For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

புதிய பயிற்சியாளராக இலங்கையின் ஜாம்பவான்.. பிசிசிஐ திவீர பேச்சுவார்த்தை.. எட்டப்பட்ட முடிவு என்ன?

மும்பை: இந்திய அணியின் அடுத்த பயிற்சியாளர் பதவிக்காக இலங்கை அணியின் முன்னாள் வீரரை நியமிக்க பிசிசிஐ அனுகியுள்ளது.

Recommended Video

முடிவுக்கு வரும் பதவிக்காலம்.. BCCI-க்கு நோ சொன்ன Ravi Shastri

டி20 உலகக்கோப்பை தொடருடன் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து ரவி சாஸ்திரி விலகவுள்ளார்.

இதனால் அடுத்த தலைமை பயிற்சியாளராக யார் நியமிக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பு தான் ரசிகர்களை சூழ்ந்துள்ளது.

கோலியா? பண்ட்-ஆ? ரவிசாஸ்திரி போட்ட சூசக ட்வீட்.. குழப்பத்தில் ஆழ்ந்த ரசிகர்கள்! கோலியா? பண்ட்-ஆ? ரவிசாஸ்திரி போட்ட சூசக ட்வீட்.. குழப்பத்தில் ஆழ்ந்த ரசிகர்கள்!

அடுத்த பயிற்சியாளர் யார்?

அடுத்த பயிற்சியாளர் யார்?

இலங்கை தொடருக்கு பயிற்சியாளராக பணியாற்றியதன் மூலம் ராகுல் டிராவிட் தான் அடுத்த தலைமை பயிற்சியாளராக இருப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதில் அவருக்கு விருப்பமில்லை எனத் தெரிவித்துவிட்டார். எனவே அதற்கான அடுத்தகட்ட பேச்சுவார்த்தைகளில் பிசிசிஐ தீவிரம் காட்டி வருகிறது.

 மீண்டும் கும்ளே?

மீண்டும் கும்ளே?

டிராவிட் இல்லையென்றால், அடுத்த தேர்வாக இந்திய முன்னாள் வீரர்கள் அனில் கும்ளே அல்லது விவிஎஸ் லக்‌ஷ்மண் ஆகியோரிடமும் பேச்சுவார்த்தைகள் நடத்தப்படவுள்ளது. அனில் கும்ப்ளே ஏற்கனவே இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்தவர். இதே போல லக்‌ஷ்மணுக்கு பயிற்சியாளர் ஆகும் ஆர்வம் இருப்பதாக கூறப்படுகிறது. எனவே இவர்கள் இருவரின் பக்கமும் ரசிகர்களின் கவனம் இருந்து வந்தது.

இலங்கை முன்னாள் வீரர்

இலங்கை முன்னாள் வீரர்

இந்நிலையில் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு இலங்கையை சேர்ந்த முன்னாள் ஜாம்பவான் ஒருவரிடம் பிசிசிஐ பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது தெரியவந்துள்ளது. சர்வதேச போட்டிகளில் பேட்டிங் மன்னனாக திகழ்ந்த மஹிலா ஜெயவர்தனே தான். ஆனால் பிசிசிஐ-ன் கோரிக்கையை ஜெயவர்தனே ஏற்கவில்லை. தான், தற்போது இருக்கும் பணிகளே சிறப்பாக உள்ளது என்றும், அதனை மட்டுமே செய்ய விரும்புவதாகவும் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

வெற்றிகரமான பயிற்சியாளர்

வெற்றிகரமான பயிற்சியாளர்

மஹிலா ஜெயவர்தனே தற்போது இலங்கையின் 19வயதுக்கு உட்பட்டோருக்கான அணியின் ஆலோசகராகவும், ஐபிஎல்-ல் மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராகவும் பணியாற்றி வருகிறார். ஜெயவர்தனேவின் பயிற்சியில் மும்பை அணி 5 முறை கோப்பையை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Story first published: Saturday, September 18, 2021, 15:36 [IST]
Other articles published on Sep 18, 2021
English summary
BCCI reached out to Mahela Jayawardena for team india's head coach Post
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X