For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஓமைக்கரான் வைரசால் ஆபத்து.. வீரர்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமா பி.சி.சி.ஐ??

மும்பை: கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அனைத்து விளையாட்டு வீரர்களுமே பயோ பபுள் என்ற கடுமையான விதிகளில் உள்ளனர்.

இந்தியாவை சேர்ந்த கிரிக்கெட் வீரர்கள், தங்களது அணிக்கு திரும்ப வேண்டும் என்றால் 6 நாட்கள் வரை குவாரண்டைனில் இருக்க வேண்டும் என்ற விதி இருந்தது.

ஆனால், இந்த விதிகளை மாற்றிய பி.சி.சி.ஐ. 6 நாட்கள் இருந்த குவாரண்டைனை மூன்று நாட்களாக குறைத்தது.

பஞ்சாப் கொடுத்த 14 கோடி நல்லா வேலை செய்யுது..!! இந்திய அணியை காப்பாற்றிய மாயங்..!!பஞ்சாப் கொடுத்த 14 கோடி நல்லா வேலை செய்யுது..!! இந்திய அணியை காப்பாற்றிய மாயங்..!!

கொரோனா

கொரோனா

இதனிடையே பி.சி.சி.ஐ. நடத்தும் சேலஞ்சர்ஸ் டிராபி தொடரில் வீரர்கள் சிலருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. வீரர்கள் மற்றும் அணியின் பெயர் விவரத்தை விடுவிக்காத பி.சி.சி.ஐ., அவர்களை தணிமைப்படுத்தியுள்ளது.

விதியில் மாற்றம்

விதியில் மாற்றம்

தற்போது ஓமைக்கரான் போன்ற புதிய கொரோனா வைரஸ்கள் உலகையே அச்சுறுத்தி வருகிறது. அதன் தன்மை எப்படி இருக்கும், எத்தனை நாட்கள் கழித்து அறிகுறிகள் தெரியும் என்று தெரியாத நிலையில், பி.சி.சி.ஐ. தனிமைப்படுத்திகொள்ளும் நாட்களை குறைத்துள்ளது அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

கோரிக்கை

கோரிக்கை

இதனிடையே, விஜய் ஹசாரோ கோப்பை, ரஞ்சி கோப்பை என அடுத்தடுத்து கிரிக்கெட் போட்டிகள் நடைபெற உள்ளதால் பி.சி.சி.ஐ. முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. அதே வேளையில், ரஞ்சி கோப்பை போன்ற நெடுந்தொடரில் வீரர்கள் பயோ பபுளில் இருந்தால், அது அவர்களின் மனதை பாதிக்கும் என்பதால், ரஞ்சி கோப்பையின் போட்டிகளை குறைக்க வேண்டும் என்று கருத்தும் முன்வைக்கப்படுகிறது.

Recommended Video

Omicron-க்கு எதிராக Covishield, Covaxin வேலை செய்யுமா? | Oneindia Tamil
அச்சுறுத்தல்

அச்சுறுத்தல்

தென்னாப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய ஏ அணி தொடர்ந்து அங்கு அச்சுறுத்தலை மீறியும் விளையாடி வருகிறது. அவர்கள் நாடு திரும்பினால், அந்த வீரர்களை எப்படி கையாள வேண்டும், அவர்களை எத்தனை நாள் தனிமைப்படுத்தி வைக்க வேண்டும் போன்ற விதிகளை தற்போது பி.சி.சி.ஐ. வகுக்க வேண்டும் என்றும் கிரிக்கெட் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

Story first published: Saturday, December 4, 2021, 13:30 [IST]
Other articles published on Dec 4, 2021
English summary
BCCI Quarantine rules Changed as New variant concern arises. BCCI Changed 6 days in to 3 days as Mandatory Quarantine rules.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X