For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

“நீங்களே இப்படி செய்யலாமா”.. இந்திய மகளிர் அணி குறித்து கங்குலி போட்ட ட்வீட்.. ரசிகர்கள் கொந்தளிப்பு

மும்பை: இந்திய மகளிர் அணி குறித்து சவுரவ் கங்குலி பதிவிட்ட ட்வீட்டால் ரசிகர்கள் கோபத்தில் விமர்சித்து வருகின்றனர்.

இங்கிலாந்தின் பிர்மிங்கம் நகரில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த காமன்வெல்த் போட்டிகள் நடைபெற்று முடிந்துள்ளன.

இந்த ஆண்டு மகளிர் கிரிக்கெட்டும் அதில் இணைக்கப்பட்டதால், பெரும் எதிர்பார்ப்பு எழுந்திருந்தது.

காமன்வெல்த்தில் இந்தியா அபாரம்.. குத்துச்சண்டையில் 6 பதக்கம் உறுதி.. வெற்றியுடன் தொடங்கிய பிவி சிந்துகாமன்வெல்த்தில் இந்தியா அபாரம்.. குத்துச்சண்டையில் 6 பதக்கம் உறுதி.. வெற்றியுடன் தொடங்கிய பிவி சிந்து

காமன்வெல்த் கிரிக்கெட்

காமன்வெல்த் கிரிக்கெட்

அதன்படி இந்திய மகளிர் அணி பாகிஸ்தான், நியூசிலாந்து என முன்னணி அணிகளை அடுத்தடுத்து வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு சென்றது. ஆனால் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் துரதிஷ்வசமாக தோற்றதால் வெள்ளிப்பதக்கமே கிடைத்தது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 20 ஓவர்களில் 161/8 ரன்களை சேர்த்தது.

இந்திய அணி தோல்வி

இந்திய அணி தோல்வி

இதன்பின்னர் ஆடிய இந்திய அணி அதிரடியாக ரன் குவித்த போதும், மறுபுறம் விக்கெட்கள் வேகமாக சரிந்தன. இதனால் 19.3 ஓவர்களில் 152 ரன்களுக்கெல்லாம் இந்திய மகளிர் அணி ஆல் அவுட்டானது. இதன்மூலம் 9 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து தங்கப்பதக்கத்தை தவறவிட்டது. எனினும் இந்திய அணி வெள்ளிப்பதக்கம் வென்றதற்கு நாடுகள் முழுவதும் இருந்து பாராட்டுக்கள் குவிந்தன.

 கங்குலியின் ட்வீட்

கங்குலியின் ட்வீட்

இந்நிலையில் பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலியின் பதிவு மட்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இதுகுறித்து ட்வீட் போட்டிருந்த அவர், " வெள்ளிப்பதக்கம் வென்ற இந்திய மகளிர் அணிக்கு வாழ்த்துக்கள். ஆனால் இன்று அவர்கள் மிகுந்த வருத்தத்துடன் தான் வீட்டிற்கு செல்ல வேண்டும். ஏனென்றால் அவர்களுடைய ஆட்டத்தில் சொதப்பியுள்ளனர் என்பது போல் குறிப்பிட்டிருந்தார்.

குவியும் விமர்சனங்கள்

குவியும் விமர்சனங்கள்

இதனை பார்த்த ரசிகர்கள், " பிசிசிஐ-ன் தலைவராக இருந்துக்கொண்டு நாட்டு வீராங்கனைகளுக்கு பாராட்டுக்களை தெரிவித்து ஊக்கப்படுத்த வேண்டிய கங்குலி, அவர்களை தாழ்த்தி பேசுவதா?, வெள்ளிப்பதக்கம் வென்றதற்கு அவர்கள் பெருமைதான் படுவார்கள். நீங்களே அவர்களை விமர்சிக்காதீர்கள், ஒரு தலைவராக அது நல்லதல்ல? என ரசிகர்கள் கோபத்தில் விமர்சித்து வருகின்றனர்.

Story first published: Wednesday, August 10, 2022, 14:45 [IST]
Other articles published on Aug 10, 2022
English summary
Sourav Ganguly tweet on Indian women's team won silver ( காமன்வெல்த் குறித்து சவுரவ் கங்குலி பேச்சு ) காமன்வெல்த் போட்டியில் இந்திய மகளிர் அணி வெள்ளிப்பதக்கம் வென்றது குறித்து சவுரவ் கங்குலி போட்ட ட்வீட் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X