For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இவர்தான் இந்தியாவின் அடுத்த யுவராஜ் சிங்...? 4 ஆண்டு பிரச்னைக்கு முற்றுப்புள்ளி..! பிசிசிஐ அதிரடி

மும்பை: இந்திய அணியில் நிரந்தர மிடில் ஆர்டர் பேட்ஸ்மெனாக ஸ்ரேயாஸ் அய்யர் இருப்பார் என்று பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

ஒருநாள் கிரிக்கெட் அணிகள் வரிசையில் அசைக்க முடியாத அணியாக இந்தியா திகழ்கிறது. பொதுவாக, எந்த அணியாக இருந்தாலும் மிடில் ஆர்டர் வரிசை என்பது முக்கியமான ஒன்றாகும்.

4ம் நிலையில் பேட்டிங் செய்பவர் அவ்வளவு சீக்கிரம் விக்கெட்டை தக்க வைத்து கொள்பவராகவும், தேவைப்படும் நேரத்தில் ஸ்கோர் தருபவராகவும் இருக்க வேண்டும். அதற்கு சிறந்த உதாரணமாக, ஆஸ்திரேலியாவின் மைக் ஹஸ்சி, இந்தியாவின் யுவ்ராஜ் சிங் ஆகியோரை கூறலாம்.

என்னங்க அநியாயம் இது? மூத்த வீரர் அஸ்வினுக்கு இப்படி ஒரு நிலைமையா? எல்லாத்துக்கும் அதுதான் காரணம்! என்னங்க அநியாயம் இது? மூத்த வீரர் அஸ்வினுக்கு இப்படி ஒரு நிலைமையா? எல்லாத்துக்கும் அதுதான் காரணம்!

மிடில் ஆர்டர் முக்கியத்துவம்

மிடில் ஆர்டர் முக்கியத்துவம்

2011ம் ஆண்டு இந்தியா உலக கோப்பையை தட்டி தூக்கியதற்கு காரணம் மிடில் ஆர்டர் தான் என்பது முக்கியம். அதில் சொதப்பியதால் தான் அதற்கு பிறகு வந்த உலக கோப்பைகளில் இந்தியா சோபிக்க வில்லை. இந்திய அணியின் மீது இது பெரும் விமர்சனத்தை கொண்டு வந்தது.

3 ஆண்டுகள் என்னவாயிற்று?

3 ஆண்டுகள் என்னவாயிற்று?

அண்மையில் நடந்து முடிந்த உலக கோப்பையிலும் கூட 4வது யார் என்பதில் நிலையான முடிவுக்கு வராததால் தோற்றது. கடந்த 3 ஆண்டுகளில் மணிஷ் பாண்டே, கே.எல்.ராகுல், அம்பாதி ராயுடு, விஜய் சங்கர் என்று பலரும் 4வது இடத்துக்கு வந்து போயினர்.

முற்றுப்புள்ளி இல்லை

முற்றுப்புள்ளி இல்லை

ஆனாலும், கோலி தலைமையிலான இந்திய அணியால் 4ம் நிலையில் விளையாட கூடிய நிரந்தர வீரரை கண்டுபிடிக்க முடியவில்லை. அதற்கு தற்போது முற்றுப் புள்ளி வைக்கும் வண்ணமாக, நடந்து முடிந்த வெஸ்ட் இண்டீஸ் தொடரில், தமது அசத்தல் பேட்டிங்கில் தேர்வுக் குழுவை கவர்ந்திருக்கிறார் ஸ்ரேயாஸ் அய்யர்.

4ம் நிலை வீரர்

4ம் நிலை வீரர்

தனது அழகான புட் வொர்க்கின் (கால்களை நன்றாக நகர்த்தி ஆடுவது) மூலம் சுழற்பந்து வீச்சையும் வெளுத்து வாங்குகிறார். பதட்டமான நேரத்தில் டென்ஷன் இல்லாமல் செயல்படுகிறார். இவர் தான் தற்போது 4ம் நிலை வீரருக்கு பொருத்தமானவர் என்று கணிக்கப்படுகிறது.

அடுத்த யுவி.?

அடுத்த யுவி.?

வெஸ்ட் இண்டீஸ் தொடரில் 4ம் நிலையில் இறங்கிய ரிஷாப் பன்ட் அந்த வாய்ப்பை கோட்டை விட்டார். ஆனால் 5வது இடத்தில் வந்த ஸ்ரேயாஸ் அய்யர் அற்புதமாக விளையாடினார். எனவே இளம் வீரரான அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் கொடுக்கப்பட்டால், யுவராஜ் சிங்கை போல ஒரு தலைசிறந்த மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக வருவார் என்கிறார் கங்குலி. அதையே கிரிக்கெட் வல்லுநர்கள் பிரதிபலிக்கின்றனர்.

Story first published: Wednesday, August 21, 2019, 12:57 [IST]
Other articles published on Aug 21, 2019
English summary
Bcci plans to place shreyas iyer in 4th place in future.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X