For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இந்த நாள் ஞாபகம் இருக்கா..? 29 வருஷத்துக்கு முன்னாடி…! சச்சின் பற்றி சினிமா வசனம் பேசிய பிசிசிஐ

மும்பை: 29 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் ஜாம்பவான் சச்சின், டெஸ்ட் கிரிக்கெட்டில் அடித்த முதல் சதத்தை டுவிட்டர் மூலம் பிசிசிஐ நினைவுபடுத்தி உள்ளது.

கிரிக்கெட்டின் ஜாம்பவான், மாஸ்டர் பிளாஸ்டர் என அழைக்கப்படும் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் சர்வதேச கிரிக்கெட்டில் படைத்துள்ள சாதனைகள் பல. 1989ம் ஆண்டு 16 வயதில் சர்வதேச கிரிக்கெட்டில் அடியெடுத்து வைத்தார் சச்சின்.

Bcci reminds master blaster sachin’s first test century

சர்வதேச கிரிக்கெட்டில் மொத்தம் 100 சதங்களை அள்ளியவர். 51 சதங்கள் டெஸ்ட் கிரிக்கெட்டிலும், 49 சதங்கள் ஒருநாள் கிரிக்கெட்டிலும் எடுத்தவர். 2013ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து சச்சின் ஓய்வு பெற்றார்.

இந்நிலையில் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் சச்சின் அடித்த முதல் சதம் குறித்த பிசிசிஐ ட்விட்டர் பக்கத்தில் நினைவு கூர்ந்துள்ளது. 1990ம் ஆண்டு ஆகஸ்ட் 14ம் தேதி இங்கிலாந்தில் உள்ள ஓல்ட் ட்ராபோர்ட் மைதானத்தில் இங்கிலாந்து மற்றும் இந்தியாவுக்கு இடையேயான டெஸ்ட் போட்டி நடைபெற்றது.

அந்த போட்டியில் 117 ரன்கள் எடுத்து சர்வதேச கிரிக்கெட்டில் சச்சின் தமது முதல் சதத்தை பதிவு செய்தார். அந்த சதத்தை 189 பந்துகளில் 17 பவுண்டரிகள் விளாசி எட்டினார். அந்த சாதனையை சச்சின் படைத்த போது அவருக்கு வயது 17 என்பது தான் பிசிசிஐ தற்போது குறிப்பிடும் முக்கிய செய்தி.

Story first published: Wednesday, August 14, 2019, 16:59 [IST]
Other articles published on Aug 14, 2019
English summary
Bcci reminds master blaster sachin’s first test century.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X