For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

4 நாள் கிரிக்கெட் முட்டாள்தனமானது... யாரும் விரும்ப மாட்டார்கள் - சோயிப் அக்தர்

இஸ்லாமாபாத் : ஐசிசியின் 4 நாட்கள் டெஸ்ட் கிரிக்கெட் குறித்த திட்டம் பயனற்றது என்றும் அதை யாரும் விரும்ப மாட்டார்கள் என்று பாகிஸ்தான் முன்னாள் பந்துவீச்சாளர் சோயிப் அக்தர் தெரிவித்துள்ளார்.

பிசிசிஐயின் ஒப்புதல் இல்லாமல் இந்த திட்டத்தை ஐசிசி செயல்படுத்த முடியாது என்று தெரிவித்துள்ள அக்தர், பிசிசிஐயின் தலைவர் சவுரவ் கங்குலி புத்திசாலி என்றும் அவர் டெஸ்ட் கிரிக்கெட் அழியவிட மாட்டார் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தன்னுடைய யூடியூப் சேனலில் பேசியுள்ள அக்தர், ஐசிசியின் இந்த திட்டத்திற்கு இந்தியா, இலங்கை மற்றும் பாகிஸ்தான் வீரர்கள் எதிர்ப்பு தெரிவித்து பேச முன்வர வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

4 நாள் டெஸ்ட் போட்டி

4 நாள் டெஸ்ட் போட்டி

டெஸ்ட் கிரிக்கெட்டிற்கான ரசிகர்களின் ஆதரவு குறைந்துள்ளதை காரணம் காட்டி பகலிரவு டெஸ்ட் போட்டிகளை அறிமுகம் செய்துள்ள ஐசிசி தற்போது, 5 நாட்கள் உள்ள டெஸ்ட் கிரிக்கெட்டை 4 நாட்களாக குறைக்கும் திட்டத்தை அறிவித்துள்ளது.

பாரம்பரியத்தை மாற்ற வீரர்கள் எதிர்ப்பு

பாரம்பரியத்தை மாற்ற வீரர்கள் எதிர்ப்பு

ஐசிசியின் இந்த திட்டத்திற்கு கிரிக்கெட் ஆஸ்திரேலியா வரவேற்பு தெரிவித்துள்ள நிலையில், ஆஸ்திரேலியாவின் மூத்த வீரர்கள் நாதன்லயன் உள்ளிட்டவர்களே இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த திட்டம் முட்டாள்தனமானது என்றும் பாரம்பரியத்தை மாற்றக்கூடாது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

சச்சினும் எதிர்ப்பு

சச்சினும் எதிர்ப்பு

இந்த புதிய அறிவிப்பிற்கு கேப்டன் விராட் கோலி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மேலும் சச்சின் டெண்டுல்கர், கவுதம் கம்பீர், க்ளென் மெக்கிராத், மற்றும் ரிக்கி பாண்டிங் உள்ளிட்ட முன்னாள் கிரிக்கெட் வீரர்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

ஐசிசி திட்டத்திற்கு எதிர்ப்பு

ஐசிசி திட்டத்திற்கு எதிர்ப்பு

இந்நிலையில் பாகிஸ்தான் முன்னாள் பந்துவீச்சாளர் சோயிப் அக்தர், ஐசிசியின் இந்த 4 நாள் டெஸ்ட் போட்டி குறித்து தனது அதிருப்தியை பதிவு செய்துள்ளார்.

முட்டாள்தனமானது -சோயிப்

முட்டாள்தனமானது -சோயிப்

இந்த திட்டம் முட்டாள்தனமானது என்று தெரிவித்துள்ள அக்தர், இந்த திட்டத்தை வீரர்கள், ரசிகர்கள் யாரும் விரும்ப மாட்டார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

"பிசிசிஐ ஒப்புதல் அளிக்கக் கூடாது"

இந்த திட்டத்தை பிசிசிஐயின் ஒப்புதலின்றி ஐசிசி செயல்படுத்தாது என்று தெரிவித்துள்ள அக்தர், பிசிசிஐ தலைவராக உள்ள கங்குலி புத்திசாலி என்றும் அவர் இந்த திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க மாட்டார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

கங்குலி குறித்து அக்தர்

கங்குலி குறித்து அக்தர்

புத்திசாலியான கங்குலி ஐசிசியின் இந்த 4 நாள் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கு ஒப்புதல் அளித்து டெஸ்ட் கிரிக்கெட் அழிய காரணமாக இருக்க மாட்டார் என்றும் அவர் கூறியுள்ளார்.

பாகிஸ்தான் மூத்த வீரர்கள் எதிர்க்க கோரிக்கை

பாகிஸ்தான் மூத்த வீரர்கள் எதிர்க்க கோரிக்கை

ஐசிசியின் இந்த திட்டத்திற்கு இந்தியா, பாகிஸ்தான் மற்றும் இலங்கை வீரர்கள் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்றும் பாகிஸ்தானின் மூத்த வீரர்கள் எதிர்த்து பேச வேண்டும் என்றும் அக்தர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Story first published: Monday, January 6, 2020, 14:15 [IST]
Other articles published on Jan 6, 2020
English summary
Former Pakistan Pacer Shoaib Akhtar Request Ganguly to not let Test Cricket Die
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X