For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஐபிஎல் அப்டேட்... பிசிசிஐ அடித்த அந்தர்பல்டி.. யாருமே எதிர்பார்க்கல.. ஒட்டுமொத்த பேச்சும் வீண் ஆனதா?

மும்பை: இந்தாண்டு ஐபிஎல் தொடரே முடிவு பெறாத சூழலில் அடுத்த ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடர் குறித்து முக்கிய முடிவை எடுத்துள்ளது பிசிசிஐ.

இந்தாண்டு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த ஐபிஎல் தொடர் கொரோனா அச்சுறுத்தல் அதிகமானதால் பாதியில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

WTC Final 2021: கிங் கோலிக்கு.. காத்திருக்கும் 'நான்கு' குடைச்சல்-விட்டா வாரி சுருட்டிட்டு போயிடும்WTC Final 2021: கிங் கோலிக்கு.. காத்திருக்கும் 'நான்கு' குடைச்சல்-விட்டா வாரி சுருட்டிட்டு போயிடும்

இதனை மீண்டும் நடத்தும் பேச்சுவார்த்தைகளில் பிசிசிஐ ஈடுபட்டுள்ள சூழலில் அடுத்த வருட ஐபிஎல் குறித்த பேச்சுக்கள் அதிகளவில் எழுந்து வருகிறது.

புதிய அணிகள் சேர்ப்பு

புதிய அணிகள் சேர்ப்பு

ஐபிஎல் தொடரில் இதுவரை 8 அணிகள் பங்கேற்று விளையாடி வருகிறது. இதனை அடுத்த சீசனில் இருந்து 10 அணிகளாக உயர்த்த பிசிசிஐ திட்டமிட்டு வந்தது. இதற்காக 2022ம் ஆண்டில் ஐபிஎல் தொடருக்கு முன்னதாக மெகா ஏலம் நடத்தப்பட்டு பிரம்மாண்ட அளவில் வீரர்கள் ஏலம் எடுக்கப்படவுள்ளதாகவும் கூறப்பட்டு வந்தது.

அயல்நாட்டு வீரர்கள்

அயல்நாட்டு வீரர்கள்

அதே போல அணியின் ப்ளேயிங் 11ல் அயல்நாட்டு வீரர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்படும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. தற்போது வரை 4 வெளிநாட்டு வீரர்களே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து பேசியிருந்த முன்னாள் வீரர்கள் சஞ்சய் மஞ்ச்ரேக்கர், ஆகாஷ் சோப்ரா உள்ளிட்டோர், ஐபிஎல்-ல் 10 அணிகள் வந்தால், ஒவ்வொரு அணியின் ப்ளேயிங் 11லும் 5 அயல்நாட்டு வீரர்கள் ஆட அனுமதிக்க வேண்டும். அப்போதுதான் அனைத்து அணிகளும் சம பலத்துடன் இருக்கும் எனத்தெரிவித்துள்ளனர்.

பல்டி அடித்த பிசிசிஐ

பல்டி அடித்த பிசிசிஐ

இந்நிலையில் இந்த பேச்சுக்களுக்கு பிசிசிஐ ஒரே அடியாக முற்றுப்புள்ளி வைத்துள்ளது. அதாவது 2022ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் 2 புதிய அணிகளை சேர்க்கும் முடிவை ஒத்திவைத்துள்ளது. நடப்பாண்டு ஐபிஎல் தொடரை மீண்டும் எப்படி நடத்துவது, எங்கு நடத்துவது என்ற குழப்பம் பிசிசிஐயில் பெரியளவில் உள்ளதால் அடுத்தாண்டுக்கான ஐபிஎல் தொடரில் புதிய அணிகள் சேர்க்கும் திட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தகவல்

தகவல்

இதுகுறித்து வெளியாகியுள்ள தகலில், அடுத்தாண்டு ஐபிஎல் தொடரில் புதிய அணிகள் சேர்ப்பது குறித்து பேச இது சரியான நேரம் அல்ல. தற்போதை சூழலில் நடப்பாண்டு ஐபிஎல் தொடரை மீண்டும் தொடங்கும் பேச்சுவார்த்தைகள் தான் முழு வீச்சில் சென்றுக்கொண்டிருக்கிறது. அடுத்தாண்டு ஐபிஎல் குறித்தும் மெகா ஏலம் குறித்தும் எதுவும் ஆலோசனை நடைபெறவுள்ளது எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.

Story first published: Tuesday, May 18, 2021, 16:38 [IST]
Other articles published on May 18, 2021
English summary
BCCI Postpones the Plan of adding 2 more Teams For Next Mega Auction After Suspension Of IPL 2021
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X