For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

பி.சி.சி.ஐ.க்கு விரைவில் புதிய தலைவர்..!! கங்குலியின் இடத்துக்கு வருகிறார் சச்சின்..!! விவரம் இதோ..!

மும்பை: கடந்த 2019ஆம் ஆண்டு பி.சி.சி.ஐ. தலைவராக கங்குலி பதவியேற்றார். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் மகனான ஜெய்ஷா செயலாளராக பொறுப்பேற்றார்

இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், ரசிகர்களின் நாயகனான கங்குலி தலைவர் பதவியையும் ஏற்றதும், இந்திய கிரிக்கெட் பல உச்சத்தை தொடும் என எதிர்பார்க்கப்பட்டது.

அதற்கு ஏற்றார் போல் கங்குலியும், நிர்வாக பொறுப்பில் பல மாற்றங்களை ஏற்படுத்தினார். பி.சி.சி.ஐ.க்கு பல கோடி லாபத்தை பெற்று தந்தார்

அப்பா மாதிரி நீயும் ஆட்டோ ஓட்டு..!! இந்திய வீரர் முகமது சிராஜை காப்பாற்றிய கோலி..!! வெளிவராத உண்மை..அப்பா மாதிரி நீயும் ஆட்டோ ஓட்டு..!! இந்திய வீரர் முகமது சிராஜை காப்பாற்றிய கோலி..!! வெளிவராத உண்மை..

கங்குலியால் லாபம்

கங்குலியால் லாபம்

நிர்வாக திறமையில் கங்குலி கலக்கினார். கங்குலியின் அழுத்தத்தால் அடுத்த 9 ஆண்டுகளில் 4 ஐ.சி.சி. தொடர்கள் இந்தியாவில் நடைபெறுகிறது. மேலும், ஐ.சி.சி. தொடர்களை நடத்தும் போது மத்திய அரசு விதிக்கும் வரியை ஐ.சி.சி.யே கட்ட வேண்டும் என்று கங்குலி ஒப்பு கொள்ள வைத்தார். மேலும் ஐ.பி.எல். போட்டிகளை பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டு அதன் மூலம் பி.சி.சி.ஐ.க்கு பல ஆயிரம் கோடி ரூபாயை பெற்று தந்துள்ளார்

காய் நகர்த்திய கங்குலி

காய் நகர்த்திய கங்குலி

வீரர்கள், வீராங்கனைகளுக்கு ஊதிய உயர்வு, ரஞ்சி கோப்பை வீரர்களுக்கு ஊதிய உயர்வு, மாற்றுதிறனாளி கிரிக்கெட் அங்கீகரிப்பு என பல செயல்களை கங்குலி செய்தார். ஆனால், அதே நேரத்தில் ரவி சாஸ்த்ரி, விராட் கோலியையும் பதவியிலிருந்து நீக்கும் வேலையையும் அமைதியாக மேற்கொண்டார். இதன் காரணமாக ரவி சாஸ்த்ரி பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து விலகி சென்றார்.

இந்திய அணிக்கு சரிவு

இந்திய அணிக்கு சரிவு

இதே போன்று விராட் கோலி கேப்டன் பதவியிலிருந்து விலக கங்குலியும், ஜெய் ஷாவும் முக்கிய பங்கு ஆற்றியதாக தகவல் வெளியாகின. இதனால் இந்திய அணி பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. அணிக்குள் விரிசலும் ஏற்பட்டது. இதனால் கங்குலி, ஜெய் ஷா கூட்டணி மீது ரசிகர்கள் கடும் கோபத்தில் உள்ளனர். நன்றாக இருந்த இந்திய அணிக்குள் அரசியல் வந்துவிட்டதாக ரசிகர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

Recommended Video

Indian Teamல் Sachin Tendulkar? BCCI கொடுக்க போகும் பதவி | OneIndia Tamil
அடுத்த தலைவர் சச்சின்?

அடுத்த தலைவர் சச்சின்?

இந்த நிலையில், பி.சி.சி.ஐ. தலைவர் கங்குலி, ஜெய்ஷாவின் பதவிக்காலம் வரும் அக்டோபர் மாதம் முடிவுக்கு வருகிறது. விராட் கோலி விவகாரத்தில் தனது பெயர் கெட்டுள்ளதால் அதனை சரிசெய்ய நினைக்கும் ஜெய்ஷா, கங்குலியை ராஜினாமா செய்ய வைத்துவிட்டு, அந்த இடத்திற்கு சச்சினை கொண்டு வரலாம் என்று திட்டம் போட்டுள்ளார். இது தொடர்பாக சச்சினை சந்தித்து ஜெய்ஷாவும் பேசியுள்ளார். தற்போது சச்சின் முடிவை கூறிவிட்டால், ஜெய்ஷா தனது பிளானை செயல்படுத்துவார்.

Story first published: Tuesday, January 18, 2022, 17:14 [IST]
Other articles published on Jan 18, 2022
English summary
BCCI Politics Jay shah Plans to replace Sachin as new President பி.சி.சி.ஐ.க்கு விரைவில் புதிய தலைவர்..!! கங்குலியின் இடத்துக்கு வருகிறார் சச்சின்..!! விவரம் இதோ..!
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X