ஐபிஎல் ப்ளான் வெற்றியா? பேச்சுவார்த்தைக்கு சென்ற இடத்தில் ஜாலி டூர்.. மாஸ் காட்டும் கங்குலி!

துபாய்: ஐபிஎல் தொடரின் நிலை தெரியாமல் ரசிகர்கள் குழம்பி வரும் சூழலில் பிசிசிஐ தலைவர் கங்குலி ஜாலியாக ஊர் சுற்றி வருகிறார்.

கொரோனா காரணமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ள ஐபிஎல் தொடர் மீண்டும் எப்போது நடக்கும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்துள்ளனர்.

8- 9 நாட்களாக தூங்கல.. கிரிக்கெட்டே போச்சினு நினச்ச.. ஐபிஎல்-ல் சந்தித்த வேதனைகள்..அஸ்வின் ஓபன் டாக்8- 9 நாட்களாக தூங்கல.. கிரிக்கெட்டே போச்சினு நினச்ச.. ஐபிஎல்-ல் சந்தித்த வேதனைகள்..அஸ்வின் ஓபன் டாக்

டெல்லி, ஆர்சிபி, சிஎஸ்கே, மும்பை என ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த 4 அணிகள் புள்ளி பட்டியலில் டாப்பில் உள்ளதால் எதிர்பார்ப்பு கூடியுள்ளது என்றே கூறலாம்.

 ஐபிஎல் தொடர்

ஐபிஎல் தொடர்

14வது ஐபிஎல் தொடரில் இதுவரை 29 போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில் இன்னும் 31 போட்டிகள் நடைபெறவேண்டியுள்ளது. இந்த போட்டிகளை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்படும் என பிசிசிஐ அறிவித்துள்ளது. இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் தொடர் செப்.14ம் தேதி முடிவடைகிறது. இதனால் ஐபிஎல் போட்டிகளை ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்.19ம் தேதி முதல் அக்டோபர் 10ம் தேதி வரை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் இதுகுறித்த அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

வெயில் பிரச்னை

வெயில் பிரச்னை

அமீரகத்தில் கடும் வெயில் நிலவி வருவதால் டபுள் ஹெட்டர்ஸ்களை குறைத்து நாட்களை அதிகரிக்கலாம் என்ற முடிவும் பிசிசிஐ-யிடம் உள்ளது. அதாவது மதிய நேரத்தில் வீரர்கள் விளையாடினால் வெயில் கடுமையாக இருக்கும். எனவே செப் 18ம் தேதி முதல் அக்டோபர் 18ம் தேதி வரை போட்டிகளை நடத்தப்படலாம் எனக்கூறப்படுகிறது. எனினும் டி20 உலகக்கோப்பை அக்டோபர் மாதத்தில் வருவதால் அதிலும் ஒரு சிக்கல் உள்ளது.

அமீரகம் பயணம்

அமீரகம் பயணம்

இந்த அனைத்து பிரச்னைகள் குறித்து அமீரக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி கடந்த ஜூன் 2ம் தேதி துபாய் சென்றடைந்தார். அங்கு நடக்கும் பேச்சுவார்த்தையை பொறுத்துதான் ஐபிஎல் அட்டவணை வெளியிடப்படும் எனக்கூறப்படுகிறது. இந்நிலையில் ஒருபுறம் பேச்சு வார்த்தை நடக்க மறுபுறம் கங்குலி ஜாலி டூர் அடித்து வருகிறார். மேலும் அதுகுறித்த புகைப்படங்களையும் இன்ஸ்டாவில் வெளியிட்டு வருகிறார்.

இன்பச்சுற்றுலா

இன்பச்சுற்றுலா

அந்தவகையில் சமீபத்தில் துபாயில் ரேஸ் கார் ஒன்றை ஓட்டி மகிழ்ந்துள்ளார் கங்குலி. கார் ஓட்டுவதற்கு முன்னதாக எடுக்கப்பட்ட புகைப்படத்தை அவர் வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், ஐபிஎல் அப்டேட் கேட்டால் ஜாலி டூர் அடித்து வருகிறீர்களே என கிண்டல் செய்து வருகின்றனர். மற்றொரு புறம் கங்குலி அமீரகத்திற்கு சென்ற வேலையை வெற்றிகரமாக முடித்துவிட்டதாக கூறப்படுகிறது.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
BCCI President Sourav Ganguly drives racing car in Dubai
Story first published: Sunday, June 6, 2021, 14:54 [IST]
Other articles published on Jun 6, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X