ம் தேதி 15 பேர் கொண்ட இந்திய அணியில் தோனி தேர்வாகவில்லை என்றால் அவரது கிரிக்கெட் காலம் முடிந்தது என்று கூறலாம்.

நவம்பரில் விழா

நவம்பரில் விழா

அதன் பிறகு இளம் வீரர் பன்டுக்கே வாய்ப்பு கொடுக்கப்படும். இருப்பினும் நவம்பர் மாதம் நடைபெற உள்ள முத்தரப்பு தொடரில் தோனிக்கு பிரியா விடை போட்டி வைத்து வழியனுப்பும் யோசனை பிசிசிஐயிடம் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆக மொத்தத்தில் தோனி இனி இந்திய அணியில் இருக்க மாட்டார் என்று கூறத் தொடங்கி விடலாம்.

Story first published: Wednesday, July 17, 2019, 14:36 [IST]
Other articles published on Jul 17, 2019
English summary
BCCI plans to give send off party to Dhoni on november this year, sources said.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X