சொந்த செலவில் ஆப்பு வைத்து கொண்ட இந்தியா..தொடரை இழந்ததால் சீனியர்களுக்கு கல்தா.. பி.சி.சி.ஐ. முடிவு

கேப் டவுன்: சூப்பர் ஸ்டாரு யாருனு கேட்டா, சின்ன குழந்தையும் சொல்லும், அப்படி என்ற பாடல் வரிக்கு ஏற்றார் போல, இந்தியாவின் தோல்விக்கு காரணம் யார் என்று கேட்டால் சின்ன குழந்தையும் சொல்லும்..

ஆம், அந்த அளவுக்கு இந்திய அணியின் தூணாக விளங்க வேண்டிய ரஹானே, புஜாரா ஜோடி அணியின் காலை வாரிவிட்டனர்

பந்துவீச்சு.. பந்துவீச்சு.. என கவனம் செலுத்திய இந்திய அணி தங்களது பலமான பேட்டிங்கில் கோட்டை விட்டது. சீனியர்களுக்கு அணி நிர்வாகம் கொடுத்த வாய்ப்பே தற்போது எமனாக மாறிவிட்டது.

“வெளிநாட்டிற்கு சென்றாலே இப்படி தான்”.. இந்திய அணி மீது விராட் கோலி வைத்த முக்கிய குற்றச்சாட்டு!“வெளிநாட்டிற்கு சென்றாலே இப்படி தான்”.. இந்திய அணி மீது விராட் கோலி வைத்த முக்கிய குற்றச்சாட்டு!

பலவீனமான அணி

பலவீனமான அணி

டிவில்லியர்ஸ், ஹசிம் அம்லா, டுபிளஸிஸ், ஸ்டெயின், மார்னே மார்க்கல், பிளாண்டர் போன்ற சிறந்த வீரர்கள் இல்லாத தென்னாப்பிரிக்காவை இம்முறை வீழ்த்த வில்லை என்றால், அதற்கான வாய்ப்பே இனி கிடைக்காது. அதற்கு தகுந்தால் போல், முதல் டெஸ்டை இந்திய அணி வென்றது. கே.எல்.ராகுல் மற்றும் வேகப்பந்துவீச்சாளர்களின் தயவால் இந்திய அணி க்கு அந்த வெற்றி கிடைத்தது.

எச்சரிக்கை

எச்சரிக்கை

முதல் டெஸ்டின் முடிவுக்கு பிறகு கோலி சிறந்த 11 வீரர்களை தேர்வு செய்ய வேண்டும் இல்லை தோல்வி நிச்சயம் என்று கட்டுரை வெளியிட்டு இருந்தோம். ஏன் பல்வேறு முன்னாள் வீரர்களும் புஜாரா, ரஹானேவை நீக்க வேண்டும் என்று குரல் கொடுத்தனர். ஆனால் இந்திய அணி நிர்வாகமோ, பரவாயில்லை இன்னொரு வாய்ப்பு, இன்னொரு வாய்ப்பு என்று வழங்கி, மொத்தமாக தொடரை வெல்லும் இந்தியாவின் வாய்ப்புக்கு சொந்த செலவில் ஆப்பு வைத்து கொண்டது.

பி.சி.சி.ஐ. அதிரடி

பி.சி.சி.ஐ. அதிரடி

ரஹானே, புஜாரா மீது செம கடுப்பில் இருக்கும் பி.சி.சி.ஐ. அவர்களிடம் பேட்டிங் குறித்து விளக்கம் கேட்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், ரஞ்சி கோப்பை மீண்டும் தொடங்கியதும், இருவரும் அதில் கண்டிப்பாக விளையாடி தங்களது ஃபார்மை நிரூபிக்க வேண்டும் என்று பி.சி.சி.ஐ. முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரசிகர்கள் கோபம்

ரசிகர்கள் கோபம்

ரஹானே, புஜாராவை அணியில் தொடர்ந்து தக்க வைத்து கொள்ள வேண்டும் என்று முடிவு எடுத்தது விராட் கோலியா? இல்லை பயிற்சியாளர் டிராவிடா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இதனிடையே, புஜாரா, ரஹானே ஆகியோர் இந்தியாவுக்காக கடைசி டெஸ்டில் விளையாடியதாக நெட்டிசன்கள் சமூக வலைத்தளத்தில் டிரெண்ட் செய்து வருகின்றனர்.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
BCCI Plans to take tough action against Rahane and Pujara சொந்த செலவில் ஆப்பு வைத்து கொண்ட இந்தியா..தொடரை இழந்ததால் சீனியர்களுக்கு கல்தா.. பி.சி.சி.ஐ. முடிவு
Story first published: Friday, January 14, 2022, 19:29 [IST]
Other articles published on Jan 14, 2022
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X