For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி இங்கிலாந்து பயணம்... 4 நாடுகள் தொடர் குறித்து ஆலோசனை

Recommended Video

Ind vs NZ: Kohli surpasses Ganguly in elite captaincy list

மும்பை : பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி இங்கிலாந்திற்கு பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் மற்றும் கிரிக்கெட் ஆஸ்திரேலியாவுடன் தன்னுடைய 4 நாடுகள் கிரிக்கெட் தொடர் குறித்து அவர் ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.

கொல்கத்தாவிலிருந்து நேற்று இங்கிலாந்திற்கு கங்குலி புறப்பட்டு சென்றுள்ள நிலையில் அங்கு வரும் நாட்களில் மூன்று நாடுகளின் அதிகாரிகளும் இந்த 4 நாடுகள் கிரிக்கெட் தொடர் குறித்து விவாதிக்க உள்ளனர்.

பிசிசிஐ தலைவராக பங்கேற்றவுடன் 4 நாடுகள் தொடர் குறித்த தனது அறிவிப்பை கங்குலி வெளியிட்ட நிலையில், இந்த தொடரில் இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் மற்றொரு நாடு பங்கேற்கும் என்று தெரிவிக்கப்பட்டது. இதற்கு இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஒப்புதல் அளித்துள்ள நிலையில் ஐசிசியிடம் ஒப்புதல் கேட்கப்பட்டுள்ளது.

4 நாடுகள் தொடர் குறித்த யோசனை

4 நாடுகள் தொடர் குறித்த யோசனை

பிசிசிஐ தலைவராக சவுரவ் கங்குலி பொறுப்பேற்றவுடன் அதிரடியான சில முடிவுகள், யோசனைகளை அவர் அளித்து வருகிறார். அணியிலும் பல மாற்றங்களை செய்து வருகிறார். இவரது தலைமையில் வங்கதேசத்துடன் நடத்தப்பட்ட பகலிரவு போட்டி சர்வதேச அளவில் கவனத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தான் பதவியேற்ற சில மாதங்களில் ஆண்டுதோறும் நடத்தப்படும்வகையில் 4 நாடுகள் தொடர் குறித்த தனது யோசனையை கங்குலி வழங்கியுள்ளார்.

ஐசிசி ஒப்புதலுக்கு கோரிக்கை

ஐசிசி ஒப்புதலுக்கு கோரிக்கை

இந்த 4 நாடுகள் தொடர் குறித்து ஐசிசியிடம் ஒப்புதலுக்காக கேட்கப்பட்டுள்ளது. இதனிடையே கடந்த டிசம்பரில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டங்களில் பிசிசிஐ அதிகாரிகள் கிரிக்கெட் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் போர்டு அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டனர். அவர்கள் இதற்கான தொடர் பேச்சுவார்த்தையில் பங்குபெற விருப்பம் தெரிவித்திருந்தனர்.

"கங்குலியின் புதுமையான ஐடியா"

டிசம்பரில் நடத்தப்பட்ட ஆலோசனைக்கு பிறகு இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு, இந்த புதிய முயற்சிக்கு வரவேற்பு தெரிவித்து ஐசிசி உறுப்பினர்களுடன் அடுத்தகட்ட ஆலோசனைக்கு தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளது. இதேபோல இந்த முயற்சிக்கு ஆதரவு தெரிவித்துள்ள கிரிக்கெட் ஆஸ்திரேலியா, பிசிசிஐ தலைவராக பொறுப்பேற்ற சில மாதங்களில் கங்குலியின் இந்த புதுமையான முயற்சி, புதிய முயற்சிகளில் அவரது ஆர்வத்தை வெளிப்படுத்துவதாக தெரிவித்திருந்தது.

இசிபி, சிஏ உறுப்பினர்களுடன் ஆலோசனை

இசிபி, சிஏ உறுப்பினர்களுடன் ஆலோசனை

இந்நிலையில் கொல்கத்தாவிலிருந்து இங்கிலாந்திற்கு நேற்று புறப்பட்டு சென்றுள்ள சவுரவ் கங்குலி அங்கு இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் மற்றும் கிரிக்கெட் ஆஸ்திரேலியா தலைவர்களுடன் இந்த 4 நாடுகள் கிரிக்கெட் தொடர் குறித்து ஆலோசனை மேற்கொள்ளவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த தொடரில் இடம்பெறவுள்ள மற்றொரு நாடு, ஐசிசி ஒப்புதல் உள்ளிட்டவை குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

காலையில் சதம் அடிப்பேன்... மாலையில் பானிப்பூரி விற்பேன்... இளம் வீரரின் சாதனை பயணம்

Story first published: Thursday, February 6, 2020, 15:16 [IST]
Other articles published on Feb 6, 2020
English summary
BCCI president Sourav Ganguly has headed to England to discuss 4 Nation Series
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X