For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

2 புதிய அணிகள்.. போட்டிப்போடும் 4 "மெகா" கோடீஸ்வரர்கள்.. வியக்க வைக்கும் ஐபிஎல் "ப்ளூ பிரிண்ட்"

மும்பை: ஐபிஎல் தொடருக்கான புதிய ப்ளூபிரிண்ட்டை பிசிசிஐ தயார் செய்துள்ளது. இதில், ஏகப்பட்ட மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

கொரோனா காரணமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த, ஐபிஎல் 2021 தொடரின் மீதமுள்ள போட்டிகள் அனைத்தும் வரும் செப்டம்பர் மாதம் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்குகின்றன.

இந்நிலையில், ஐபிஎல்லுக்கான புதிய அறிவிப்புகள் மற்றும் விதிமுறைகளை பிசிசிஐ தயார் செய்துள்ளது. இதில், பல மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன

ஐபிஎல்-ல் மதிக்கவே இல்ல... இலங்கை பக்கம் திரும்பிய சீனியர் வீரர்.. ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி! ஐபிஎல்-ல் மதிக்கவே இல்ல... இலங்கை பக்கம் திரும்பிய சீனியர் வீரர்.. ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி!

 2021 டூ 2022 ஜனவரி

2021 டூ 2022 ஜனவரி

இந்தியன் பிரீமியர் லீக்கின் இந்த புதிய Blue Print-ல் இரண்டு புதிய அணிகளை சேர்ப்பது, வீரர்களை தக்கவைத்தல், ஒரு மெகா ஏலம், ஒவ்வொரு அணிகளின் செலவுத் தொகையை அதிகரித்தல், மற்றும் ஊடக ஒளிபரப்பு உரிமை டெண்டர் ஆகியவை ஆகஸ்ட் 2021 மற்றும் ஜனவரி 2022 க்கு இடையில் நிறைவேற்றப்பட முடிவு செய்யப்பட்டுள்ளது.

 2 அணிகளை வாங்க போட்டி

2 அணிகளை வாங்க போட்டி

கொல்கத்தாவை தளமாகக் கொண்ட ஆர்.பி.-சஞ்சீவ் கோயங்கா குழு, அகமதாபாத்தை தலைமையிடமாகக் கொண்ட அதானி குழு, ஹைதராபாத்தை மையமாகக் கொண்ட அரவிந்தோ பார்மா லிமிடெட், மற்றும் குஜராத்திலிருந்து செயல்படும் டோரண்ட் குழுமம் ஆகியவை புதிய 2 ஐபிஎல் அணிக்கான உரிமத்தை வாங்க ஆவலுடன் உள்ளார்கள்.

 அடுத்து ரூ.100

அடுத்து ரூ.100

அதேபோல், ஒவ்வொரு அணிகளும் செலவு செய்யும் அதிகபட்ச தொகையான ரூ .85 கோடியை, ரூ .90 கோடியாக அதிகரிக்கவும் பிசிசிஐ முடிவு செய்துள்ளது. ஆக, ஒட்டுமொத்தமாக 10 அணிகளுக்கும் சேர்த்து 50 கோடி கூடுதலாக ஒதுக்கப்படும். இதில், 75% தொகையை கட்டாயமாக செலவிட வேண்டும். அடுத்த மூன்று ஆண்டுகளில், இந்த தொகை ரூ .90 கோடியிலிருந்து ரூ .95 கோடியாகவும், இறுதியில் 2024 சீசனுக்கு ரூ .100 கோடியாகவும் உயர்த்தப்படுமாம்.

 ஏலத்திற்கு முன்

ஏலத்திற்கு முன்

மேலும், இனி ஒவ்வொரு அணிகளும் அதிகபட்சம் நான்கு வீரர்களை தக்க வைத்துக் கொள்ளலாம். அதில், 3 இந்திய வீரர், 1 வெளிநாட்டு வீரர் என்று இருக்கலாம், அல்லது 2 இந்திய வீரர்கள் 2 வெளிநாட்டு வீரர்கள் என்றும் இருக்கலாம். வீரர்களை தக்கவைத்துக்கொள்ளும் உரிமையாளர்கள் ஏலத்தில் கலந்து கொள்வதற்கு முன், குறிப்பிட்ட தொகையை அவர்களின் பணப்பையில் இருந்து செலவழிக்க வேண்டும். மூன்று வீரர்களை தக்க வைத்துக் கொண்டால் ரூ .15 கோடி, ரூ .11 கோடி மற்றும் ரூ .7 கோடி என்ற அடிப்படையில் செலவு செய்யலாம். இரண்டு வீரர்களைத் தக்க வைத்துக் கொண்டால் ரூ .12.5 கோடி மற்றும் ரூ .8.5 கோடி செலவு செய்யலாம். ஒரு வீரரை மட்டும் தக்க வைக்க விரும்பினால் ரூ.12.5 கோடி செலவு செய்ய வேண்டும்.

 அதிகரிக்கும் சவால்

அதிகரிக்கும் சவால்

பிசிசிஐ-யின் இந்த ஐபிஎல் ப்ளூபிரிண்ட் அனைத்தும் ஆகஸ்ட் 2021லிருந்து ஜனவரி 2022க்குள் நடத்தி முடிக்கப்படும். அதாவது, ஐபிஎல் 2022க்கான மெகா ஏலம் ஜனவரி 2022க்குள் முடிந்துவிடும். இதில், இரண்டு புதிய அணிகள் இணைக்கப்பட்டு, பல்வேறு வீரர்கள் அங்கு மாற்றப்படலாம். இன்னும் களம் சூடாகும். போட்டிகளும் அதிகரிக்கும். சவால்களும் அதிகரிக்கும்.

Story first published: Monday, July 5, 2021, 10:35 [IST]
Other articles published on Jul 5, 2021
English summary
BCCI prepares blueprint brand new IPL franchises - பிசிசிஐ
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X