For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

நான் எப்போங்க இதை பண்னேன்..!! பொய் பேசாதீங்க.. !! கடுப்பான பி.சி.சி.ஐ. தலைவர் கங்குலி

கொல்கத்தா: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலிக்கும், பி.சி.சி.ஐ. தலைவர் கங்குலிக்கும் பிரச்சனை ஏற்பட்டது அனைவருக்கும் தெரிந்ததே.

இதனால் விராட் கோலி தனது கேப்டன் பதவியை இழந்தார். இதோடு பிரச்சினை முடிந்தவிடும் என்று ரசிகர்கள் நினைத்தனர்

ஆனால், இருவருக்கும் இடையே பிரச்சினை இன்னும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.

ஐ.பி.எல். மெகா ஏலம்.. வீரர்களின் ஆரம்ப விலை பட்டியல் வெளியீடு..!! முழு விவரம் இதோ..!!ஐ.பி.எல். மெகா ஏலம்.. வீரர்களின் ஆரம்ப விலை பட்டியல் வெளியீடு..!! முழு விவரம் இதோ..!!

கோலிக்கு நோட்டீஸ்?

கோலிக்கு நோட்டீஸ்?

கடந்த டிசம்பர் மாதம் பத்திரிகை சந்திப்பின் போது கங்குலி உங்களிடம் கேப்டன் பதவியை விட்டு செல்ல வேண்டாம் என கூறினாரா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, அப்படி யாரும் கூறவில்லை என்று கோலி பதில் அளித்தார். இது பெரும் சர்ச்சையான நிலையில், கங்குலி பொய் கூறிவிட்டதாக ரசிகர்கள் குற்றஞ்சாட்டினர். இந்த நிலையில், தங்களுடைய பேச்சுக்கு விளக்கம் கேட்டு கோலிக்கு பி.சி.சி.ஐ. நோட்டீஸ் அனுப்பியதாக செய்திகள் வெளியானது

மறைமுக பதில்

மறைமுக பதில்

இதற்கு விராட் கோலி மறைமுக பதில் அளிக்கும் விதமாக , முதல் ஒருநாள் போட்டியின் போது தென்னாப்பிரிக்க கேப்டன் பெவுமாவிடம் இனி நான் கேப்டன் இல்லை. யாருக்கும் கைக்கட்டி நின்று விளக்கம் அளிக்கும் பொறுப்பு எனக்கு இல்லை என்று கூறி ஸ்லுஜ் செய்தார். இது கங்குலிக்கு அளிக்கப்பட்ட பதிலாகவே காணப்பட்டது.

செய்தியில் உண்மையில்லை

செய்தியில் உண்மையில்லை

இந்த நிலையில், விராட் கோலிக்கு பி.சி.சி.ஐ. நோட்டீஸ் அனுப்பியதாக வெளியான செய்தியை பி.சி.சி.ஐ. தலைவர் கங்குலி மறுத்துள்ளார். அப்படி ஒரு சம்பவமே நடைபெறாத போது, எப்படி இவ்வாறு செய்தி வெளியானது என்று கங்குலி அதிருப்தியில் உள்ளார்

கங்குலிக்கு அழுத்தம்

கங்குலிக்கு அழுத்தம்

தமது பெயரை கெடுக்க, பி.சி.சி.ஐ.யில் உள்ள சிலரே இவ்வாறு பொய் செய்திகளையும், தகவல்களையும் வெளியிடுவதாக கங்குலி நினைக்கிறார். தமக்கு இது போன்று மறைமுக அழுத்தங்களை அளித்து தம்மை பதிவியிலிருந்து ராஜினாமா செய்ய வைக்க காய் நகர்த்தி வருவதை அறிந்த கங்குலி, இதை முறியடிக்கும் விதமாக இந்த செய்தியில் உண்மை அல்ல என்று வெளிப்படையாக அறிவித்துள்ளார்.

Story first published: Saturday, January 22, 2022, 18:25 [IST]
Other articles published on Jan 22, 2022
English summary
BCCI President Ganguly Rejected the news of Sending Showcause notice to Ganguly (கங்குலி கோலி விவகாரம்) Ganguly feels some Inside Job is going in bcci against him
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X