For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

2024-2027ஆம் ஆண்டு வரை இந்தியா பங்கேற்கும் கிரிக்கெட் தொடர்.. கோலி, ரோகித் ஓய்வு பெறும் தொடர் எது ?

இந்திய கிரிக்கெட் அணி 2027ஆம் ஆண்டு வரை பங்கேற்க உள்ள போட்டிகள் தொடர்பான அட்டவணையை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.

Recommended Video

India அணியின் கேப்டன் Rohit Sharma ODI Cricket விமர்சனம் பற்றி பதிலடி *Cricket

இதில், இந்திய அணி 5 ஆண்டுகளில் 44 டெஸ்ட், 63 ஒருநாள் கிரிக்கெட் மற்றும் 76 டி20 போட்டிகளில் விளையாடிகிறது.

ஏற்கனவே அடுத்த ஆண்ட இறுதி வரை உள்ள அட்டவணையை கடந்த செய்தியில் பார்த்த நிலையில் 2024ஆம் ஆண்டு முதல் 2027ஆம் ஆண்டு வரை உள்ள அட்டவணை மிகவும் முக்கியமாகவும் பார்க்கப்படுகிறத. இந்த அட்டவணையில் உள்ள ஏதேனும் ஒரு தொடரில் கோலி, ரோகித் சர்மா, ஆகியோர் ஓய்வு பெறலாம்.

இன்று அதிரடி சரவெடி தான்.. ரன் குவிப்புக்கு சாதகமான ஆடுகளம்.. இந்திய வீரர்களிடையே கடும் போட்டிஇன்று அதிரடி சரவெடி தான்.. ரன் குவிப்புக்கு சாதகமான ஆடுகளம்.. இந்திய வீரர்களிடையே கடும் போட்டி

2024 டி20 உலககோப்பை

2024 டி20 உலககோப்பை

2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இறுதியிலிருந்து மார்ச் வரை இந்திய அணி தனது சொந்த மண்ணில் இங்கிலாந்தை ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதன் பிறகு ஜூன் மாதம் டி20 உலக கோப்பையிலும் ஜூலை மாதம் இலங்கைக்குச் சென்று மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் இந்தியா பங்கேற்கிறது. பின்னர் செப்டம்பர் மாதம் வங்கதேசத்தை தனது சொந்த மண்ணில் இரண்டு டெஸ்ட் போட்டி மற்றும் மூன்று டி20 போட்டிகளில் இந்தியா மோதுகிறது.

2025 சாம்பியன்ஸ் கோப்பை

2025 சாம்பியன்ஸ் கோப்பை

இதனைத் தொடர்ந்து 2024 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு செல்லும் இந்திய அணி முதல் முறையாக 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. 2025 ஆம் ஆண்டுக்கான அட்டவணையில் இந்திய அணி தனது சொந்த மண்ணில் இங்கிலாந்தை 3 ஒரு நாள் மற்றும் ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடரில் மோதுகிறது. இதன்பிறகு பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் பிப்ரவரி மாதம் இந்தியா பங்கேற்கிறது.

2025 இங்கிலாந்து பயணம்

2025 இங்கிலாந்து பயணம்

அதன் பிறகு 2025 ஜூன் மாதம் இங்கிலாந்து செல்லும் இந்திய அணி 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. அதன் பிறகு ஆகஸ்ட் மாதம் வங்கதேசம் செல்லும் இந்திய அணி மூன்று ஒரு நாள் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் பங்கேற்கிறது. அதன் பிறகு 2025 செப்டம்பர் மாதம் ஆசிய கோப்பை தொடரில் விளையாடும் இந்திய அணி அக்டோபர் மாதம் தனது சொந்த மண்ணில் வெஸ்ட் இண்டீஸ் உடன் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது.

தென்னாப்பிரிக்காவுடன் தீபாவளி

தென்னாப்பிரிக்காவுடன் தீபாவளி

மீண்டும் 2025 அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியா செல்லும் இந்திய அணி மூன்று ஒரு நாள் மற்றும் ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதன் பிறகு சொந்த மண்ணில் நவம்பர் மாதம் இறுதியில் தென்னாப்பிரிக்காவை இந்திய அணி எதிர்கொள்கிறது. இதில் இரண்டு டெஸ்ட் போட்டி மற்றும் 3 ஒரு நாள் மற்றும் ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடர் இந்தியா விளையாடுகிறது.

2026 டி20 உலககோப்பை

2026 டி20 உலககோப்பை

2026 ஆம் ஆண்டு இந்திய அணி நியூசிலாந்தை தனது சொந்த மண்ணில் மூன்று ஒரு நாள் மற்றும் ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடரில் மோதுகிறது. இதன்பிறகு பிப்ரவரி மாதம் டி20 உலக கோப்பையில் இந்தியா விளையாடுகிறது. அதனைத் தொடர்ந்து ஜூன் மாதம் இந்திய அணி தனது சொந்த மண்ணில் ஆப்கானிஸ்தானுடன் ஒரு டெஸ்ட் மற்றும் 3 ஒரு நாள் போட்டி கொண்ட தொடரில் மோதுகிறது. இதன் பிறகு இங்கிலாந்து செல்லும் இந்திய அணி ஜூலை மாதம் 3 ஒரு நாள் மற்றும் ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.

2026 நியூசிலாந்து பயணம்

2026 நியூசிலாந்து பயணம்

அதன்பிறகு அங்கிருந்து இலங்கை செல்லும் இந்திய அணி இரண்டு டெஸ்டில் பங்கேற்கிறது. செப்டம்பர் மாதம் ஆப்கானிஸ்தானுடன் மூன்று டி20 போட்டியிலும் அங்கிருந்து வெஸ்ட் இண்டீஸ் சென்று மூன்று ஒருநாள் மற்றும் ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடரிலும் இந்தியா விளையாடுகிறது. இதனை தொடர்ந்து நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி இரண்டு டெஸ்ட் 3 ஒரு நாள் மற்றும் ஐந்து t20 போட்டிகள் கொண்ட நெடுந்தொடரில் பங்கேற்கிறது. இதன்பிறகு இலங்கையை தனது சொந்த மண்ணில் மூன்று ஒரு நாள் மற்றும் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா விளையாடுகிறது. 2027 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மீண்டும் ஆஸ்திரேலியா தனது சொந்த மண்ணில் இந்தியா ஐந்து டெஸ்ட்போட்டிகள் கொண்ட தொடரில் மோதுகிறது.

Story first published: Friday, August 19, 2022, 23:42 [IST]
Other articles published on Aug 19, 2022
English summary
BCCI Releases Future tour Program till 2027 – Full schedule is here2024-2027ஆம் ஆண்டு வரை இந்தியா பங்கேற்கும் கிரிக்கெட் தொடர்.. கோலி, ரோகித் ஓய்வு பெறும் தொடர் எது ?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X