For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கொரோனாவால் இந்திய தொடர் ரத்தாகுமா? தொடரை காப்பற்றும் முயற்சியில் பி.சி.சி.ஐ. தீவிரம் – IND VS WI

மும்பை: இந்தியாவின் கொரோனா அச்சுறுத்தல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தினசரி பாதிப்பு ஒரு லட்சத்தை தாண்டுகிறது.

இந்த நிலையில், பிப்ரவரி மாதம் கொரோனாவின் தாக்கம் மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது

“3 மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பு” கங்குலி உடல்நிலை எப்படி உள்ளது?; அதிகாரப்பூர்வ அப்டேட் இதோ! “3 மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பு” கங்குலி உடல்நிலை எப்படி உள்ளது?; அதிகாரப்பூர்வ அப்டேட் இதோ!

ஏற்கனவே ரஞ்சி கோப்பை தொடரை பி.சி.சி.ஐ. ஒத்திவைத்துள்ளது. இதனால் இந்தியா சொந்த மண்ணில் விளையாட உள்ள சர்வதேச கிரிக்கெட் தொடருக்கு ஆபத்து வந்தள்ளது.

உச்சத்தில் கொரோனா

உச்சத்தில் கொரோனா

தென்னாப்பிரிக்க சுற்றுப் பயணம் வரும் 23ஆம் தேதி முடிவடைகிறது. இந்த தொடர் முடிந்ததும் பிப்ரவரி மாதம் இந்திய அணி தனது சொந்த மண்ணில் மேற்கிந்தியத் தீவுகள் அணியுடன் 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொணட தொடரில் விளையாட உள்ளது. கொரோனா உச்சமாக இருக்கும் கால கட்டத்தில் இந்த தொடரை எப்படி நடத்துவது என்ற சிக்கல் பி.சி.சி.ஐ.க்கு எழுந்துள்ளது.

6 போட்டிகள்

6 போட்டிகள்

அகமதாபாத், ஜெய்ப்பூர், கொல்கத்தா ஆகிய நகரங்களில் முறையே மூன்று ஒருநாள் போட்டிகளும், கட்டாக், விசாகப்பட்டினம், திருவனந்தபுரம் ஆகிய ஊர்களில் முறையே டி20 போட்டியும் நடைபெற திட்டமிட்டுள்ளது.ஆனால் கொரோனா கால கட்டத்தில் 6 ஊர்களில் ஆட்டங்களை நடத்துவது வீரர்களுக்கு பாதுகாப்பு இருக்காது

பி.சி.சி.ஐ. திட்டம்

பி.சி.சி.ஐ. திட்டம்

இதனால், அனைத்து போட்டிகளையும் ஒரே மைதானத்தில் நடத்த பி.சி.சி.ஐ. திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் வீரர்கள் விமான நிலையங்களுக்கு சென்று வருவதை தடுக்க முடியும் என்று பி.சி.சி.ஐ. முடிவு எடுத்துள்ளது. எனினும் வீரர்களுக்கே பாதுகாப்பு குறைபாடு ஏற்பட்டால் தொடரை ரத்து செய்வதை விட வேறு வழி இல்லை, ஒரு வேலை தொடர் ரத்து செய்யப்பட்டால், வேறு ஒரு காலக் கட்டத்தில் போட்டிகளை நடத்த பி.சி.சி.ஐ. முடிவு எடுக்கும்.

அனுமதி இல்லை

அனுமதி இல்லை

ஆனால், தொடர் ரத்தானால் வருவாய் இழப்பு ஏற்படும் என்பதால் இதனை தடுக்க, தொடரை எப்படியாவது பாதுகாப்பாக நடத்த பி.சி.சி.ஐ. முடிவு எடுத்துள்ளது. மேலும் வீரர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்த தொடர் எப்படி நடைபெறுகிறது என்பதை பொருட்டு தான் ஐ.பி.எல். உள்ளிட்ட மற்ற போட்டிகள் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Friday, January 7, 2022, 20:16 [IST]
Other articles published on Jan 7, 2022
English summary
BCCI Plans to Host Ind vs SI series in single Ground ahead of covid Waveகொரோனாவால் இந்திய தொடர் ரத்தாகுமா? தொடரை காப்பற்றும் முயற்சியில் பி.சி.சி.ஐ. தீவிரம் – IND VS WI
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X