டி20 உலகக்கோப்பை தொடர்.. அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் கங்குலி.. ரசிகர்களுக்கு இரட்டை விருந்து ரெடி!

மும்பை: டி20 உலகக்கோப்பையை நடத்துவது குறித்து பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

கடந்தாண்டு நடைபெறவிருந்த டி20 உலகக்கோப்பை தொடர் கொரோனா காரணமாக இந்தாண்டு ஒத்திவைக்கப்பட்டது.

இன்று ஐபிஎல் அட்டவணை வெளியீடு? ஐசிசி விதித்த கெடு முடிந்தது.. முக்கிய ஆலோசனையில் பிசிசிஐ! இன்று ஐபிஎல் அட்டவணை வெளியீடு? ஐசிசி விதித்த கெடு முடிந்தது.. முக்கிய ஆலோசனையில் பிசிசிஐ!

ஐபிஎல் 2020 தொடரை வெற்றிகரமாக நடத்தி முடித்த பிசிசிஐ-க்கு டி20 உலகக்கோப்பை தொடரை நடத்தும் வாய்ப்பை வழங்கியது ஐசிசி அமைப்பு.

ஐசிசி காலக்கெடு

ஐசிசி காலக்கெடு

இந்தாண்டு அக்டோபர் மாதத்தில் டி20 உலகக்கோப்பை தொடர் இந்தியாவில் தான் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் அதிகமாக இருப்பதால் தொடரை இங்கு நடத்த பல நாடுகளை சேர்ந்த முன்னாள் வீரர்கள் அதிருப்தி தெரிவித்தனர். இதனையடுத்து பிசிசிஐ பதிலளிக்க ஜூன் 27ம் தேதி வரை கால அவகாசம் கொடுத்தது ஐசிசி. எனினும் இந்தியாவில் தான் டி20 உலக்கோப்பை தொடர் நடைபெறும் என பிசிசிஐ வட்டாரங்கள் திட்டவட்டமாக தெரிவித்து வந்தன.

பிசிசிஐ பதில்

பிசிசிஐ பதில்

இந்நிலையில் இன்றுடன் ஐசிசி வழங்கிய காலக்கெடு முடிவடைந்துள்ளதால், பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தனது முடிவை அறிவித்துள்ளார். அதில், டி20 உலகக்கோப்பை தொடரை இந்தியாவில் நடத்தவில்லை என்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த முடிவு செய்திருப்பதாகவும் அதிகாரப்பூர்வமாக ஐசிசி-யிடம் பதிலளித்துவிட்டோம் எனக்கூறியுள்ளார். இதனால் ஐபிஎல் தொடருடன் சேர்ந்து டி20 உலகக்கோப்பையும் அமீரகத்தில் நடைபெறுவது உறுதியாகியுள்ளது.

வெளியான அட்டவணை

வெளியான அட்டவணை

இதனிடையே டி20 உலகக்கோப்பை தொடர் நடைபெறும் தேதிகள் குறித்து தகவல்கள் கசிந்துள்ளது. அதாவது, அக்டோபர் 17ம் தேதி தொடங்கி நவம்பர் 14ம் தேதி இறுதிப்போட்டி நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஐபிஎல் தொடர் செப்டம்பர் 19ம் தேதி முதல் அக்டோபர் 15ம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அப்படி பார்த்தால் ஐபிஎல் முடிந்த இரண்டே நாட்களில் டி20 உலகக்கோப்பை நடைபெறவுள்ளதாக தெரிகிறது.

ஆட்ட விவரங்கள்

ஆட்ட விவரங்கள்

டி20 உலகக்கோப்பை தொடர் 2 நாடுகளில் நடத்தப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி தகுதிச்சுற்று ஆட்டங்கள் அனைத்தும் ஓமனில் நடைபெறவுள்ளது. இந்த போட்டிகள் அக்டோபர் 17ம் தேதி முதல் அக்டோபர் 24ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதன் பிறகு சூப்பர் 12 பிரிவு ஆட்டங்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்படவுள்ளது. இதற்காக அங்குள்ள 3 மைதானங்களும் தயார் படுத்தப்படவுள்ளன.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
BCCI President Sourav Ganguly officially announced T20 World Cup to be shifted from India to UAE
Story first published: Monday, June 28, 2021, 17:40 [IST]
Other articles published on Jun 28, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X